மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்த்துவதற்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்.


மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்த்துவதற்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்.
தலைமையாசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்:
# ஒவ்வொரு தலைமையாசிரியரும் தமது பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி சகவிகிதத்தை மாநிலச் சராசரித் தேர்ச்சி சதவிகிதத்தைவிட 5 விழுக்காடு உயர்த்துவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
# ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி சதவிகிதம் குறைவாகக் காட்டிய ஆசிரியர்களுக்கு வாரம் ஒருமுறை கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கித் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அந்த ஆசிரியர்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்களின் பாடத்தில் தேர்ச்சி சதவிகிதம் உயர்த்துவதற்குத் தலைமையாசிரியர் உறுதுணையாக இருக்கவேண்டும்.
# தோல்வி அடைந்த மாணவர்களுக்கான மாலைநேர வகுப்புகள் நடத்தும்பொழுது, அவர்களுக்குச் சிற்றுண்டி வழங்குவதற்குப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அப்பகுதியில் உள்ள கொடையுள்ளம் கொண்ட சமூக ஆர்வலர்களை நாடி, உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
# தேர்ச்சி குறைந்த மாணவர்களின் பெற்றோரை அவர்களின் வசதிக்கேற்ற நாளில் வரவழைத்து, அவர்தம் பிள்ளைகளின் கல்வித்தேவையை உணர்த்தி, உறுதுணையாக இருக்கவும், அவர்கள் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும் வேண்டும்.
# தேர்ச்சி குறைந்த மாணவர்தம் பெற்றோரின் செல்பேசி எண்ணைப் பெற்றுத் தலைமையாசிரியரே அப்பெற்றோர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்தம் பிள்ளைகளின் கல்விநிலை குறித்து எடுத்துக்கூறவேண்டும்.
# பள்ளிப் பொதுத் தேர்வின் ஒட்டுமொத்தச் சராசரி மதிப்பெண்ணைவிடக் குறைந்தபட்சம் 5 சதவிகிதம் உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
# பத்தாம் வகுப்பு தேர்ச்சி குறைந்த மாணவர்களை 6 முதல் 10ஆம் வகுப்புவரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒவ்வொருவருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் பொறுப்பை வழங்கவேண்டும்.
# அப்பொறுப்பைத் தொடர்ந்து தலைமையாசிரியர் கண்காணித்து மாணவர்தம் முன்னேற்றத்தை உறுதிசெய்ய வேண்டும்.
# பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி குறைந்த மாணவர்களை 11 மற்றும் 12ஆம் வகுப்புக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொருவருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரித்தளித்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை முறையாகச் செய்கிறார்களா என்பதைத் தலைமையாசிரியர் உறுதிசெய்யவேண்டும்.
# ஒரு பாடம் மற்றும் இரு பாடங்களில் தேர்ச்சி குறைந்த மாணவர்களுள் 20 பேரைத் தன்பொறுப்பில் தத்தெடுத்து, அவர்தம் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் முழுப்பொறுப்பையும் தலைமையாசிரியர் ஏற்கவேண்டும்.
பாட ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்:
# என் பாடத்தில் 100 சதவிகிதத் தேர்ச்சியை அளிப்பேன்.
# நான் ஒரு போதும் பள்ளித் தேர்ச்சி சதவிகித குறைபாட்டிற்குக் காரணமாக இருக்கமாட்டேன்.
# சென்ற ஆண்டு என்னுடைய பாடச் சராசரி மதிப்பெண்ணைக் காட்டிலும் 5 சதவிகிதம் கூட்டுவேன்.
- என்னும் மூன்று உறுதிமொழிகளையும் பாட ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
# முக்கியமான வினாக்களுக்கான விடைகளை வகுப்பறைகளிலேயே மாணவர்களை எழுதச்செய்து, தேர்ச்சி குறைந்த மாணவர்களின் விடைத்தாள்களைச் சரிபார்த்து உரிய வழிகாட்டுதல்களை மேற்கொள்ள வேண்டும்.
# தேர்ச்சி சதவிகிதம் குறைந்த மாணவர்களுக்கு ஆசிரியரே விடைக்குறிப்புகளை எளிமைப்படுத்தி வழங்க வேண்டும்.
# பொதுத்தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்கான விடைகளைத் தேர்ச்சி குறைந்த மாணவர்களுக்குக் கொடுத்துப் பயிற்சி அளிக்கவேண்டும்.
# தேர்ச்சி சதவிகிதம் குறைந்த பாடங்களுக்கான ஆசிரியர்கள், தத்தம் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு மணிநேரம் அம்மாணவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்திக் கற்பிக்க வேண்டும்.
# தேர்ச்சி சதவிகிதம் மாணவர்கள் குறைந்தபட்சத் தேர்ச்சி சதவிகிதம் பெறும்வகையில் ஒருமதிப்பெண் வினாக்களுக்கான பயிற்சி அளிக்கவேண்டும்.
# அவர்களுக்கு எளிதில் மதிப்பெண் பெறக்கூடிய பாடப்பகுதிகளில் அடிக்கடி பயிற்சி அளிக்கவேண்டும். (சான்றாக, கணக்கு-ஜியோமிதி, சமூக அறிவியல்- மேப்)

Comments