ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு 15.11.2012 முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு பணி நியமனம் கலந்தாய்வு. 2010-11-ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்திட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டு ஒதுக்கீடு பெறப்பட்டும், மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட பணி நாடுநர்களுக்கு எதிர்வரும் 15.11.2012 முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும். மேற்கண்ட நாளில் அழைப்பாணை பெறப்பட்ட பணிநாடுநர்களை உரிய சான்றுகளுடன் தவறாது ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment