பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் ஜூலை 13-ந் தேதி தொடங்குகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல்-பதவி உயர்வு கவுன்சிலிங் அடுத்த மாதம் (ஜுலை) 13-ந் தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குனர் பி.மணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான உத்தேச கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இடமாறுதல் கவுன்சிலிங்

1. ஜுலை 13 மற்றும் 14-ந் தேதி (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
2. 16 மற்றும் 17-ந் தேதி (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
3. 23-ந் தேதி (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (அதே மாவட்டம்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
4. 24-ந் தேதி (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (வெவ்வேறு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
5. 27-ந் தேதி (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுனர் பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல்

பதவி உயர்வு
6. 30-ந் தேதி (திங்கள்) - பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்

ஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளியிடப்படுகிறது. மிகக் குறைந்த அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதன் காரணமாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மூன்று இடங்களுக்குப் பதிலாக, ஒரே ஒரு இடத்தில் நடக்கிறது.இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சிக்கு, 4,100 விண்ணப்பங்கள் விற்பனையானது. 3,864 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினர்.

அனைவருக்கும் வாய்ப்பு : அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், 2,970 இடங்களும்; அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,758 இடங்களும் உள்ளன. இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலேயே இடம் கிடைக்கும். விண்ணப்பித்த மாணவர்களின், தரவரிசை பட்டியலை, நாளை இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிட, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அழைப்பு கடிதம் : வழக்கமாக, திருச்சி நகரில், மூன்று இடங்களில் கலந்தாய்வு நடக்கும். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு, குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே விண்ணப்பித்து இருப்பதால், திருச்சி பிராட்டியூர் மேற்கில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் மட்டும், கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 5ம் தேதி துவங்கும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அழைப்புக் கடிதங்களை, 2, 3 ஆகிய தேதிகளில், விண்ணப்பங்களை ஒப்படைத்த மையங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்; அதற்கு முன்னதாகவே இணையதளத்திலும், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும். விண்ணப்பித்த மாணவர்களில், 5 சதவீதம் பேர் வரை, வராமல் போகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் 12ம் தேதி நடக்கிறது. இத்தேர்வில் 6.58 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் வரும் 12ம் தேதி நடக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வில் 6.58 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் 12ம் தேதி நடக்கிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் எழுத்து தேர்வுக்காக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 88 பேர் பங்கேற்கின்றனர்.இத்தேர்வை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் எழுத வசதியாக வரும் 12ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அன்று காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், மதியம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வுகள் நடக்கிறது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பபட்டு வருகிறது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய வெப்சைட்டில் விண்ணப்பதாரர் தேர்வு மையம், பாடம் போன்ற விபரங்களை அறிந்து கொள்ள வெப்சைட்டிலும் வசதி செய்யப்பட்டுள்ளது

ஜூலை 7ம் தேதி நடக்கும் குரூப்-4 தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்', இன்று டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

ஜூலை 7ம் தேதி நடக்கும் குரூப்-4 தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்', இன்று டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப்-4 நிலையில் நடக்கும் தேர்வுக்கு, 10ம் வகுப்பு கல்வித் தகுதி என்பதால், 11 லட்சம் பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். ஒரு வாரத்தில் தேர்வு நடக்க இருக்கும் நிலையில், இன்னும், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படவில்லை.

தொடக்கக்கல்வி | 2012-2013 பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பெற்றோர் 29.06.2012 பிற்பகலே விடுவிக்கப்பட்டு அன்றே புதிய பணியிடத்தில் சேர - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளில் பதிவு செய்யப்பட்ட பிறந்த தேதி, பெயர், தந்தை பெயர், இன்ஷியல், ஜாதி போன்றவைகளை பள்ளி நிர்வாகங்கள் மாற்றம் செய்யக் கூடாது.

மாணவர்கள் சேர்க்கையின்போதே பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதியை சரியாக பெற்று பதிவு செய்ய வேண்டும். மாற்றம் செய்ய முடியாது என்பதை தெளிவாக எடுத்து கூற வேண்டும். பிறப்பு, ஜாதி சான்றுகளை பெற்று, அதில் உள்ள தேதி, விபரங்களை சரி பார்த்து பின்னரே பதிவு செய்ய வேண்டும். இதை தலைமையாசிரியகளும் சரி பார்த்து கையெழுத்திட வேண்டும்.

மதிப்பெண் சான்றுகளில் திருத்தம் செய்ய முடியாது என்பதை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கோர்ட் உத்தரவிட்டாலும் கூட, இயக்குனர் அனுமதி இல்லாமல் திருத்தம் செய்ய கூடாது. ஜாதி, பெயர், பிறந்த தேதி குறித்து அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர். பலர் கோர்ட்டுகளுக்கு செல்கின்றனர். ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பள்ளி கல்வி செயலரையும் வழக்கில் சேர்த்து சம்மன் பெற்றால், அவரது பெயரை நீக்க அரசு வக்கீல்களை சந்தித்து நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் முன் வர வேண்டும். மதிப்பெண் சான்றுகளை திருத்தம் செய்ய, பள்ளி கல்வி இயக்குனர் பரிந்துரைபடி, அரசு தேர்வுத்துறை இயக்குனர் தான் திருத்தம் செய்ய முடியும். 2012- 13ம் ஆண்டில் இது போன்ற குறைபாடுகள் வராமல் பார்த்து கொள்ள, அனைத்து தலைமை ஆசிரியர்களையும் அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி நிறுவன பட்டயத் தேர்வு | MARCH 2012

இரண்டாம் ஆண்டு

ஜூன் 25 | 2012 | இந்திய கல்வி முறை.
ஜூன் 26 | 2012 | கற்றலை மேம்படுத்துதல், எளிதாக்குதல்.
ஜூன் 27 | 2012 | தமிழ்/ தெலுங்கு/ உருது/மலையாளம் கற்பித்தல். மழலையர் பராமரிப்பு மற்றும் கல்வி.
ஜூன் 28 | 2012 |  ஆங்கிலம் கற்பித்தல்.
ஜூன் 29 | 2012 | கணிதம் கற்பித்தல்.
ஜூன் 30 | 2012 |  அறிவியல் கற்பித்தல்.
ஜூலை 2 | 2012 |  சமூக அறிவியல் கற்பித்தல்.

அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த திருவாசகமணி, ஐகோர்ட் கிளையில்தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறேன். 2012& 2013ம்ஆண்டிற்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மூப்புபட்டியலை தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டுடிசம்பர் 20ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அதில்,மொழி ஆசிரியர்களில் அரசு பள்ளியில் 2001 டிசம்பர் 31க்கு முன்புபணிக்கு சேர்ந்து, 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் அல்லது பிடிமுடித்தவர்களின் பெயர்களை மட்டுமே தலைமை ஆசிரியர் பணி மூப்புபட்டியலில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.தற்காலிக பணி மூப்பு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில், 2009ம் ஆண்டில் பிஎட் முடித்ததால் எனது பெயரை பணி மூப்புபட்டியலில் சேர்க்கவில்லை.

எனக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த பலரது பெயர்கள்,பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட்முடித்தவர்கள் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுபட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதம் எனஅறிவித்து, என் பெயரை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.தற்காலிக பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கைஎடுக்கவும், இறுதி பட்டியல் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை ஜி.எம்.அக்பர்அலி விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி,அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலைதற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மனுவுக்கு 2 வாரத்தில்பதிலளிக்க பள்ளி கல்வி இயக்குனர், மதுரை முதன்மை கல்விஅதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்

இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.

தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-வது ஆண்டு சேர முடியாது ஏ.ஐ.சி.டி.இ. புதிய விதிமுறை

பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்க சேர்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். அவர்கள் 3 வருடம் பாலிடெக்னிக் படிக்க வேண்டும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள பாலிடெக்னிக் படிக்கும்போது அவர்கள் முதலாம் ஆண்டு படிக்காமல் நேரடியாக 2-வது ஆண்டில் சேரலாம். இது நடைமுறையில் உள்ளது.


இப்போது பிளஸ்-2 படிக்கும் போது தொழில்கல்வி படித்தவர்கள் மட்டும்தான் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-வது ஆண்டில் நேரடியாக சேரமுடியும் என்றும், வேறு குரூப் எடுத்தவர்கள் சேரமுடியாது என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டல் செய்ய ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேவையான நடவடிக்கையை, தேர்வுத் துறை எடுத்துள்ளது. மாணவர்கள், விடைத்தாளின் நகல் கிடைக்கப்பெற்ற ஐந்து நாட்களுக்குள், "கோர் பேங்கிங் சர்வீஸ்' வசதி உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏதாவது ஒரு கிளை மூலம் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள்கள் நகல்கள் கேட்டு, விண்ணப்பித்து, நகல்கள் பெற்றவர்கள் மட்டுமே மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டலுக்குத் தகுதியானவர்கள். ஒரு பாடத்திற்கு மேல் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல், கட்டணத் தொகையையும் தனித்தனியாக செலுத்த வேண்டும்.

இதற்கான கட்டணம் செலுத்துச் சீட்டின் மாதிரிப்படிவம், விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவுரைப்படிவம்,"www.dge.tn.nic.in' என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்கள், தங்களின் பெயர், தேர்வுக்கு வழங்கப்பட்ட பதிவெண் மற்றும் செலுத்தப்பட்ட தொகை ஆகியவற்றை செலுத்துச் சீட்டில் தெளிவாக குறிப்பிட வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தின் அனைத்து பகுதியும் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், விடைத்தாள்களின் நகல் அனுப்பப்படும் உறையின் மீது, ஒட்டப்பட்டுள்ள துரித அஞ்சல் எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்தால் மட்டுமே, விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால், துரித அஞ்சல் உறையைப் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுகூட்டல் தொடர்பான அனைத்துத் தகவல்களுக்கும், தொடர்பு கொள்ள வேண்டிய முகாம் அலுவலர், தொலைபேசி எண் மற்றும் முகவரி உள்ளிட்ட தகவல்கள், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடைத்தாள்களின் நகல்கள் கோரி, விண்ணப்பித்தவர்களுக்கு, முதற்கட்டமாக, உயிரியல் பாடத்திற்கான விடைத்தாள் நகல்கள் அனுப்பும் பணி, எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. இதற்கான பணியை, தனிக்குழு செய்து வருகிறது. விடைத்தாள் நகல்கள் கேட்டு, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உயிரியல் பாடத்தைத் தொடர்ந்து, பொறியியல் மற்றும் இதரப் பாடப்பிரிவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், விடைத்தாள் நகல்கள் அனுப்பி வைக்கப்படும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்' வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்' வழங்கப்படுகிறது. 

பள்ளிகல்வி துறை ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்: புதிய கால அட்டவணை


மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 18.06.2012 முற்பகல் 10.00  மணி இடம் : அசோக்நகர்

மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 18.06.2012 பிற்பகல் 2.00  மணி இடம் : அசோக்நகர்

மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 20.06.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர்

உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் 25.06.2012 | முற்பகல் 10.00 மணி   இடம் : அசோக்நகர் 

உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 25.06.2012 | பிற்பகல் 2.00 மணி  இடம் : அசோக்நகர் 

உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு 28.06.2012 மற்றும் 29.06.2012 | முற்பகல் 10.00 மணி மணி  இடம் : அசோக்நகர் 

முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் மாறுதல்) 04.07.2012 முற்பகல் 10.00 மணி இடம் : சம்மந்தப்பட்ட மு..அ. 

முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்  மாறுதல்)  05.07.2012 (வியாழக்கிழமை)  முற்பகல் 10.00மணி  இடம் : சம்மந்தப்பட்ட மு..அ.

முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு      11.07.2012 முற்பகல் 10.00 மணி இடம் : அசோக்நகர்

கம்ப்யூட்டர் ஆசிரியர் மற்றும் சத்துணவு பணியாளர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்வதல். பிரிவு கண்காணிப்பாளர் பதவி உயர்வு, இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்வு கவுன்சிலிங், 21ம் தேதி முதல் நடைபெறுகிறது.

டி.ஆர்.பி.தேர்வு மூலம் தேர்வான, 185 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங், 21ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
பதவி உயர்வு மூலம்பிரிவு கண்காணிப்பாளர்களாக பணி நியமனம் செய்யப்படும், 75 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10.30 மணிக்கும்இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெறும், 45 பேருக்கான கவுன்சிலிங், 22ம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.
சத்துணவு பணியாளர்களில்பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, 136 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
டி.என்.பி.எஸ்.சி.மூலம்பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 36இளநிலை உதவியாளர் மற்றும் 16 தட்டச்சர்களுக்கு பணி நியமனம் வழங்கும் கவுன்சிலிங், 23ம் தேதி பகல் மணிக்கு நடக்கிறது.
அனைத்து கவுன்சிலிங் நிகழ்ச்சிகளும்சென்னைடி.பி.ஐ.வளாகத்தில் உள்ள மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நடக்கும் எனபள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். 

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், நாளை, 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. உடனடித் தேர்வு, இம்மாதம் 25ம் தேதி முதல், ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது.

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், நாளை, 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. உடனடித் தேர்வு, இம்மாதம் 25ம் தேதி முதல், ஜூலை 5ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், நேரில் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வருக்கு, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, கோவை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தெரிவித்தார். அனைத்து தனித் தேர்வர்களுக்கும், 20, 21 தேதிகளில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும். ஏப்ரலில் நடந்த தேர்வை எழுதி தோல்வியுற்ற மாணவ, மாணவியர், படித்த பள்ளிகளிலேயே, "ஹால் டிக்கெட்'டுகளை பெறலாம். ஏற்கனவே, தனித்தேர்வராக எழுதியவர்களுக்கு, கல்வி மாவட்ட வாரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள மையத்தில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும்.மெட்ரிக் தனித் தேர்வர், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களை எழுதினால், தலா, 100 ரூபாய் வீதம், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆங்கிலோ இந்தியன் மாணவராக இருந்தால், கூடுதலாக, தலா, 50 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தனித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தனித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. ஜூன் 25ம் தேதி முதல், ஜூலை 12ம் தேதி வரை, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தனித் தேர்வுகள் நடைபெறும். தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், கோவை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இதே ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 13ம் தேதி மாலைக்குள் வழங்க வேண்டும். உரிய தேர்வுக் கட்டணங்களுடன், சிறப்புக் கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். தகுதியான மாணவர்களுக்கு, இதே மையங்களில், "ஹால் டிக்கெட்'டுகள் வழங்கப்படும்.

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 13ம் தேதி மாலை 5:45க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

பிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலகங்கள், தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 13ம் தேதி மாலை 5:45க்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் மாணவரின் புகைப்படத்தில், ஏற்கனவே பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற வேண்டும். "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.ஒரு பாடத்திற்கு 85 ரூபாய், இரு பாடங்களாக இருந்தால் 135, மூன்று பாடங்களுக்கு 185, நான்கு பாடங்களுக்கு 235, ஐந்து பாடங்களாக இருந்தால் 285 மற்றும் ஆறு பாடங்களையும் எழுத வேண்டும் எனில் 335 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்களுடன், சிறப்புக் கட்டணமாக 1,000 ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும்.

இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, 13ம் தேதி முதல், 26ம் தேதி வரை, 110 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, 13ம் தேதி முதல், 26ம் தேதி வரை, 110 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது: அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட, 110 மையங்களில், விண்ணப்பம் வழங்கப்படும். எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவினர், 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர் 500 ரூபாய் செலுத்தியும், விண்ணப்பங்களை பெறலாம். பிளஸ் 2 தேர்வில், குறைந்தபட்சம் 540 மதிப்பெண் பெற்றவர்கள், இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர், தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

வயது வரம்பு : ஜூலை 21ம் தேதியன்று, 30 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், 35 வயது வரை இருப்பவராக இருக்கலாம். ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவையாக இருந்தால், 40 வயது வரை உள்ளவர் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்களை பெறும் இடங்களிலேயே, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். 23ம் தேதி மாலை 5:45 வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நிலவரப்படி, 39 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 43 உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 680 தனியார் பள்ளிகள் இருந்தன. இவற்றில், 100 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு, 50 பள்ளிகள் மூட சம்மதம் தெரிவித்துள்ளன. ஜூலை 5ம் தேதி முதல், திருச்சியில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்கிறது. அதற்குள், மேலும் 50 பள்ளிகள் வரை மூடப்படலாம் என தெரிகிறது. எனவே, தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 500க்கும் கீழே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மொத்த இடங்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது.


இயக்குனர் தேவராஜன் கூறும்போது,""கவுன்சிலிங் மூலம் 17 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 20 ஆயிரம் இடங்கள் வரை உள்ளன,'' என தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுக்கு 10 ஆயிரம் இடங்கள் வரை காலியாகவே உள்ளன. இந்த ஆண்டு, 7,000 இடங்கள் நிரம்பினாலே பெரிய சாதனையாக இருக்கும் என, துறை எதிர்பார்க்கிறது.

உதவி தொடக்க கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,) மற்றும் முதுநிலை விரிவுரையாளர் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

உதவி தொடக்க கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,) மற்றும் முதுநிலை விரிவுரையாளர் தேர்வு முடிவை,ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ) சார்பில், கடந்தாண்டு ஜூலை 30ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ) சார்பில், கடந்தாண்டு ஜூலை 30ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இம்முடிவுகளை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் காணலாம். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் 20ம் தேதி நடக்கவுள்ளது.

2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் விரைவில்...

2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் 

* பள்ளிக்கல்வித் துறை : மாறுதல் கோரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை 05.06.2012                         முதல் 09.06.2012 க்குள்  மூன்று பிரதிகளில் பெற்று மாறுதல் விண்ணப்பத்தினை தலைமையாசிரியர்கள் மேலொப்பம் இட்டு 11.06.2012  அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்க வேண்டும்.
குறிப்பு: சில நிர்வாக காரணங்களால் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்


* தொடக்கக்கல்வித் துறை : மாறுதல்  கோரும் ஆசிரியர்களின்  விண்ணப்பங்களை05.06.2012                         முதல் 09.06.2012 க்குள்  பெற்று ஒப்படைக்க வேண்டும்.


கலந்தாய்விற்கான நாள்,நேரம் மற்றும் இடம்


இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வு, ஏப்ரல் 2012 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவிப்பு .



ஏப்ரல்  2012 –ல் நடைபெற்று முடிந்த இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள்,  04.06.2012 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிடப்படும். சில நிர்வாகக் காரணங்களுக்காக,  இதுவரை,  தேர்வுமுடிவுகள் வெளியிடும் முன்பாக,  முதல்நாள் வழங்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் மற்றும் மதிப்பெண்கள் பதியப்பட்ட குறுந்தகடுகள் (TML and CD) ஆகியவை வழங்குதல் நிறுத்தம் செய்யப்படுகிறது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்.


        அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தேசிய தகவலியல் மையத்திற்கு National Informatics Centre) பொறுப்புவாய்ந்த அலுவலர் ஒருவரை அதிகாரமளிப்பு கடிதம்  (Authorisation letter)  மற்றும் குறுந்தகடு ஒன்றுடன் (CD) அனுப்பி வைத்து தங்கள் மாவட்டத்திற்கு உரிய பள்ளிகளின் தேர்வு முடிவுகளை, முடிவுகள் வெளியிடப்பட்ட ஒரு சில மணித்துளிகளில் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

        மேலும், கணினி வசதிகள் கொண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவர்களின் கூடுதல் விவரங்களைப் பதிய 18.05.2012 வரை உபயோகித்து வந்த User id மற்றும் Password ஆகியவற்றைக் கொண்டு  http://peps.tn.nic.in என்ற வலை வழி (Portal) மூலமாக  தேர்வு முடிவுகளை பள்ளியில் உள்ள கணினி மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  
        கணினி வசதி இல்லாத பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் இருக்கும் கணினி வசதி கொண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பள்ளிகளின்  User id மற்றும் Password  ஆகியவற்றைக் கொண்டு தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசி ரியர் பயிற்சி முடித்த வர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜஸ்டின் பிரபாகர்.இவர், மதுரை உயர்நீதிமன்றம் கிளை யில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

நான், இடைநிலை ஆசிரியர்பயிற்சி முடித்து விட்டு தேனி மாவட்டவேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிவடையும் வரை, மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப் படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதன்படி மாநில பதிவு மூப்பு அடிப் படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 15.11.2011 அன்று தமிழக அரசு ஒரு உத் தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் இடை நிலை ஆசிரியர்கள் நிய மனத்தை பொறுத்த மட்டில், ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டு வரும் மாநில பதிவு மூப்பு அடிப்படையி லேயே பணி நியமனம் தொடரும் என்றும், பட்டதாரி ஆசிரியர் களை பொறுத்தமட் டில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வகுத் துள்ள விதிகள்படி தகுதி தேர்வு அடிப் படையில் பணி நிய மனம் மேற்கொள்ளப் படும் என்றும் கூறப்பட் டுள்ளது. இந்த உத்தர வுக்கு புறம்பாக இடை நிலை ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர் களும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்துள் ளது.

எனவே இடைநிலை ஆசிரியர்கள், இடை நிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி முன்னிலையில் விசார ணைக்குவந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இடைநிலை ஆசிரியர் கள், இடைநிலை ஆசிரி யர் பயிற்சி முடித்த வர்கள் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதில் அளிக்க தாக்கீது அனுப்ப உத்தர விட்டார்.

பின்னர் விசார ணையை வருகிற 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

மருத்துவ மாணவர் கலந்தாய்வு தேதி மாற்றி அமைக்கப் பட்டுள்ளதால், பொறியியல் கலந்தாய்வு தேதி மாற வாய்ப்புள்ளது-துணை வேந்தர் மன்னர் ஜவஹர்

பொறியியல் சேர்க்கைக் கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு குழு விரைவில் கலந்தாய்வு தேதியை முடிவு செய்யும்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், முதலில் ஜூலை 2ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ மாணவர் கலந்தாய்வு ஜூலை 5ஆம் தேதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மருத்துவ மாணவர் கலந்தாய்வு முடிந்த ஒரு வாரம் கழித்துதான் பொறியியல் மாணவர் கலந்தாய்வு தொடங்கும். இதனால் ஜூலை 9ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2ஆவது வாரத்தில் நடை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறு கையில், மருத்துவ மாணவர் கலந்தாய்வு தேதி மாற்றி அமைக்கப் பட்டுள்ளதால், பொறியியல் கலந்தாய்வு தேதி மாற வாய்ப்புள்ளது. இதுகுறித்து பொறியியல் மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு குழு கூடி விரைவில் கலந் தாய்வு தேதியை முடிவு செய்யும் என்றார்.

2.30 லட்சம் பொறியியல் விண்ணப்பம் விற்பனை

பொறியியல் படிப்பில் பிஇ மற்றும் பிடெக் படிப்பில் சேர கடந்த 11ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின் றன. இதற்காக முதலில் 2 லட்சம் விண்ணப் பங்கள் அச்சடிக்கப் பட்டு விற்பனை செய் யப்பட்டது. கடந்த வாரம் அவை விற்று தீர்ந்தன. இதையடுத்து மேலும் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்ச டிக்கப்பட்டு மீண்டும் விநியோகிக்கப்பட்டன. விண்ணப்ப விநியோக கடைசி நாளான நேற்று மட்டும் 2 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பங் கள் விற்பனையாகி உள்ளன.


நர்சிங் (பி.எஸ்சி., நர்சிங்) படிப்புகளில் சேர ஜுன் 4ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம்

2012-13ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி நர்சிங் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை நர்சிங் (பி.எஸ்சி., நர்சிங்) படிப்புகளில் சேர ஜுன் 4ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்குகிறது.சென்னை, மதுரை, சேலம், செங்கல்பட்டு ஆகிய 4 இடங்களில் உள்ள அரசு நர்சிங் கல்லூரிகளில் 200 சேர்க்கை இடங்கள் உள்ளன. இது தவிர, தமிழகத்தில் 130 தனியார் நர்சிங் கல்லூரிகள் உள்ளன.அரசு கல்லூரிகளில் உள்ள 200 இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனரகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறும்.இந்த கலந்தாய்வில் பங்கேற்று பி.எஸ்சி., நர்சிங் பயில விரும்வும் மாணவ, மாணவிகளுக்கான விண்ணப் பங்கள் ஜுன் 4ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.சுயநிதி கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பு தான் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் திறக்கப்பட்டன

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இன்று காலையிலேயே மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர்.பாடப்புத்தகங்கள் பள்ளிகள் மூலமாக மாணவர்களுக்கு இன்றே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் இருந்து முப்பருவு பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த கல்வியாண்டில் இருந்து மாணவர்கள் புத்தக மூட்டையை சுமக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.