பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று ( 21.11.12 ) துவங்கியது.

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று துவங்கியது.கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, 2 சதவீத பணி வாய்ப்பு வழங்க, அரசுஉத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, 25 முதுகலை ஆசிரியர், வேதியியல்பட்டதாரி ஆசிரியர்கள், 14 பேர், முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, நேற்று துவங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி வரை, பல்வேறு பணி நியமனக் கலந்தாய்வு நடக்கிறது.தாங்கள் பணிபுரியும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தபடி, இணையதளம் வழியாக, கலந்தாய்வில் சம்பந்தப்பட்டவர்கள் பங்கேற்றனர்.வழக்கமாக, பணி நியமனம், பதவி உயர்வுக் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு என, எல்லாமே, சென்னையில் நடக்கும். இதற்கு, மாநிலம்முழுவதிலும் இருந்து,ஆசிரியர்கள் சென்னைக்கு வருவது வழக்கம்.பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் பதவியேற்றதில் இருந்து, அனைத்து கலந்தாய்வுகளும், இணையதளம் வழியாக நடந்து வருகிறது. ஏற்கனவே, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக இவர் இருந்தபோது, அத்துறையில், இணையவழி கலந்தாய்வுத் திட்டத்தை அமல்படுத்தினார்.அதே நடைமுறை, தற்போது பள்ளிக் கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

5 comments:

 1. sir i am vasudevan from vellore. i have been selected in pg trb 2012. though we have been selected 4 months before why still posting is not allotted? and then tet has been conducted after pg trb. but in recent one or two days in news paper news about tet teachers appointment is coming on. how can they be appointed before our appointment and tell me when will be out pg's appointment?

  ReplyDelete
 2. DONT WORRY.YOUR POSTING WILL COME FIRST.

  ReplyDelete
  Replies
  1. thank you for your most awaited reply. so appointment will be before tet's appointment. can i expect by next week?

   Delete
 3. வாழ்த்துக்கள் வாசு சார். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்

  ReplyDelete
  Replies
  1. thank you so much sir for your greetings and blessings.

   Delete