Posts

பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போல ஒரே தேதியில், ஒரே வித வினாத்தாளுடன் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்குகிறது.

பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கியது.

பள்ளி பஸ்களை கட்டுப்படுத்தும் புதிய வரைவு விதிகளை அடுத்தமாதம் 3-ந் தேதி தாக்கல் செய்தாக வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, "நபார்டு' வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்: செப்டம்பரில் வழங்க முடிவு

அக்., 3ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில் சமரசம் கிடையாது. ஏற்கனவே இருந்த அதே தரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.

அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும் தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டன

மாநில தகுதித் தேர்வான, "செட்' தேர்வு வரும், அக்., 7ம் தேதி நடக்கிறது. இதற்காக, இணையதளம் வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க, கடைசி நாள் ஆக., 31ம் தேதி.

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற 8 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.எப்.எஸ். பணியும், 4 பேருக்கு ஐ.பி.எஸ். பணியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

செவிலியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 13ம் தேதி துவங்குகிறது.

தமிழகம் முழுவதும் 114 மையங்களில் குரூப்-2 தேர்வுகள் வரும் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பீட்டில் மதிப்பெண் அதிகரித்தால் "ரேங்க்'கிற்கு எடுத்துக்கொள்ள முடியாது : தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு.

பள்ளிக்கல்வி இயக்குனராக திரு கே.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அன்னாரின் பணி சிறக்க கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவில் 25.91 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இக்னோ நுழைவு தேர்வுகள்: பி.எட்., மற்றும் எம்.எட்., நுழைவு படிப்புக்கான தேர்வுகள் ஆக.,19ல் நடப்பதாக இருந்தது. இவை ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நாகராஜன் பொறுப்பேற்றார்.

பள்ளிக்கல்வி இயக்குனர் திரு ப.மணி அவர்கள் ஓய்வு பெற்றதையடுத்து தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தரா தேவி அவர்களிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.