அரசு தொழிற்கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட், நவம்பர் 20 முதல் வழங்கப்படுகிறது.

அரசு தேர்வு துறையால், ஓவியம், தையற்கலை, நடனம் மற்றும் இசை பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடனம், 21ம் தேதியும், ஓவியம், 22ம் தேதி முதல், டிச., 5ம் தேதி வரையும், தையற்கலை, டிச., 6ம் தேதி முதல், 12ம் தேதி வரையும், இந்திய இசை கீழ்நிலை, மேல் நிலை, டிச., 7ம் தேதியும் நடக்கின்றன.இத்தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டை, நாளை முதல், அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையங்களில் பெற்றுகொள்ளலாம். தேர்வு மையங்கள் விவரம் அனைத்து முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் அரசு தேர்வுகள் மண்டல அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment