ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் ரோசய்யா நாளை வழங்குகிறார்

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கல்வி மற்றும் மருத்துவப்பணியில் சிறந்து விளங்குவோரை தேர்வுசெய்து ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த டாக்டர் விருது, சிறந்த ஆசிரியர் விருது ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது. உயர்கல்வியில் இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு நிறைவு விழாவில் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதனுக்கு கவர்னர் கே.ரோசய்யா வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவிக்கிறார். சிறந்த டாக்டர் விருது, சிறந்த ஆசிரியர் விருது ஆகியவையும் வழங்கப்படுகின்றன. விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், துறையின் செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

No comments:

Post a Comment