சூரிய சக்தி கொள்கைக்கு அனுமதி : அரசாணை வெளியீடு

தமிழக அரசின் சூரிய சக்தி மின் கொள்கைக்கு அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.சூரிய சக்தி மூலம், மின் உற்பத்தியை பெருக்க, இந்தாண்டு அக்டோபர் 20ம் தேதி, புதிய சூரிய தி கொள்கையை, தமிழக அரசு வெளியிட்டது. அதில், உயரழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நுகர்வோர், தங்கள் மொத்த பயன்பாட்டில், 6 சதவீதத்தை, சூரிய சக்தியில் உற்பத்தியாகும், மின்சாரத்தில் இருந்து பெறுவது கட்டாயம்; உற்பத்திக்கு ஊக்கத்தொகை உள்ளிட்டவை இடம்பெற்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அதே போல், மாநில அர”ம் மானியம் வழங்கும் என, பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், இதுவரை எவ்வித மானியத்தையும், தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்நிலையில், சூரிய சக்தி கொள்கைக்கு அனுமதி அளிக்க, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை அரசிடம் கோரியது. இதையடுத்து, தீவிர ஆய்வுக்கு பின், சூரிய சக்தி மின் கொள்கைக்கு அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment