அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு `ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு `ஸ்மார்ட் கார்டு' வழங்கினார்



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு `ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு `ஸ்மார்ட் கார்டு' வழங்கினார்இந்த ஸ்மார்ட் கார்டில், மாணவ, மாணவியரின் பெயர், பெற்றோர் முகவரி, பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும்.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக் கல்வித்துறைக்கென கல்வி தகவல் மேலாண்மை முறைமையினை (இ.எம்.ஐ.எஸ்.) முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 5-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் நான்கு இணைய தளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதில்,ஷ்ஷ்ஷ்.ணீபீனீவீஸீ.åஸீæநீலீஷீஷீறீæ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளம் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் இணையதளம் ஆகும். இந்த இணையதளத்தில் பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு பாதுகாக்கபட்டு உள்ளது.

மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு "ஸ்மார்ட் கார்டு'' வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் முன்னோட்டமாக, திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, அய்லாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, எட்டரை அரசு மேல்நிலைப் பள்ளி, இனாம் குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள விவரங்கள் அனைத்தும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் (இ.எம்.ஐ.எஸ்.) ஒருங்கிணைக்கப்படும்.

இந்த ஸ்மார்ட் கார்டு மூலம், மாணவ, மாணவியரின் பெயர், பெற்றோர் முகவரி, பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். மேலும், மாணவ, மாணவிகள் குடும்பச் சூழ்நிலைக் காரணமாக இடம்பெயர நேரும்போது இதில் பதிவு செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் எந்தப் பள்ளியிலும் சேர முடியும்.மேலும், மாணவர்களின் இடைநிற்றல் துல்லியமாகக் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கை செய்திட வழிவகை செய்யப்படுவதுடன் அரசு வழங்கும் நலத் திட்டங்களுக்கு மாணவ, மாணவியரை தெரிவு செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் மூலம் 91 லட்சத்து 54 ஆயிரத்து 741 மாணவ, மாணவியர் பயன்பெறுவர். மாணவ, மாணவியர்களின் உடல்நலம் குறித்த விவரங்களை பதிவு செய்யும் ஹெல்த் கார்டுடன் "ஸ்மார்ட் கார்டு'' ஒருங்கிணைக்கப்படும். இத்திட்டம் படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும்.

2011-12-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்றுள்ள 4 லட்சத்து 60 ஆயிரத்து 779 மாணவ, மாணவியருக்கு முதிர்ச்சியடைந்த சிறப்பு ஊக்கத் தொகையினை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார்.மாணவர்கள் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, 2011-12-ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் முதல்-அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10, 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ரூ.1,500-ம், 12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ரூ.2 ஆயிரமும் அவர்களின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அவர்கள் 12-ம் வகுப்பு முடிக்கும் போது வட்டியுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2011-12-ம் கல்வியாண்டில் 21 லட்சத்து 36 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.313 கோடியே 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2012-13-ம் கல்வி ஆண்டில் 21 லட்சத்து 52 ஆயிரத்து 986 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.353 கோடியே 56 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் வருமானம் ஈட்டும் தாய் தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, அப்பெற்றோரின் குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவிற்காக ஒரு மாணவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிரந்தர வைப்பு நிதியாக வழங்கப்படும் என்ற திட்டத்தின் கீழ் 2011-12 மற்றும் 2012-13-ம் கல்வியாண்டுகளில் 720 மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடியே 60 லட்சத்திற்கான வைப்பு நிதி பத்திரங்களை மாணவ, மாணவியருக்கு வழங்கினார். இந்த நிதியானது அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டி தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவற்றை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி மற்றும் பராமரிப்புச் செலவினை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

மாணவர்கள் நலன் கருதியும், கல்வி தரத்தை மேம்படுத்திடவும், சிறப்பான நிர்வாகத்தை வழங்கிடவும் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் ஆய்வுப் பணிகள், தேர்வுப் பணிகள், பள்ளிகளைப் பார்வையிடுதல் மற்றும் திட்டப் பணிகளைக் கண்காணித்தல் போன்ற பணிகளை தடையின்றி சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு 6 புதிய வாகனங்களும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு 9 புதிய வாகனங்களும், என மொத்தம் ரூ.83 லட்சத்து 460 செலவில் வாங்கப்பட்ட 15 புதிய வாகனங்களை வழங்கினார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment