டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவருக்கு வாய்ப்பு

டி.இ.டி., முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், பலர், கடும் மழை காரணமாக, கடந்த மாதம், 31ம் தேதி நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மாவட்ட தலைமை இடங்களில், கடந்த மாதம், 31ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. கடும் மழை காரணமாக, நீண்ட தொலைவில் இருந்ததேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை.

இவர்களுக்கு, மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பது குறித்து, எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள், நேரடியாக, டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம். அவர்களுக்கு, எவ்வித பிரச்னையும் இல்லை' என, தெரிவித்துள்ளன.

1 comment:

  1. will there be any exams for computer science teacher pls inform me sir

    ReplyDelete