சிறப்பு ஆசிரியர், 1,451 பணியிடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியலும்; 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, உத்தேசத் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், முதுகலை ஆசிரியர் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.


சிறப்பு ஆசிரியர், 1,451 பணியிடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியலும்; 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, உத்தேசத் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், முதுகலை ஆசிரியர் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
முதுகலை ஆசிரியர்:அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த மே 27ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது. இத்தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதினர்.இரண்டு மாதமாக, தேர்வு முடிவு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உத்தேசத் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம், இணைய தளத்தில் வெளியிட்டது.வரும் 6ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. பணியிடத்திற்கு ஒருவர் வீதம் அழைக்கத் திட்டமிட்ட போதும், சான்றிதழ், தகுதியிழப்புப் பிரச்னை ஏற்படலாம் என்பதால், கூடுதலாக 108 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பணி முடிந்ததும், அடுத்த ஓரிரு நாளில், இறுதித்
தேர்வுப் பட்டியல் வெளியாகும்.
சிறப்பு ஆசிரியர்:
முந்தைய தி.மு.க., ஆட்சியில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பு அடிப்படையில், 1,451 சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம், கடந்த ஆண்டு நடந்தது.ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்த இந்தத் தேர்வுப் பணியை, ஒரு வழியாக முடித்து, இறுதித் தேர்வுப் பட்டியலை, நேற்று டி.ஆர்.பி., வெளியிட்டது.உடற்கல்வி ஆசிரியர் 1,023 பேர், ஓவிய ஆசிரியர் 304 பேர், இசை ஆசிரியர் 40 பேர் மற்றும் தையல் ஆசிரியர் 84 பேர் என, 1,451 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், பள்ளிக் கல்வித் துறையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பணி நியமனம், இரு மாதங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments