KALVISOLAI TNPSC

Wednesday, 20 February 2013

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வு 27ம் தேதி துவங்கி ஏப்., 12ம் தேதி வரை நடக்க உள்ளது. மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் 93 தேர்வு மையங்களும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் 137 மையங்களிலும் நடக்கிறது. பிளஸ் 2 தேர்வினை 17 ஆயிரத்து 639 மாணவர்களும், 17 ஆயிரத்து 552 மாணவிகளும் என 35 ஆயிரத்து 191 பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வினை 19 ஆயிரத்து 921 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.புதிய மையங்கள் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி புதியதாக 7 தேர்வு மையங்கள் துவக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பெருமங்கலம் அரசு பள்ளி, சோமண்டார்குடி அரசு பள்ளி, கள்ளக்குறிச்சி ஆர்.ஆர்.கேம்பிரிட்ஜ் ஆகிய பள்ளிகளில் புதியதாக தேர்வு மையம் அமைகிறது. பிளஸ் 2 தேர்வுக்கு, திருநாவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியசிறுவத்தூர் அரசு பள்ளி, அரகண்டநல்லூர் அரசு பள்ளி, கணக்கன்குப்பம் லூர்துஅன்னை பள்ளிகளில் புதிய மையங்கள் துவக்கப்படுகிறது.பறக்கும் படைகள் கலெக்டர் சம்பத் தலைமையில், தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், தேர்வின் போது முதன்மை கல்வி அலுவலர்கள் முனுசாமி தலைமையில் 6 பறக்கும் படை குழுக்களும், முருகன் (எஸ். எஸ்.ஏ.,திட்டம்) தலைமையில் 4 பறக்கும் படை குழுக்களும், விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் செங்குட்டுவன் தலைமையில் 4 குழுக்களும், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் மணி தலைமையில் 4 குழுக்களும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மல்லிகா தலைமையில் 3 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சப்- கலெக்டர்கள், வருவாய்த் துறையினர் தலைமையிலும் குழுக்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர். தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், வினாத்தாள் காப்பாளர்கள், பறக்கும் படையினர் என 2,307 பேர் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர். மாணவர்கள் நல்ல முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கலெக்டர் சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார். பிட் அடித்தால்...தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்வு மையத்தில் பிட் பேப்பர், புத்தகம் வைத்திருந்தால் அந்த மாணவர் ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். பிட் அடித்தல், காப்பியடித்தால் இரண்டாண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை மிரட்டுவது, மற்ற மாணவரின் பேப்பரை பிடுங்கி எழுதுவது போன்றவற்றில் ஈடுபட்டால், அந்த மாணவர்கள் தேர்வு எழுத நிரந்தர தடை விதிப்பதோடு, போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் ரத்து? தேர்வு மையத்தில் தவறாக தேர்வு எழுதப்படுவது தெரிந்தால், தேர்வு மைய தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளியாக இருந்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். தேர்வு மையத்திற்கு மொபைல் போன், பேஜர் எடுத்து வரக்கூடாது. மீறி வந்தால் போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வின் போது மாணவர்கள் உரிய நேரத்தில் செல்வதையும், தேர்வு முடிந்து வீட்டிற்கு வருவதையும் பெற்றோர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும். உடல் உபாதை தராத உணவுகளை வழங்கி பெற்றோர்கள் உதவிட வேண்டும்.

No comments:

Post a comment