மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியினை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டீசல்விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் கடும் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியினை மத்திய அரசு 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 58 சதவீதம் இருந்ததை 65 சதவீதமாக உயர்த்தி, ஜனவரி 1 2012-ம் ஆண்டில் இருந்து கணக்கிடப்பட்டது. தற்போது அகவிலைப்படியை மேலும் 7 சதவீதமாக அதிகரித்து 65 ல் இருந்து 72 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சத்தி்ற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் என மொத்தம் 80 லட்சம் பேர் பயனடைவர். இது ‌கடந்த ஜூ‌லை 1-ம் தேதி முதல் கணக்கீட்டு அதற்கான நிலுவைத்தொகை வழங்கப்படலாம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments