தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடநூல்களை எழுத முதுகலை பட்டப்படிப்பு முடித்த திறமையான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடநூல்களை எழுத முதுகலை பட்டப்படிப்பு முடித்த திறமையான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் தலைமையில் தற்போதுள்ள கல்விமுறையை மேம்படுத்த தமிழ்நாட்டுப் பாடநூல் கழகக் கூட்ட அரங்கில் மே 11, 2012 அன்று வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மேனிலைக் கல்விக்காக பாடத்திட்டம், பாடநூல்கள் எழுதும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் உயர்கல்வித் தகுதி, கற்பித்தல் அனுபவம், பரந்துபட்ட பாடநூல் அறிவு, பாடநூல் எழுதும் ஆற்றல், ஆர்வம் உள்ள மேனிலை வகுப்பு முதுகலை ஆசிரியர்களை emktamil@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிககு அனுப்பலாம்

No comments:

Post a Comment