KALVISOLAI TNPSC

Wednesday, 20 February 2013

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில், "சிடி'யில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில், "சிடி'யில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. தொலைதூர பகுதியில் வாழும் பின்தங்கிய மக்கள், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலம் கல்வி கற்று வருகின்றனர். தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மற்றும் பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் கல்வி கற்கின்றனர். திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகம் மட்டுமே ஆசிரியராக உள்ளதால், அதற்கேற்ப சுவாரசியமாக, பாடங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பத்தில், மாணவர்களுக்கு பாடங்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, "சிடி, டேப்லெட்' மூலம் பாடங்கள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா கூறியதாவது: முதுகலை தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட பாடங்கள், மாணவர்கள் எளிதில் படிக்கும் வகையில், "சிடி'யில் வழங்கப்பட உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு குறித்து, தமிழறிஞர்கள் கு.வே.பாலசுப்ரமணியன், கந்தசாமி, தமிழன்னல் உள்ளிட்டோரின் சொற்பொழிவு, "சிடி'யில் இடம் பெறும். இதன் மூலம், மாணவர்கள் வீட்டிலிருந்த படி, சொற்பொழிவு மூலமாக, எட்டுத்தொகை, பத்துப்பாட்டை எளிதில் படிக்கலாம். மாணவர்கள் மட்டுமல்லாமல், தமிழார்வம் உள்ளவர்களுக்கும், "சிடி' பெரிதும் உதவும். இதற்காக, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளது. ஓராண்டுக்குள், இப்பணி முடியும். இவ்வாறு, சந்திரகாந்தா கூறினார்.

No comments:

Post a comment