விருதுநகரில், பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை வழங்கியதால், ஆத்திரமடைந்த அவன், ஆசிரியரை கத்தியால் குத்தி தப்பினான். விருதுநகர், தனியார் பள்ளியில், 4,000 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில், கம்மாபட்டியை சேர்ந்த ராஜேஷ், 14 (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.ஒரு வாரமாக ராஜேஷ், பள்ளிக்கு செல்லவில்லை; கணக்கு பாடத்தில், குறைந்த மதிப்பெண் பெற்றான். நேற்று முன்தினம், பள்ளிக்கு வந்த ராஜேஷை, கணித ஆசிரியர் பாண்டியராஜன், வகுப்பறையின் வெளியே நிற்க வைத்தார். நேற்று பிற்பகல், 12:00 மணிக்கு, ஆசிரியர் பாண்டியராஜன், வகுப்பறை போர்டில் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது ராஜேஷ், ஆசிரியரின் இடுப்புக்கு கீழ் பகுதியில், கத்தியால் குத்தி தப்பி ஓடினான். லேசான காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து, போலீசில் புகார் தரப்படவில்லை.
ஆசிரியர் பாண்டியராஜன் கூறுகையில், ""பள்ளிக்கு தொடந்து வராமலும், அன்று தாமதமாக வந்ததாலும், வகுப்புக்கு வெளியில் நிற்க வைத்தேன். நேற்று, வகுப்புக்கு சென்ற போது, அவனாகவே வெளியில் நின்று கொண்டிருந்தான். நான் எழுதிக் கொண்டிருந்த போது, கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டான்,'' என்றார்.
முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி கூறுகையில், ""பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு, மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது,'' என்றார்.
இவன் இப்படி ஏன் ஆனான்? : மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவு பேராசிரியர் வெ.ராமானுஜம்:வகுப்பறையில் அனைத்து மாணவர்களுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. சிலர் எளிதில் உணர்ச்சி வசப்படுவர். திட்டினாலோ, அடித்தாலோ உடனடியாக ஏதாவது செய்துவிடுவர். மற்ற மாணவர்கள் முன்னிலையில், ஒரு மாணவனை மட்டும் விமர்சிக்கும் போது, தனது சுயமதிப்பீடு பாதிப்பதாக நினைப்பது உண்டு. வளரும் சூழ்நிலை, பெற்றோர் வளர்ப்பைப் பொறுத்து, இது மாறுபடும். சினிமாவை, இதற்கு காரணமாக சொல்லலாம். கத்தியோடு வகுப்பறைக்குள் நுழைந்திருக்கிறார் என்றால், முந்தைய சம்பவங்களின் தொடர்ச்சியாக இருக்கலாம். "விடலைப் பருவத்தில்' தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள மாட்டார்கள்; பெற்றோர், ஆசிரியர் சொல்வதை கேட்க மாட்டார்கள். விலங்குகளை கல்லை விட்டு எறிவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவர்; பெண்களை கேலி செய்வர். இதை நடத்தைக் கோளாறு என்பர். பெரியவரானால் மற்றவர்களைப் போல, விதிமுறைகளை பின்பற்ற மாட்டார்கள். அடுத்தவர்களை துன்புறுத்தி, திருடுவது என, சமூகப் பார்வையிலிருந்து விலகியிருப்பர்.ஆசிரியர்கள் இத்தகைய மாணவர்களை தனியாக பிரிக்க முடியும். அவர்களை, பெற்றோருக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும். உளவியல் ரீதியாக மட்டுமே, இவர்களை சரிசெய்ய முடியும்.