இளங்கலைப் பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம்/
கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள
பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் (30,31.07.2012) கலந்துகொள்ள தகுதியில்லை என பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
kalvisolai.in | kalviseithi | trb news | tntet news | tnpsc news | employment news | flash news | college news | exam news | result news | materials news | school news | g.o news
Sunday, July 29, 2012
Saturday, July 28, 2012
பிளஸ் 2 மறு மதிப்பீடு புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற வேண்டும் என, தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்குப் பின்,
மதிப்பெண் மாறுதலுக்கு உள்ளான மாணவ, மாணவியர், தங்களது புதிய
மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச்
சென்று, தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து,
புதிய மதிப்பெண் சான்றிதழை பெறலாம். இந்த தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழ் பெறாத மாணவ, மாணவியர் அதன்பின் தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு சென்று பெற வேண்டும்.
பிளஸ் 2 மறு மதிப்பீடு புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற வேண்டும் என, தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்குப் பின், மதிப்பெண் மாறுதலுக்கு உள்ளான மாணவ, மாணவியர், தங்களது புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெறலாம். இந்த தேதிக்குள் மதிப்பெண் சான்றிதழ் பெறாத மாணவ, மாணவியர் அதன்பின் தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு சென்று பெற வேண்டும்.
சிறப்பு ஆசிரியர், 1,451 பணியிடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியலும்; 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, உத்தேசத் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், முதுகலை ஆசிரியர் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
சிறப்பு ஆசிரியர், 1,451 பணியிடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியலும்; 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, உத்தேசத் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்குப்
பின், முதுகலை ஆசிரியர் இறுதித் தேர்வுப் பட்டியல்
வெளியிடப்படும்.
பள்ளிக்கூட பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் 2 வாரத்தில் தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை, தாம்பரத்தை அடுத்த சேலைïர் இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில் சுருதி (வயது 6) என்ற மாணவி 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இரண்டு
நாட்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், தாம்பரம் முடிச்சூர் சாலையில் பஸ்சின்
தரைப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக சுருதி சாலையில் விழுந்தாள்.
என்ஜினீயரிங் கல்வியில் சேருவதற்கு தகுதி மதிப்பெண்ணை ஏ.ஐ.சி.டி.இ. நிர்ணயித்தது செல்லும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு
என்ஜினீயரிங்
மாணவர் சேர்க்கைக்கு தகுதியான மதிப்பெண்ணை நிர்ணயித்து அகில இந்திய தொழில்நுட்ப
கல்வி குழு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
என்ஜினீயரிங்
படிப்பில் சேருவதற்கான கல்வித் தகுதியை மறுநிர்ணயம் செய்து 2011-2012-ம் ஆண்டில்
அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (ஏ.ஐ.சி.டி.இ.) உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி பிளஸ்-2வில், பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்த பட்சம் 50
சதவீத மதிப்பெண்ணும், இடஒதுக்கீட்டைப் பெறும் தகுதியுடைய பிரிவைச்
சேர்ந்த மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.
1 1/2 லட்சம் பேர் எழுதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு
ஒன்றரை லட்சம்
பேர் எழுதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு
நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10-வது, பிளஸ்-2 தேர்வில் அனைவரையும் தேர்ச்சி பெறவைக்க புதிய கையேடு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்க அதிகாரிகள் ஏற்பாடு
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும்
பிளஸ்-2 தேர்வில் அரசு
பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரையும் தேர்ச்சி பெறவைக்க புதிய கையேட்டை
பாடவாரியாக அரசு தயாரித்துள்ளது. அவை விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
தையல், ஓவியம், இசை பாடங்களுக்கான அரசு தொழில் நுட்பத் தேர்வுக்கு 1-ந் தேதி முதல் விண்ணப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு
தையல், ஓவியம், இசை, நடனம், அச்சுக்கலை,
விவசாயம், கைத்தறி ஆகிய பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வு நவம்பர்
மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வருகிற 1-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை
வழங்கப்படுகின்றன.
இதுதொடர்பாக அரசு
தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி
இருப்பதாவது:-
தையல், ஓவியம், இசை, நடனம், அச்சுக்கலை,
விவசாயம், கைத்தறி ஆகிய பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வுகள் வருகிற
நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு)
1-ந் முதல் 24-ந்தேதி வரை
வழங்கப்படும்.
சென்னையில் உள்ள
தேர்வுத்துறை தலைமை அலுவலகம், வெவ்வேறு இடங்களில் உள்ள மண்டல துணை இயக்குனர்
அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம், முதன்மை கல்வி
அதிகாரி அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். தபால் மூலமாக
விண்ணப்பம் பெற விரும்புவோர் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு ரூ.15 மதிப்புள்ள ஸ்டாம்பு ஒட்டிய, சுயமுகவரி
எழுதப்பட்ட தபால் உறையுடன் கோரிக்கை கடிதம் அனுப்பி பெறலாம்.
ஒவ்வொரு
பாடப்பிரிவுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுகள் மேல்நிலை (ஹையர்
கிரேடு), கீழ்நிலை (லோயர் கிரேடு) என 2 நிலைகளில் நடத்தப்படும். கீழ்நிலை தேர்வு எழுத
குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். மேல்நிலைக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும். அல்லது சம்பந்தப்பட்ட
பாடத்தில் கீழ்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேர்வுக்கட்டணத்தை கருவூல செலான் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். டிமாண்ட் டிராப்ட் மூலமாக செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அரசு தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலாளருக்கு (தொழில்நுட்ப தேர்வு) ஆகஸ்டு மாதம் 24-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்
Thursday, July 26, 2012
TRB PG RESULT 2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
TRB PG RESULT 2012 | முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. CLICK FOR RESULT
பல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிகிறது.
பல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிகிறது.
Tuesday, July 24, 2012
டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல் தாள் தேர்வு விடைகள், ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.
டி.இ.டி., இரண்டாம் தாள்
தேர்வுக்கான விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டது. முதல் தாள் தேர்வு விடைகள்,
ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி
தெரிவித்துள்ளார்.click for answer
Saturday, July 21, 2012
பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24ம் தேதியும் நடத்தப்படும்.
பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான
கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24ம் தேதியும் நடத்தப்படும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர்(தமிழ்) 1191, பட்டதாரி ஆசிரியர்(ஆங்கிலம் 227), பட்டதாரி ஆசிரியர்(கணக்கு) 224, பட்டதாரி ஆசிரியர்கள்(அறிவியல்)65, பட்டதாரி ஆசிரியர்(சமூக அறிவியல்) 416 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி
ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி சென்னை
அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர்(தமிழ்)
1191, பட்டதாரி ஆசிரியர்(ஆங்கிலம் 227), பட்டதாரி
ஆசிரியர்(கணக்கு) 224, பட்டதாரி ஆசிரியர்கள்(அறிவியல்)65, பட்டதாரி ஆசிரியர்(சமூக அறிவியல்) 416 பேருக்கு
பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)