தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போல ஒரே தேதியில், ஒரே வித வினாத்தாளுடன் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்குகிறது.



தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போல ஒரே தேதியில், ஒரே வித வினாத்தாளுடன் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி தொடங்குகிறது.தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு போல ஒரே தேதியில் ஒரே வித வினாத்தாளுடன் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் (மெட்ரிகுலேசன் பள்ளிகள்) ஆகியவற்றில் இதுவரை பொதுத்தேர்வு மட்டுமே ஒரே நாளில் ஒரே வித வினாத்தாளுடன் நடைபெற்று வந்தது. காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுகள் அந்தந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் முடிவுபடிதான் இதுவரை தேர்வுகள் நடந்துவந்தன.ஆனால் பல தனியார் பள்ளிகளில் 9-வது வகுப்பில் உள்ள பாடங்கள் முழுவதையும் நடத்தாமல் டிசம்பர் மாதம் முதல் 10-வது வகுப்பு பாடத்தை நடத்திவந்தனர். அதுபோல 11-வது வகுப்பு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய பாடங்களை முழுமையாக நடத்தாமல் பிளஸ்-2 பாடங்களை டிசம்பர் மாதம் முதல் நடத்தி வந்தனர்.இந்த நிலை மாறவேண்டும். எல்லா வகுப்பு பாடங்களையும் மாணவர்கள் படித்தால்தான் அவர்களுக்கு அறிவு விருத்தியாகும் என்று கருதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி, முதன்மை செயலாளர் த.சபிதா ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரே நாளில் ஒரே வித வினாத்தாளுடன் தேர்வு நடத்த முடிவு செய்தனர்.அதன்படி தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு வினாத்தாளும் அச்சடிக்கப்பட்டு தேர்வுத்துறை மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு செப்டம்பர் 12-ந் தேதி தமிழ் முதல் தாள் பரீட்சை தொடங்குகிறது. 13-ந் தேதி தமிழ் 2-வது தாள், 14-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள், 15-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள். 17-ந் தேதி கணிதம், 18-ந் தேதி அறிவியல், 20-ந் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வுகள் பொதுத்தேர்வு போலவே தொடங்க உள்ளன. அதாவது காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். மாணவர்கள் அதை 10.10 மணிவரை வாசிக்கவேண்டும். 10.10 முதல் 10.15 வரை (5 நிமிடம்) விடைத்தாளில் தேர்வு பதிவு எண் உள்ளிட்டவற்றை நிரப்பவேண்டும். 10.15 மணி முதல் 12.45 மணிவரை தேர்வு நடைபெறும்.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதி தமிழ் முதல் தாள், 13-ந் தேதி தமிழ் 2-வது தாள், 14-ந் தேதி ஆங்கிலம் முதல் தாள், 15-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள், 17-ந் தேதி கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலாஜி, நிïட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ், 18-ந் தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல், 20-ந் தேதி இயற்பியல், பொருளாதாரம், 21-ந் தேதி கம்ïனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்ïட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி, தட்டச்சு, 22-ந் தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, 24-ந் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம், 25-ந் தேதி அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில்கல்வி தேர்வு காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். 10.10 மணிவரை அதை வாசித்துப்பார்க்கலாம். 10.10 மணி முதல் 10.15 மணிவரை தேர்வு எண் உள்ளிட்டவற்றை நிரப்பவேண்டும்.10.15 மணி முதல் 1.15 மணிவரை தேர்வு நடைபெறும்.மாணவ-மாணவிகள் 10.15 மணிக்கு பின்னர் அனுமதிக்கப்படமாட்டார்கள்.பிளஸ்-2 தேர்வை 7 1/2 லட்சம் பேர்கள் எழுத உள்ளனர்.முதல் முதலாக, ஒரே நாளில் ஒரே வித கேள்வித்தாள் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதால் பொதுத்தேர்வில் அவர்கள் பயம் இன்றி எழுதமுடியும்.காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுகள் முடிந்ததும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரி மூலம் தேர்வுத்துறைக்கு அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறை அதிகாரிகளும் ஆங்காங்கே சென்று விடைத்தாள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்ய உள்ளனர்.

Comments

  1. Dear Sir,

    I m studying X std i saw the special guide released by govt in tamil, i want Special guide in English. please release if possible

    ReplyDelete

Post a Comment