Monday, October 1, 2012

தமிழகம் முழுவதும் 1,870 காலி இடங்களுக்கு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வை 3,473 மையங்களில் 9 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள். பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும். என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.


அரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக திகழும் வருவாய்த்துறையில் மிக முக்கியமான பதவியாகவும், பொதுமக்களோடு அன்றாடம் நேரடியாக தொடர்புள்ள பணியாகவும் வி.ஏ.ஓ. (கிராம நிர்வாக அதிகாரி) பதவி கருதப்படுகிறது. சாதி சான்றிதழ், வருமானச்சான்று, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, திருமண உதவி, பட்டா மாற்றம் என எந்த அரசு சான்றிதழ் ஆனால் அதற்கெல்லாம் வி.ஏ.ஓ.விடம் சான்று பெற்றாக வேண்டும்.
இந்த நிலையில், 1,870 வி.ஏ.ஓ. காலி பணி இடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வி.ஏ.ஓ. பதவிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுநிலை பட்டாதாரிகளும் இன்னும் சொல்லப்போனால் எம்.பில். பட்டதாரிகளும் போட்டிப்போட்டு ஆன்லைனில் விண்ணப்பித்தார்கள். விண்ணப்பங்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது.
இந்த நிலையில், வயது வரம்பு உள்பட பல்வேறு குறைபாடுகள் காரணமாக பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு ஏறத்தாழ 9 லட்சத்து 76 ஆயிரம் பேர் தேர்வு எழுத தகுதிபெற்றனர். அவர்களுக்கு ஆன்லைனிலேயே ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. தேர்வு எழுதுவோரின் வசதிக்காக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மட்டுமின்றி தாலுகா தலைநகரங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, வி.ஏ.ஓ. தேர்வு நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் 3,473 மையங்களில் 9 லட்சத்து 62 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் ஆண்கள் 5 லட்சத்து 41 ஆயிரம் பேர். பெண்கள் 4 லட்சத்து 21 ஆயிரம் பேர். முன்னாள் ராணுவத்தினர் 2,500 பேரும் தேர்வில் கலந்து கொண்டனர்.வி.ஏ.ஓ. தேர்வு சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராயப்பேட்டை புதுக்கல்லூரி, மாநகராட்சி பள்ளிகள், அரசு பள்ளிகள் உள்பட 259 மையங்களில் நடந்தது. 70 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்திற்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் காலை 10.45 மணிக்குச்சென்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
1,870 வி.ஏ.ஓ. காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த தேர்வை 4 லட்சத்து 21 ஆயிரம் பெண்கள் உள்பட ஏறத்தாழ 73/4 லட்சம் பேர் எழுதுகிறார்கள். அதிகபட்சமாக சென்னையில் 70 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரையில் 52 ஆயிரம் பேரும், திருநெல்வேலி, சேலத்தில் தலா 51 ஆயிரம் பேரும், கடலூரில் 47 ஆயிரம் பேரும், விழுப்புரத்தில் 41 ஆயிரம் பேரும், வேலூரில் 38 ஆயிரம் பேரும் தேர்வில் கலந்துகொள்கிறார்கள்.
வினாத்தாள் அவுட் ஆவதை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி இருந்தோம். வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து வாகனங்களில் தேர்வு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுவது முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வர்கள் தேர்வு எழுதுவது வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அதிகளவு தேர்வர்கள் எழுதும் இடங்கள், தொலைதூர பகுதிகள், மலைவாழ் பகுதிகள் போன்ற 150 இடங்கள் முக்கியமான மையங்களாக கருதப்பட்டு அவை ஆன்லைன் மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படுகின்றன.
தேர்வு முடிந்தவுடன், எப்படி வினாத்தாள் கட்டுகள் தேர்வு மையங்களுக்கு கொண்டுவரப்பட்டது முழுவதும் வீடியோவில் பதிவுசெய்யப்பட்டதோ, அதேபோன்று தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள் கட்டுகள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு கொண்டுவரப்படுவதும் முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்படும்.
கேள்விக்கான விடை விவரங்களை (கீ ஆன்சர்) டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும். அதுதொடர்பான விளக்கங்களை ஒரு வாரத்திற்குள் தெரிவித்துவிட வேண்டும். அதன்பிறகு விடைகள் உறுதி செய்யப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்கும். தேர்வு முடிவினை ஒரு மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் இவ்வாறு நட்ராஜ் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினரும், சிறப்பு பறக்கும் படையினரும் தேர்வு மையங்களுக்குச்சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
முக்கிய தேர்வு மையங்களை ஆன்லைனில் கண்காணிப்பதற்காக சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் டி.உதயச்சந்திரன் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தேர்வு மையங்களை ஆன்லைனில் கண்காணித்தார்.
வி.ஏ.ஓ. தேர்வில் மொத்தம் 200 கேள்விகள். அதில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்களும், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து 100 கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தன. தேர்வர்களின் நலன் கருதி ஒவ்வொரு கேள்வியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி கொடுக்கப்பட்டு இருந்தது. ஒரு வினாவுக்கு 11/2 மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள்.தேர்வு எழுதியவர்கள் விடைகளை அறிந்துகொள்ளும் வகையில் விடை விவரங்கள் (கீ-ஆன்சர்) டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (ஷ்ஷ்ஷ்.åஸீஜீæநீ.ரீஷீஸ்.வீஸீ) இன்று (திங்கட்கிழமை) மதியம் வெளியிடப்படுகிறது. விடைகளில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது தவறான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து ஒரு வாரத்திற்குள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, இ-மெயில் மூலமாகவோ டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு தெரியப்படுத்திட வேண்டும்.
பொதுவாக, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் நடப்புக்கால நிகழ்ச்சிகளில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் கேள்விகள் கேட்கப்படும். அண்மையில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள், விருது பெற்றவர்கள், விளையாட்டு போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும். ஆனால், நேற்று நடந்த வி.ஏ.ஓ. தேர்வில் இந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் எதுவும் கேட்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தேர்வு எழுதியவர்கள் சோகத்துடன் கூறினார்கள். தமிழ் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்தது என்று ஒருசிலரும், கிட்டதட்ட எல்லா கேள்விகளுமே யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது என்று ஒருபிரிவினரும் தெரிவித்தனர்.
வி.ஏ.ஓ. பதவியை பொருத்தவரையில், எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றாலே வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், வி.ஏ.ஓ. தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. இந்த பணிக்கு ஆரம்பநிலை சம்பளம் தோராயமாக ரூ.14 ஆயிரம் ஆகும். பணிஅமர்த்தப்படும் இடத்திற்கு ஏற்ப (கிராமப்புறம், நகர்ப்புறம்) சம்பளம் சற்று ஏறக்குறையாக இருக்கும்.
வி.ஏ.ஓ. தேர்வுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் ஏறத்தாழ 9 லட்சத்து 76 ஆயிரம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். மற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தேர்வுக்கு தகுதிபெற்ற அனைவருக்கும் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த எழுத்துத்தேர்வில் 7 லட்சத்து 81 ஆயிரம் பேர் (80 சதவீதம் பேர்) மட்டுமே கலந்து கொண்டனர். கிட்டதட்ட ஒரு லட்சத்து 95 ஆயிரம் பேர் தேர்வு எழுத வராமல் `ஆப்சென்ட்' ஆகிவிட்டதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment