அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்


 1. CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020). | CLICK HERE
 2. CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY MATERIALS DOWNLOAD. (OLD SYLLABUS). | CLICK HERE
 3. CLASS 11 (11TH STANDARD / HSC - PLUS ONE) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020). | CLICK HERE
 4. CLASS 11 (11TH STANDARD / HSC - PLUS ONE) STUDY MATERIALS DOWNLOAD. (OLD SYLLABUS). | CLICK HERE
 5. CLASS 12 (12TH STANDARD / HSC - PLUS TWO) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020). | CLICK HERE
 6. CLASS 12 (12TH STANDARD / HSC - PLUS TWO) STUDY MATERIALS DOWNLOAD. (OLD SYLLABUS). | CLICK HERE
 7. TNPSC STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 8. TRB STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 9. TET STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 10. NEET STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 11. JEE STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 12. TNUSRB STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 13. OTHER STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 14. ONLINE TEST (NEW) | CLICK HERE
 15. AUDIO MATERIALS IN TAMIL (NEW) | CLICK HERE
 16. TEXT BOOKS DOWNLOAD | CLICK HERE
 1. FLASH NEWS

 2. EDU NEWS

 3. TNPSC NEWS

 4. TET NEWS

 5. TRB NEWS

 6. COLLEGE NEWS

 7. GENERAL NEWS

 8. EMPLOYMENT NEWS

 9. PAY AUTHORIZATION ORDER FOR SCHOOL EDUCATION DEPT

 10. PROMOTION PANEL 2014 FOR SCHOOL EDUCATION DEPT

 11. SSLC EXAM TIME TABLE | PLUS 2 EXAM TIME TABLE | UNIVERSITY TIME TABLE

 12. TRB RESULT | TET RESULT | TNPSC RESULT | SSLC RESULT | PLUS 2 RESULT | CTET RESULT | UNIVERSITY RESULT

 13. TAMIL FONTS DOWNLOAD

 14. FORMS RELATED TO SCHOOL EDUCATION DEPT

 15. ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

 16. RH 2014

 17. TEXT BOOKS ONLINE

 18. AUDIO MATERIALS ONLINE

 19. ONLINE TEST FOR PLUS TWO

 20. ONLINE TEST FOR COMPETITIVE EXAMS

 21. TRB ANSWER KEY | TET ANSWER KEY | TRB ANSWER KEY | TNPSC ANSWER KEY | UGC ANSWER KEY | SSLC ANSWER KEY | PLUS TWO ANSWER KEY | CTET ANSWER KEY

 22. SSLC STUDY MATERIALS

 23. SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.

 24. PLUS TWO STUDY MATERIALS

 25. PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.

 26. TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

 27. TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

 28. TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

 29. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

 30. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

 31. Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

 32. Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

 33. Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

 34. Subscribe to get Kalvisolai News Daily Via your Email

 35. Subscribe to get SSLC,PLUS TWO,TNPSC,TET,TRB STUDY MATERIALS Via your Email

 36. www.video.kalvisolai.com

 37. www.music.kalvisolai.com

 38. கல்விச்சோலை | கட்டுரைகள்

 39. கல்விச்சோலை | அரசாணைகள்

EMIS ONLINE T.C SOME COMMON PERSONAL IDENTIFICATION MARK

 1. CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020). | CLICK HERE
 2. CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY MATERIALS DOWNLOAD. (OLD SYLLABUS). | CLICK HERE
 3. CLASS 11 (11TH STANDARD / HSC - PLUS ONE) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020). | CLICK HERE
 4. CLASS 11 (11TH STANDARD / HSC - PLUS ONE) STUDY MATERIALS DOWNLOAD. (OLD SYLLABUS). | CLICK HERE
 5. CLASS 12 (12TH STANDARD / HSC - PLUS TWO) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020). | CLICK HERE
 6. CLASS 12 (12TH STANDARD / HSC - PLUS TWO) STUDY MATERIALS DOWNLOAD. (OLD SYLLABUS). | CLICK HERE
 7. TNPSC STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 8. TRB STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 9. TET STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 10. NEET STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 11. JEE STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 12. TNUSRB STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 13. OTHER STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 14. ONLINE TEST (NEW) | CLICK HERE
 15. AUDIO MATERIALS IN TAMIL (NEW) | CLICK HERE
 16. TEXT BOOKS DOWNLOAD | CLICK HERE

அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் இடமாற்றத்தில் குளறுபடி: விதிகளை மீறி 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு


 1. CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020). | CLICK HERE
 2. CLASS 10 (10TH STANDARD / SSLC) STUDY MATERIALS DOWNLOAD. (OLD SYLLABUS). | CLICK HERE
 3. CLASS 11 (11TH STANDARD / HSC - PLUS ONE) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020). | CLICK HERE
 4. CLASS 11 (11TH STANDARD / HSC - PLUS ONE) STUDY MATERIALS DOWNLOAD. (OLD SYLLABUS). | CLICK HERE
 5. CLASS 12 (12TH STANDARD / HSC - PLUS TWO) STUDY MATERIALS DOWNLOAD. (NEW SYLLABUS FOR MARCH 2020). | CLICK HERE
 6. CLASS 12 (12TH STANDARD / HSC - PLUS TWO) STUDY MATERIALS DOWNLOAD. (OLD SYLLABUS). | CLICK HERE
 7. TNPSC STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 8. TRB STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 9. TET STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 10. NEET STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 11. JEE STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 12. TNUSRB STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 13. OTHER STUDY MATERIALS (NEW) | CLICK HERE
 14. ONLINE TEST (NEW) | CLICK HERE
 15. AUDIO MATERIALS IN TAMIL (NEW) | CLICK HERE
 16. TEXT BOOKS DOWNLOAD | CLICK HERE

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி: அரசாணை வெளியீடு

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி: அரசாணை வெளியீடு

தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!

தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும்,  SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!

என்னான்னு கேக்குறீங்களா..  11-வது Chemistry,  Physics new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையா, புரியும்படியா video lessons பண்ணிருக்காங்க.

sema work.  extraordinary plan.  conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.

English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.

இந்தாப்பா... இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.

வாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும்.

TN SCERT .. அப்பிடீங்ற  You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.

இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.

freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.

கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விஷயம் போய்ச் சேரவேயில்லை.

ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.

whatsapp, face book media வுல share பட்டன அழுத்துங்க.

பிடிச்சதோ,பிரச்சினையோ உடனே share பண்ணுறோம்ல.
அதே போல இதையும் share பண்ணுங்க.

இனி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல நல்ல கல்வியும், மருத்துவமும், பொறியியலும், உயர் கல்வியும்.

ஒவ்வொரு மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.

Kindly SHARE to all.🙏🙏🙏🙏🙏

https://www.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw/playlists

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி , முதற்கட்ட மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

பணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.

பணி பதிவேட்டில் குறிப்பிட்டதை விட ஆசிரியர்களின் பெயரில் அதிக சொத்து இருந்தால் நடவடிக்கை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பணி பதிவேட்டில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும், அவர்களது பெயரில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆதார் இணைப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வருகையை கண்காணிக்க 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவேடு முறை கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டது. இந்த பயோ மெட்ரிக்குடன், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களின் ஆதாரையும் இணைக்க அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்.அன்னாள் என்ற ஆசிரியை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:- அரசின் பிரதிநிதிகள் தமிழக அரசு ஊழியர்களுக்கு, தமிழக அரசு தான் முதலாளி. பொதுநிர்வாகத்தை மேம்படுத்த 'பயோமெட்ரிக்' திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசின் பிரதிநிதியாக அரசு ஊழியர்கள் திகழ்வதால், அவர்களது ஆதாரை 'பயோ மெட்ரிக்' வருகை பதிவேட்டில் சேர்ப்பது ஒன்றும் விதிமீறல் இல்லை. தனிநபர் சுதந்திரம் என்பது கூட நிபந்தனைக்கு உட்பட்டதுதான். இப்போது அரசு ஊழியர்கள் மத்தியில் ஒழுங்கீனம் அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய தமிழக அரசு இதுபோன்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்க முடியாது பொதுவாக அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவது இல்லை என்றும், பணி நேரத்துக்கு முன்பாக பள்ளியில் இருந்து சென்று விடுகின்றனர் என்றும் ஆசிரியர் பணிக்கு தொடர்பில்லாத வேறு வேலைகளை அவர்கள் செய்து வருகின்றனர் என்றும் பல புகார்கள் வருகின்றன. எனவே, அவர்களது வருகையையும், பணி நேரத்தையும் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் இதுபோன்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற திட்டத்தை அரசு கொள்கை முடிவு அடிப்படையில் கொண்டு வரும்போது, அதை ஆசிரியர்கள் எதிர்க்க முடியாது. மனுதாரரிடம் ஆதார் இல்லை என்றால், அதை விண்ணப்பித்து பெறவேண்டும். ஒருவேளை மனுதாரர் ஆதார் அட்டையை பெற விரும்பவில்லை என்றால், அவர் தொடர்ந்து ஆசிரியர் பணியை தொடர்வதா? அல்லது அப்பதவியை விட்டு விலகுவதா? என்பது குறித்து முடிவு செய்யவேண்டும். வரிப்பணத்தில் ஊதியம் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அதிகம் பேர் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சிப்பெறுகின்றனர். இத்தனைக்கும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. அவர்கள் அதிகநேரம் பணியாற்றுகின்றனர். ஆனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர். ஆனால், மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தில் அரசு பள்ளிகள் மோசமாக உள்ளது. இது வரி செலுத்தும் மக்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் செலுத்தும் வரியின் மூலம் ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள், அனைத்து கல்வித் தகுதிகளையும் கொண்டிருந்தும், மாணவர்களுக்கு கல்வியை சிறப்பாக கற்பிப்பது இல்லை. அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு பெரும் தொகையை ஆண்டுதோறும் வழங்குகிறது. அப்படி இருந்தும், சிறந்த கல்வி மாணவர்களுக்கு கிடைப்பது இல்லை. மாணவர்களின் முன்மாதிரியாக ஆசிரியர்கள் திகழவேண்டும். மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கிறேன். பயோ மெட்ரிக் வருகை பதிவேட்டுடன், ஆதாரை இணைக்கும் திட்டத்தை தமிழக கல்வித்துறை விரைவாக அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பதவி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் விதிகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும். அப்போதுதான், கல்வி முறையில் ஆசிரியர்களின் திறமையை வளர்க்க முடியும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் விவரங்களை தமிழக கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். இதில் பணி பதிவேட்டில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும், ஆசிரியர்களின் பெயரில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால், அதாவது அதிக சொத்து இருந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் மூலம் மேற்கொள்ள வேண்டும். துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, அந்த வழக்கையும் முடித்து வைத்தார்.  

கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம்

கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் வினியோகம் மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கினர் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் சேர விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங் கியது. மாணவ- மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. தேர்வு முடிவு வெளியிடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கல்லூரிகளில் நேற்று விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 518 தனியார் கல்லூரிகள், 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இதில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. விண்ணப்பம் வினியோகம் இந்த கல்லூரிகளில் நேற்று காலை முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள் ரூ.2-ம், பிற பிரிவு மாணவ-மாணவிகள் ரூ.50-ம் செலுத்தி விண்ணப்பங்களை வாங்கினர். இன்னும் 2 வாரங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். சென்னை அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியிலும் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு மொத்த மதிப்பெண் 1,200 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 600 மதிப்பெண் களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இனிவரக்கூடிய காலங்களிலும் இதேமுறை தான் பின்பற்றப்பட இருக்கிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங் களை தவிர, பிற பாடப்பிரிவுகளுக்கு 400 மதிப்பெண்கள் அடிப்படையில் தயார் செய்து வெளியிடப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பி.காம் படிப்புக்கு கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது. விண்ணப்பங்களை பெற வந்திருந்த பெரும்பாலான மாணவிகள் பி.காம் படிப்பையே தேர்வு செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.  

பிளஸ் 2 முடிவு திட்டமிட்டபடி ஏப். 19-ல் வெளியீடு அரசு தேர்வுத்துறை மீண்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்ட மிட்டபடி ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ல் முடிவடைந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ-மாணவி யர், தனித்தேர்வர்கள் தேர்வெழு தியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 20-ம் தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் 75-க்கும் மேற்பட்ட மையங்களில் ஏறத்தாழ 45,000 முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டனர். முன்கூட்டியே அறிவிப்பு பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கு வதற்கு முன்பாக தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், மக்களவைத் தேர்தல் பணி, ஏப்ரல் 19-ம் தேதி புனித வெள் ளிக்கிழமையாக இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றியமைக்கப்படலாம் என்று சந்தேகம் மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வந்தது. எனினும் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுத்துறை சார்பில் அவ்வப் போது விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வுத் துறை மீண்டும் அதிகாரப்பூர்வமாக ஓர் அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த ஆய்வை (அனலிசிஸ்) தேர்வுத் துறையின் இணையதளத்தில் ஏப்ரல் 19-ம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 9.30 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே பிளஸ் 2 தேர்வு முடிவுகள், தேர்ச்சி விவரங்கள் அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் வெளியிடப்படுவது இல்லை. தேர்வு முடிவுகள் அடங்கிய விவரங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குறுஞ்செய்தியில் முடிவுகள் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வெழுதிய அனைத்து மாணவ-மாணவியரின் செல்போன் எண் ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடமும் 200 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் முறையாக 100 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்டது. அதோடு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித்தாள் தேர்வுகள் முன்பு போல 2 தாள்களாக இல்லாமல் ஒரே தாளாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 965 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.05.2019. இணைய முகவரி : www.upsc.gov.in

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 965 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.05.2019. இணைய முகவரி : www.upsc.gov.in 
மத்திய அரசு துறைகளில் 965 மருத்துவ அதிகாரி பணியிடங்கள் மத்திய அரசு துறைகளில் மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 965 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர் வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. மத்திய அரசு துறைகளின் பல்வேறு உயர் பொறுப்புகளை இந்த அமைப்பு தேர்வு நடத்தி நியமனம் செய்து வருகிறது. தற்போது மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த மருத்துவ சேவைப் பணிகள் தேர்வு 2019 எனப்படும் இந்த தேர்வு மூலம் உதவி டிவிஷன் மருத்துவ அதிகாரி, துணை பொது மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 965 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பிரிவு வாரியான பணியிட விவரம் : உதவி டிவிஷனல் மருத்துவ அதிகாரி -300 பேர், உதவி மருத்துவ அதிகாரி - 46 பேர், ஜூனியர் சென்டிரல் கெல்த் சர்வீஸஸ் -25, துணை பொது மருத்துவ அதிகாரி (கிரேடு2) -362 பேர், டெல்லி நகர கவுன்சில் மருத்துவ அதிகாரி -7 பேர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு.. வயது வரம்பு விண்ணப்பதாரர்கள், 1-8-2019-ந் தேதியில் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1987-க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், நேர்காணல் மற்றும் ஆளுமைத் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். கட்டணம் விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திற னாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இணையதளம் மற்றும் வங்கி வழியாக கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மே 6-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இதற்கான தேர்வு 21-7-2019-ந்தேதி நடைபெறுகிறது. தேர்வு முடிவு செப்டம்பர்-அக்டோபரில் வெளியாகும். அதன் பிறகு நேர்காணல் தேதி அறிவிக்கப்படும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.  

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in

SBI RECRUITMENT 2019 | SBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 8,904 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.05.2019. இணைய முகவரி : www.sbi.co.in 
ஸ்டேட் வங்கியில் 8,904 கிளார்க் பணிகள் ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 904 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியாவின் பிரபலமான பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.). ஸ்டேட் வங்கி என அழைக்கப்படும் இந்த வங்கி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்படுகிறது. மற்ற பொதுத்துறை வங்கிகள், வங்கி பொது எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஸ்டேட் வங்கி மட்டும் தனியே தேர்வு நடத்தி பணியாளர்களை நியமித்து வருகிறது. கடந்த வாரம் புரபெசனரி அதிகாரிகளுக்கான தேர்வை அறிவித்து இருந்தது. தற்போது கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 904 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 1-4-2019-ந் தேதியில் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 28 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். கட்டணம் பொதுப் பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.125 கட்டணம் செலுத்தினால் போதுமானது. நெட்பேங்கிக் மற்றும் டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் கட்டணம் செலுத்தவும் மே 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதமும், முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10-ந்தேதியும் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் இன்று வெளியீடு 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப் பித்த மாணவ, மாணவிகள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித் துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-10-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி நடக்கிறது. தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடுமுழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங் களில் இன்று பதிவேற்றம் செய் யப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவி கள் இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத் தில் 14 நகர்கள் உட்பட நாடுமுழுவதும் 154 நகரங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்சாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் காலியாக இல்லை என்றால் வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.  

எமிஸ் இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை பள்ளிக்கல்வி துறை உத்தரவு 

பள்ளி கல்வித்துறை இயக் குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நடப்பாண்டு முதல் கல்வியாண்டின் இறுதி லேயே (ஏப்.1) அனைத்து வித மான பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கி பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத் தில் அனைத்து வகை பள்ளி களிலும் புதிய மாணவர்கள் சேர்க்கை, பழைய மாணவர் களின் தேர்ச்சி விவரம், வேறு பள்ளிக்கு மாற்றம் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட அனைத்து அன்றாட நடவடிக்கைகளை யும் கல்வித் தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான பணிகளை முதன்மை கல்வி அதிகாரிகள் அவ்வப்போது மேற்பார்வை செய்து, இணையதள விவரங் களை சரியாக பராமரிக்காத பள்ளிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். புதிய மாணவர் சேர்க்கையில் அரசின் வழிகாட்டுதல்கள் கட் டாயம் பின்பற்றப்படவேண்டும்.

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு இணையதளத்தில் நாளை ஹால்டிக்கெட் 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டிருப்பதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு 2019-10-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையில் 25 வயதுக்கு மேற் பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு நாடுமுழுவதிலும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் வரும் 15-ம் தேதி (நாளை) பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவி கள் இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். . நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாடுமுழுவதும் நீட் தேர்வு 154 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் சென்னை, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர் கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நடைபெறுகிறது. ஆங்கிலம், இந்தி, உருது மொழியில் நீட் தேர்வு அனைத்து நகரங்களிலும் நடைபெற உள் ளது. ஆங்கிலம் - அசாமி மொழி யில் அசாம் மாநிலத்திலும், ஆங்கிலம் - வங்காளம் மொழியில் மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலத்திலும், ஆங்கிலம் - குஜ ராத்தி மொழியில் குஜராத், டாமன் டையூ மற்றும் தாத்ரா நாகர் அவேலியிலும், ஆங்கிலம் - கன்ன டம் கர்நாடகா மாநிலத்திலும் நடை பெறுகிறது. ஆங்கிலம் - மராத்தி மொழியில் மகாராஷ்டிரா மாநிலத்திலும், ஆங்கிலம் - ஒடியா மொழியில் ஒடிசா மாநிலத்திலும், ஆங்கிலம் - தெலுங்கு மொழியில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத் திலும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் நீட் தேர்வு நடைபெறு கிறது. நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவி களுக்கு தேர்வு மையங்கள் தமி ழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.வெளிமாநிலத்தில் தேர்வு மையம் நாடுமுழுவதும் கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது தமிழக மாணவர்களுக்கு கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால், தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த விளக்குடி கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தந்தை கிருஷ்ணசாமியுடன் தேர்வு எழுதச் சென்றார். மகன் மையத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, வெளியே காத்திருந்த கிருஷ்ணசாமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இனிவரும் காலங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, "தமிழில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேநேரத்தில் ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்களில் இடம் காலியாக இல்லை என்றால் அருகில் உள்ள மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக மாணவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்வது கடினம்" என்றனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம் ஜூனில் எழுத்துத் தேர்வு நடத்த முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 5.9 லட்சம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு இரு தாள்களை கொண்டது. இந்த இரு தாள்களும் தலா 150 மதிப் பெண்களுக்கு தேர்வு நடத்தப் படும். முதல் தாளில் தேர்ச்சி பெறு பவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதி உடையவர்கள். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி 28-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதியுடன் முடிந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 5.9 லட்சம் பேர் விண் ணப்பித்துள்ளனர். தேர்வர்களின் விண்ணப்ப விவரங்களை பரி சீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. ஏப்ரல் இறுதியில் போட்டித் தேர்வு நடைபெறும் தேதி, காலி பணியிடங்கள் மற்றும் பாடத்திட் டம் குறித்த விவரங்கள் வெளியிடப் படும். ஜூன் மாதம் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்வர்களின் விண்ணப்ப விவரங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

அரசு பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து, ரோபோ மூலம் கல்வி பயிற்சி வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த பள்ளிக்கல்வி துறை திட்டம் 

மலைக் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து, ரோபோ மூலம் கல்வி பயிற்சி வரும் கல்வி ஆண்டில் செயல்படுத்த பள்ளிக்கல்வி துறை திட்டம் மலைக் கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் இலவச போக்குவரத்து வசதி அளிக்கவும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு ரோபோ மூலம் கல்விப் பயிற்சி அளிக்கவும் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை யில் பல்வேறு மாற்றங்கள் செய் யப்பட்டு வருகின்றன. அந்த வரி சையில் பின்தங்கிய கிராமப்புறங் களில் செயல்படும் அரசுப் பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியும், ரோபோ மூலம் கல்வி கற்றல் பயிற்சி அளிக்கவும் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தரமான இலவச கல்வியை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பா கும். பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்கள், பின்தங்கிய பகுதிகள் மற்றும் மலைக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் பள்ளி களுக்கு சென்றுவர முறையான போக்குவரத்து வசதிகள் இல்லா மல் சிரமப்படுவது தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரி, வேலூர் உட்பட அனைத்து மாவட்டங் களிலும் கண்டறியப்பட்ட 26 ஆயி ரம் மாணவர்கள் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளுக்கு சென்றுவர இலவச போக்குவரத்து வசதி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் களை அந்தந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு அழைத்து வர இலவச வேன் வசதி செய்து தர வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ரோபோ உதவியுடன் செயற்கை நுண்ணறிவு முறையில் கல்வி கற்கும் திட்டமும் அறிமுகம் செய் யப்பட உள்ளது. இதன் முன்னோட் டம் கடந்த ஆண்டு சென்னை உட்பட சில நகர்ப்புற பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட நிலையில், வரும் கல்வி ஆண்டில் முழுவீச்சில் ரோபோ கல்வி அமல்படுத்தப்படும். அதன்படி மாணவர்களின் பெயர், உருவப்படம் உட்பட விவரங்கள் முன்கூட்டியே ரோபோக் களில் பதிவு செய்யப்படும். இதையடுத்து வகுப்பறையில் மாணவர்களின் முகங்களை வைத்து யாரெல்லாம் வகுப்புக்கு வந்துள்ளனர் என்பதை ரோபோ பதிவு செய்து கொள்கிறது. அதன் பின்னர் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து மாணவர்கள் ஏதேனும் கேள்வி கேட்டால் அவர்கள் பெயரைக் கூறி பதில் அளிக்கும். மேலும், கேள்விக்குரிய பதிலை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரிய படங்களுடன் ரோபோ விளக்கம் தருகிறது. உதாரணமாக, அறிவியல் பாடத்தில் விண்வெளி குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினால், அதுசார்ந்த குறும்படங்களை காண்பித்து ரோபோ விளக்கும் வகையில் தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே இந்த ரோபோ கல்விமுறை நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த தனியார் நிறுவனம் மூலம் ரோபோக்கள் தயார் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக மலைப்பகுதிகளில் செயல்படும் பெரும்பாலான ஓராசிரி யர் பள்ளிகளில் ரோபோ கல்வி முறை மிகவும் உதவியாக இருக் கும். சாதராண மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் குறித்த புரிதலும் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிளஸ்-2 தேர்வு முடிவு: திட்டமிட்டப்படி 19-ந் தேதி வெளியீடு

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தொடங்கி, 19-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வு முடிவு வருகிற 19-ந் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுவதாலும், வேறு சில காரணங்களுக்காகவும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த தேதியில் இருந்து முன்னதாகவே வெளியிடப்படும் என்று வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை நம்பி சில மாணவர்களும், பெற்றோரும் அரசு தேர்வுத்துறை இணையதளத்துக்கு சென்று தேர்வு முடிவு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகி இருக்கிறதா? என்றும் தேடி பார்த்தனர். இந்த நிலையில் அரசு தேர்வுத்துறை, 'ஏற்கனவே அறிவித்த நாளில்(வருகிற 19-ந் தேதி) பிளஸ்-2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், தேர்வு முடிவு தேதி எக்காரணத்தை கொண்டும் மாற்றப்படாது' என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

பிளஸ் 2 மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் சேர விண்ணப்பிக்கலாம் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவிப்பு

பிளஸ் 2 மாணவர்கள் ஒருங் கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி, பிஎட் படிப்புக்கு ஆன்லை னில் விண்ணப்பிக்கலாம் என திண் டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம் அறிவித்துள் ளது. மத்திய அரசு பல்கலைக்கழக மான காந்திகிராம் கிராமிய பல் கலைக்கழகம் திண்டுக்கல் அருகே அமைந்துள்ளது. ஆசிரியர் பணி யில் சேர வேண்டும் என்ற குறிக் கோளுடன் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இப்பல் கலைக்கழகம் 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பிஎஸ்சி. பிஎட் படிப்பை (கணிதம், இயற்பியல், வேதியியல்) வழங்கி வருகிறது. பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டு களாக உயர்த்தப்பட்ட நிலையில், பட்டப் படிப்பை முடித்து அதன் பிறகு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 2019-2020-ம் கல்வி ஆண்டில் பிஎஸ்சி, பிஎட் மாண வர் சேர்க்கைக்கான அறிவிப்பை காந்திகிராம் கிராமிய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங் களுடன் பிளஸ் 2 படிப்பை முடிக்கும் மாணவர்கள் இப்படிப்பில் சேர லாம். குறைந்தபட்சம் 50 சத வீத மதிப்பெண் அவசியம். நுழைவுத்தேர்வு ஏதும் இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்படி, கணிதம், இயற்பியல், வேதியியல்-இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட். படிக்கலாம். இதற்கான ஆன் லைன் பதிவு தொடங்கப்பட் டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 நாட்களுக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது ஒரு மத்திய அரசு பல்கலைக்கழகம் என்பதால் மாணவர்களிடம் மிகவும் குறைவான கல்விக்கட்டணமே வசூலிக்கப்படுகிறது. முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.6,600 (வேதியியல் பாடப்பிரிவு எனில் ரூ.7,600) செலுத்த வேண்டும். இறுதி ஆண்டு ஒரு செமஸ்டருக்கு அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் கல்விக்கட்டணம் ரூ.8,600. தகுதி யுடைய பிளஸ் 2 மாணவ-மாணவி கள் ஆன்லைனில் (www.ruraluniv. ac.in) பதிவுசெய்யலாம் என காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  

கோடை விடுமுறையை ஆக்கபூர்வமாக பயன்படுத்த மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்குங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

கோடை விடுமுறை காலத்தை மாணவ, மாணவியர் ஆக்கப்பூர்வமாகப் பயன் படுத்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகம் வழியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழி காட்டுதல்களில் கூறியிருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 13-ம் தேதியுடன் பள்ளி வேலைநாட்கள் முடிவடைகின்றன. இதையடுத்து கோடை விடுமுறையை சிறப்பாகக் கழிக்கவும், அடுத்த கல்வியாண் டுக்கு திட்டமிடல் காலமாக விடு முறையைப் பயன்படுத்தவும் மாண வர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரை களை தலைமையாசிரியர்கள் வழங்க வேண்டும். நாளிதழ் வாசிப்பு அதன்படி, மாணவர்கள் தினமும் நாளிதழ்களை வாசித்து செய்திகளைக் குறிப்பெடுத்து அடுத்த கல்வியாண்டின் முதல் நாளில் ஆசிரியர்களிடம் காண் பித்து கையொப்பம் பெற வேண்டும். மேலும், பொது நுாலகங்களுக்குச் சென்று புத்தகங்களைப் படித்து அதில் இருந்து குறிப்புகளை எடுத்து ஆசிரியர் களிடம் காண்பிக்க வேண்டும். சிறப்பு வகுப்புகள் கோடையில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பெற்றோர் அல் லது பாதுகாவலர் துணையில்லாமல் மாணவர்கள் வெளியே செல்லக் கூடாது. குறிப்பாக நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். ஓட்டு நர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. செல் போனில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து, கணினி, தட்டச்சு போன்ற ஆக்கப்பூர்வமான சிறப்பு வகுப்பு களுக்குச் சென்று பயிற்சி பெறலாம். தற்காப்புக் கலைகள் மேலும், இசை, ஓவியம், தற் காப்புக் கலைகள், நீச்சல், யோகா போன்றவற்றைக் கற்பதன் மூலம் மாணவர்கள் தங்கள் தனித்திறன் களை வளர்த்துக் கொள்ளலாம். இந்த வழிகாட்டுதல்களை மாணவர்கள் தவறாமல் பின்பற்ற ஆசிரியர்கள் மூலம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு பள்ளி தலைமையாசிரி யர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழி காட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.  

ஆசிரியர் காலி பணியிட விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வி துறை உத்தரவு 

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர் பணியிட விவரங் களை அனுப்பி வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் சார் பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில், ''அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி களில் 2019 மே 31-ம் தேதி நிலவரப் படி காலியாக உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி யிட விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரித்து உடனே இயக்குநரகத் துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், காலிப் பணியிடங்கள் இல்லை எனில், 'இன்மை அறிக்கை' அனுப்புமாறும் உத்தர விடப்படுகிறது. அதேநேரம் 2017 ஆகஸ்ட் 1-ம் தேதியன்று மாணவர் கள் எண்ணிக்கையின் நிலவரப்படி இயக்குநரகத்திடம் சரண் செய்யப் பட்ட பணியிடங்களை எந்த காரணம் கொண்டும் காலியிடமாக கருதி, அறிக்கையில் சேர்க்கக்கூடாது'' என்று கூறப்பட்டுள்ளது.  

அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு 

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு கல்வித்துறை அதி காரிகள் முழு பொறுப்பேற்க வேண் டும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் சமச்சீர் மற்றும் இதர பாடத்திட்டங்களின்கீழ் இயங்கும் அரசு உதவி பெறும், பகுதி நிதியுதவி பெறும் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ போன்ற மத்திய வாரியங்களில் இணைப்பு பெற்ற பள்ளிகள் எல்லாம் கட்டாயம் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வு நடவடிக்கை யின்போது தனியார் பள்ளிகள் பல உரிய அங்கீகாரமின்றி செயல் படுவது தெரியவந்துள்ளது. அத் தகைய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அவர்களால் அரசின் பொதுத்தேர்வுகளையும் எழுத முடியாது. மேலும், அந்தப் பள்ளிகளால் வழங்கப்படும் சான் றிதழ்கள் தகுதியற்றவைகளாகும். இவ்வாறு அங்கீகாரமின்றி பள்ளிகள் இயங்கி வருவது அந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கள் பணியை சரிவர செய்யவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. எனவே, முதன்மை கல்வி அதிகாரிகள்அனைவரும் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அதிகாரிகளின் உதவியுடன் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் நேரில் சென்று பள்ளிகளின் அங்கீ கார விவரங்களை ஏப்ரல் 23-ம் தேதிக்குள் பெற வேண்டும். ஆய்வு முடிவில் அங்கீகார மின்றி இயங்கும் பள்ளிகள் பட்டி யலை தயார் செய்து அந்தந்த பகுதி களில் நாளிதழ்கள் வாயிலாக பொது மக்கள் அறியும் வகையில் செய்தி வெளியிட வேண்டும். மேலும், அங்கீ காரமின்றி செயல்படும் தகவல், பள்ளி முகப்பில் பெற்றோர் அறி யும் வண்ணம் ஒட்டப்பட வேண்டும். மேலும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விவரங்களை பெற வேண்டும். அதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்து ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும். வழிகாட்டுதல்கள் வரும் கல்வி ஆண்டு தொடங் கும் போது அவரவர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றவை என்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்றி அங்கீகாரமற்ற பள்ளிகள் மீதான நடவடிக்கை விவரங்களை அறிக் கையாக ஏப்ரல் 29-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேநேரம் அங்கீகாரம் இல்லாமல் செயல் படும் பள்ளிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்க தவறி, அதனால் அந்த பள்ளியில் பயிலும் குழந்தை கள் பாதுகாப்புக்கோ, கல்வி நலனுக்கோ குந்தகம் ஏற்பட்டால் அதுசார்ந்த முழுப் பொறுப்பும் சம் பந்தபட்ட பகுதிகளின் கல்வித் துறை அதிகாரிகளே ஏற்க நேரிடும். மேலும், இதற்கு பொறுப்பாகும் அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப் படும்.மாணவர்களின் பாதுகாப்புக்கோ, கல்வி நலனுக்கோ குந்தகம் ஏற்பட்டால் முழு பொறுப்பையும் கல்வித்துறை அதிகாரிகளே ஏற்க நேரிடும்.  

டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

லாபநோக்கத்துடன் பணத்தை பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் 'டியூசன்' எடுப்பது சட்டவிரோதம் என்றும், அவ்வாறு டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இடமாறுதல் கோவை மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன், அருகில் உள்ள செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ரங்கநாதன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- இடமாற்றம் என்பது பணி விதிகளில் ஒரு நிபந்தனை. அரசு ஊழியர்கள் எங்கு இடமாறுதல் செய்யப்பட்டாலும், அங்கு சென்று பணியாற்ற வேண்டும். அதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். 'டியூசன்' சட்டவிரோதம் மேலும், அரசிடம் நியாயமான ஊதியம் பெறும் ஆசிரியர்கள் லாபநோக்கில் 'டியூசன்' எடுப்பது என்பது பணி விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். அவ்வாறு மாணவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு டியூசன் எடுப்பதும், பள்ளிக்கூடத்துக்கு வெளியே, 'டியூசன்' மற்றும் 'டுட்டோரியலில்' அரசு பள்ளி ஆசிரியர் பணத்துக்காக பாடம் நடத்துவதும் சட்டவிரோதம். எனவே, 'டியூசன்' எடுக்கும் ஆசிரியர்களை கண்காணித்து அவர்கள் மீது அரசு கடும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இதுமட்டுமல்ல அரசை மிரட்டும் தொணியில் மாணவ சமுதாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், போராட்டங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதும் கருணை காட்டக்கூடாது. ஆசிரியர்கள் நேர்மையுடனும், மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் திகழவேண்டும். தொலைபேசி எண் ஆனால், அண்மை காலங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சமூக ஒழுங்கின்மை பெருகிவிட்டது. பாலியல் வன்கொடுமைகள் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது. எனவே, இதுதொடர்பாக மாணவியர், பெற்றோர் மற்றும் நலம்விரும்பிகள் புகார் செய்ய ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தமிழக கல்வித்துறை 8 வாரத்துக்குள் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த இலவச தொலைபேசி எண் குறித்து அதிகளவில் விளம்பரப்படுத்த வேண்டும். குறிப்பாக கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் இந்த இலவச தொலைபேசி எண்ணை இடம்பெறச்செய்ய வேண்டும். நடவடிக்கை ஏராளமான பாலியல் கொடுமை சம்பவங்கள் நடந்தாலும், வெளியில் தெரியும் சம்பவங்கள் மீது மட்டுமே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற பாலியல் சம்பவங்கள், எல்லாம் ஏதோ ஒரு வழியில் தீர்க்கப்பட்டு விடுகிறது. எனவே, பாலியல் கொடுமை தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 'டியூசன்' நடத்தும் ஆசிரியர்கள் குறித்தும் இந்த இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அதேபோல இந்த மனுவை தாக்கல் செய்த தலைமை ஆசிரியரான ரங்கநாதன் மற்றும் மற்றொரு தலைமை ஆசிரியரான மல்லிகா ஆகியோர் தங்களது பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

கோடை விடுமுறை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது பள்ளிக்கல்வி துறை கண்டிப்பு

கோடை விடுமுறை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது பள்ளிக்கல்வி துறை கண்டிப்பு. பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கடந்தாண்டு அறிவுறுத்தப்பட்டது. தற்போது கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை பள்ளிகளில் நடத்துவதாக புகார்கள் வருகின்றன. கோடையில் வெயில் அளவு அதிகரித்துள்ளதால், மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு கட்டாயம் ஓய்வளிக்க வேண்டும். கோடை விடுமுறை என்பது மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தங்கள் உறவினர்களோடு பழகவும், உறவுகளின் அவசியத்தை தெரிந்துகொள்ளவும், உறவுகளை மேம்படுத்தவும் ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். இதனால் மாணவர்களின் வாழ்வியலில் விழுமியம் ஏற்படும். எனவே மாணவர்களின் நலன்கருதி கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாக பெற்றோரிடம் இருந்து பள்ளிகள் மீது புகார் வந்தால், அதன்மீது எவ்வித காலதாமதமின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் மே 5-ல் நீட் தேர்வு இணையதளத்தில் ஏப்.15-ம் தேதி ஹால்டிக்கெட்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஹால்டிக்கெட்டை வரும் 15-ம் தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்), வரும் மே 5-ம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தும் நீட் தேர்வுக்கு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கிடையே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நாடு முழுவதும் இருந்து நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். ஜுன் 5-ல் தேர்வு முடிவு இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வரும் 15-ம் தேதி www.nta.ac.in / www.ntaneet.nic.in இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அசாம், வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாய தேர்ச்சி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு 

8-ம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களைக் கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறி னால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு அந்தந்தப் பள்ளி களே முழு பொறுப்பு ஏற்க வேண் டும் என்று எச்சரிக்கையும் விடுத் துள்ளது. இந்தியா முழுவதும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை கடந்த குளிர் காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத் திருத்தத்தை அமல் படுத்த முடிவு செய்து தமிழக அரசு முன்னேற்பாடுகளை தொடங் கியது. இதற்கு ஆசிரியர் கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசு தனது முடிவில் பின் வாங்கியது. இந்நிலையில் மாநிலம் முழு வதும் பல்வேறு தனியார் பள்ளி களில் படிக்கும் 6, 8-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அதன் நிர்வாகங்கள் நிறுத்தி வைப்பதாகப் புகார்கள் எழுந்தன. சமீபத்தில் சென்னையில் தனியார் மழலையர் பள்ளியில் எல்கேஜி படித்த மாணவியின் தேர்ச்சியை நிறுத்தி வைத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்விளைவுகளுக்கு பொறுப்பு இதைத் தவிர்க்க தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களைக் கட்டாயத் தேர்ச்சி செய்யாவிட்டால், அதனால் ஏற் படும் பின்விளைவுகளுக்கு பள்ளி களே பொறுப்பேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகம் வழியாக அனைத்துவித பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது: அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாண வர்களுக்கு தேர்வு முடிவுகளை இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி வெளியிட வேண்டும். அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை மே 2-ம் தேதிக் குள் மாவட்ட கல்வி அதிகாரியி டம் ஒப்புதல் பெற்ற பின்னர் வெளி யிட வேண்டும். அதேநேரம் நிர் ணயிக்கப்பட்ட விதிமுறைகளைத் தளர்த்தி தேர்ச்சி அளிக்க முதன் மைக் கல்வி அதிகாரியின் சிறப்பு அனுமதி பெறுவது அவசியம். மேலும், 8-ம் வகுப்பு வரை பயி லும் மாணவர்கள் அனைவருக் கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப் பட வேண்டும். இல்லையெனில் அதனால் ஏற்படும் பின்விளைவு களுக்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அல்லது முதல்வர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் குழு இதற்கிடையே 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத் தப்பட்டு, மாவட்ட அளவில் தலைமையாசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட மதிப்பெண்கள் நிர்ணயம் செய்து தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 3 முதல் 10-க்குள் மறுதேர்வு

9-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி யாக மறுதேர்வுகள் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகம் வழியாக அனைத்து பள்ளி தலைமையாசிரி யர்கள் மற்றும் முதல்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் களில் தெரிவித்திருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வுகள் நடத்தப்பட வேண் டும். அதன்படி நடப்பு கல்வி யாண்டில் 9-ம் வகுப்பில் தேர்ச்சி அடையாதவர்களுக்கு ஜூன் 3 முதல் 10-ம் தேதிக்குள் மறு தேர்வு நடத்த வேண்டும். தேர்வு முடிவுகளை ஜூன் 20-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.  

பாலியல் தொல்லை குறித்து புகார் செய்ய பள்ளி, கல்லூரிகளில் கட்டணமில்லா தொலைபேசி எண் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

பாலியல் தொல்லை குறித்து புகார் செய்ய ஏதுவாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை 8 வாரத்தில் அறிமுகப் படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அதேபோல லாப நோக்கில் டியூஷன் எடுக்கும் ஆசிரி யர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்ஆர்பி அம்மணி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன், அருகில் உள்ள செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு கடந்த 2017-ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ''அரசிடம் நியாயமான ஊதியம் பெறும் ஆசிரியர்கள் லாபநோக்கில் டியூஷன் எடுப்பது என்பது பணி விதிமுறைகளுக்கு எதிரானது. சட்டவிரோதமும் கூட. இதுபோல தனியாக டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களை கண் காணித்து அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல அரசை மிரட்டும் தொனியில் மாணவ சமுதாயத்துக்கு பாதிப்பை ஏற் படுத்தும் வகையில் போராட்டங் களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதும் கருணை காட்டக்கூடாது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல் கலைகழகங்களில் சமூக ஒழுங் கின்மை பெருகி சட்ட விரோத பாலி யல் வன்கொடுமைகள் அதிக ரித்து வருவது வேதனைக்குரியது. எனவே இதுதொடர்பாக மாணவி யர், பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகள் புகார் செய்ய ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பள்ளிக்கல்வித்துறை 8 வாரத்துக்குள் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த இலவச டோல்-ப்ரீ எண் குறித்து அதிகளவில் அறிவிப்பு வெளியிட வேண்டும். குறிப்பாக கல்வி நிறுவனங் களின் அறிவிப்பு பலகையில் இந்த இலவச எண்ணை இடம் பெறச்செய்ய வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டியூஷன் ஆசிரியர்கள் குறித் தும் இந்த எண்ணில் புகார் தெரி விக்கலாம். டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதேபோல இந்த மனுவை தாக்கல் செய்த தலைமை ஆசிரியரான ரங்கநாதன், மற்றொரு தலைமை ஆசிரியரான மல்லிகா ஆகியோர் தங்களது பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்று களை நட வேண்டும். இதுதொடர் பாக கோவை மாநகராட்சி ஆணை யர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.  

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றமா? இணையதளங்களில் பரவும் தகவல்களுக்கு தேர்வுத்துறை மறுப்பு 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யிடும் தேதி மாற்றம் என இணைய தளங்களில் பரவும் தகவல்களை தேர்வுத்துறை மறுத்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 29-ம் தேதியுடன் முடிவடைந்தன. தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ல் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே மக்களவைத் தேர்தல் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை தள்ளி வைக்க முடிவாகியுள்ளது. மே முதல் வாரம் தேர்வு முடிவுகளை வெளியிட அரசு திட்டமிட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இந்தத் தகவலை தேர்வுத்துறை மறுத்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை அதி காரிகள் கூறும்போது, "திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும். விடைத் தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 10-ம் தேதியுடன் முடிவடையும். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் நடைபெறும். பெரும்பாலான முகாம்களில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆசிரியர்களின் தொடர் உழைப்பால் அனைத்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நாட்களில் வெளியிடப்படும். தேர்வெழுதிய 27 லட்சம் மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். அரசு இணையதளம் வழியாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்தல் பணிகள் காரணமாக சிரமங்களைத் தவிர்க்க பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை தள்ளி வைக்க அரசு விரும்பியது. ஆனால், பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதால் அதற்கான அவசியம் இருக்காது'' என்றனர்.பெரும்பாலான முகாம்களில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனி யார் பள்ளிகளுக்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் தனியார் பள்ளி கள், மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்காமல் தொடர்ந்து சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றன. இதனால் மாணவர்கள் மனஉளைச்சலில் தவிப்பதுடன், உடல் உபாதை களாலும் பாதிக்கப்பட நேரிடும் என புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக 'இந்து தமிழ்' நாளி தழில் செய்தி வெளியானது. இதை யடுத்து கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு களை நடத்தக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. ஆனால், இப் போது தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. இன்றைய பருவநிலை மாறுபாட்டால் கோடை யில் வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். இதுதவிர கோடை விடுமுறை காலங்களில்தான் மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் பழகவும், உறவுகளின் அவசியத்தை அறிந்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக உள்ளது. இதன்மூலம் அவர்களின் வாழ்வியல் விழுமியம் மேம்படும். எனவே, கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தனியார் பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக அறிவித்து, முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுதொடர்பான புகார்கள் மீது காலதாமதமின்றி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


TNPSC - GROUP - I SERVICES - ONLINE CERTIFICATE UPLOAD

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு 2019 ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி-I Group –I services) இல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக 10.04.2019 முதல் 26.04.2019 (வேலை நாட்களில்) அன்று மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் (Scan) செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வில் (Main Written Examination) கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் முதனிலை எழுத்துத் தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்) அரசுப்பணியாளர் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 26.04.2019 க்கு முன்னர் கண்டிப்பாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இரா.சுதன்,இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்.