KALVISOLAI TNPSC

Saturday, 22 December 2012

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளங் கல்வியியல் (பி.எட்.) தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து பல்கலைக்கழகக் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சி. சுந்தரேசன் தெரிவித்தது: இந்தப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடைபெற்ற இளங் கல்வியியல் (பி.எட்.) தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வுகள் டிச. 1 முதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை www.tamiluniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் பார்க்கலாம். இந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிட்டால் தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்குப் பணி மேம்பாடு கிடைக்கும். அதைக் கருத்தில் கொண்டு துணைவேந்தர் ம. திருமலை அறிவுறுத்தலின் பேரிலும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) இ. அங்கயற்கண்ணி வழிகாட்டுதலின்படியும் தேர்வு நடத்தி 20 நாள்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது என்றார் சுந்தரேசன்.

No comments:

Post a comment