KALVISOLAI TNPSC

Friday, 15 March 2013

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. வரும் 27ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. இதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 1 தேர்வுகளும் தற்போது நடந்து வருகின்றன. உயர்நிலைப் பள்ளிகளில் இந்த மாத இறுதியில் தேர்வு நடத்தப்படு கிறது. ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் ஏப்ரல் மாதம் இறுதியில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படும். அதன் பின்னர் மே மாதம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும்.பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை மே மாதம் முதல், 2வது வாரத்தில் வெளியிட பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. மே மாதம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1-ல் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி சனிக்கிழமை என்பதால் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a comment