பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கியது.


பி.எட். படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் நேற்று சென்னையில் தொடங்கியது. அதில் பார்வையற்ற மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.பி.ஏ., பி.எஸ்சி. படித்த பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் ஈடுபடுவதற்கு பி.எட். என்ற ஆசிரியர் பயிற்சி தேவை. அந்த பி.எட். படிப்புக்கான அரசு கல்லூரிகள் 7 உள்ளன. அரசு உதவிபெறும் கல்லூரிகள் 14 உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் உள்ள 2118 இடங்களில் மாணவர்களை பி.எட். சேர்க்க கவுன்சிலிங் சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பி.எட். கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. நேற்று பார்வையற்ற மாணவ-மாணவிகள், உடல் ஊனமுற்றவர்கள், பழங்குடியினர் மற்றும் மலைசாதியினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு நடத்தப்பட்டது.முதலில் பார்வையற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் தொடங்கியது. அப்போது மதுரையைச் சேர்ந்த மணிவண்ணன் என்ற மாணவர் சைதாப்பேட்டை பி.எட். கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 79.22-வதாக திருச்சியை சேர்ந்த மாணவர் பாலமுருகன் சைதாப்பேட்டை கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 78.8403-வதாக ஆர்.ஜெயராஜ் என்ற திருச்சி மாணவர் ஈரோடு மாவட்டம் குமாரப்பாளையத்தில் உள்ள பி.எட். கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 78.25.இவர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி சான்றிதழ் வழங்கி கவுன்சிலிங்கை தொடங்கிவைத்தார். மாணவர்சேர்க்கை செயலாளர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார்.முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் கூறுகையில், நாங்கள் கண்பார்வையை இழந்தாலும் மாணவர்களுக்கு கல்வி என்ற பார்வையை ஆசிரியர் பணியின் மூலம் நன்றாக கொடுக்க முடியும். அந்த ஆவலில்தான் பி.எட். படிக்க உள்ளோம் என்றனர்.பார்வையற்ற மாணவர்களுக்கு 7 அரசு பி.எட். கல்லூரிகளிலும் தலா 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. முன்னாள் ராணுவத்தினருக்கு 21 கல்லூரிகளிலும் தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டது. பழங்குடியினருக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன.பொது கவுன்சிலிங் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், புவியியல், தாவரவியல், விலங்கியல் உள்பட 13 வகையான பாடங்களுக்கு நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment