Posts

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே.9 ம் தேதி அன்றும்,பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.31ம் தேதி அன்றும் வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வைப் போன்று மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வையும் இனி ஆண்டுக்கு இரண்டு தடவை நடத்த தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,063 உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் 9–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 4 முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் அறிவித்துள்ளார். மே 20ஆம் தேதி வரை பொறியியல் படிப்பு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

பிளஸ்–2 முடித்துவிட்டு என்ஜினீயரிங் சேர முடிவை நோக்கி இருக்கும் மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்களை இப்போதே பெற்று தயாராக வைத்திருங்கள் என்று அண்ணாபல்கலைக்கழகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் 3–ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை உதவி பிரிவு அதிகாரி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது

ஜூன் மாதம் நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தது. மே 10–ந்தேதிக்குள் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறந்த புத்தக தேர்வு முறையை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார்.

அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

TNPSC துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2013 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், முதுகலை பட்ட படிப்பு தேர்வுக்கு, வரும், 29ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அரசாணை வெளியிட்டும், தேர்வு பணிகள் துவங்குவதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், "புளு பிரின்ட்' அடிப்படையில் கேள்விகள் அமையாததால், மாணவர்களுக்கு, 10 சிறப்பு மதிப்பெண் வழங்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

TET முதல் இரு தேர்வு முடிவுகள்-ஒரு பார்வை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்.,17ல் துவங்குகிறது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

நந்தன ஆண்டு நிறைவுபெற்று வெற்றிகரமான விஜய தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது.கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

மாணவர்களின் புத்திக்கூர்மையை சோதிக்க புதிய தேர்வு முறையை வருகிற கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்துகிறது.

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை -பலர் "சென்டம்' பெற அதிக வாய்ப்பு : மாணவர்கள், ஆசிரியர் மகிழ்ச்சி

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர், பிரானுக்கு, 92, உயரிய, "தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், அதற்கான கட்டணத்தை செலுத்தவும் ஒருங்கிணைந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. முன்பு போல தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

17 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : பள்ளிக்கல்வித்துறை

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் 66 மையங்களில் வரும் 15ம் தேதி துவங்கி (CE,SO 15, AE 16) 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி,சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 221 மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போனதால் அவர்களின் ஆங்கிலம் இரண்டாம் தாள் மதிப்பெண்களே முதல் தாளுக்கு வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

முதுகலை தாவரவியல் ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.

2013-2014 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சத்தியமங்கலம் தேர்வு மையத்தின் காணாமல் போன 10ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு முழுமதிப்பெண் வழங்குவதற்கு பதில், அந்த 221 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

தேசிய திறனாய்வு தேர்வு முடிவு வெளியீடு

செஞ்சி, சத்தியமங்கலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 221 மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமாகியுள்ளது.

மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்விஸ் (பிரிமிலினரி தேர்வு) ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஏப்ரல் 4 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் படித்த பெண்ணுக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரி தான் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 ல் தேர்வானவர்கள் மற்ற துறைகளைவிட, கல்வித்துறை அலுவலக பணியில் சேர ஆர்வம்

தேர்வுத்துறை இணை இயக்குனர் (மேல்நிலைக்கல்வி) ஆரோக்கியசாமி கடந்த 31ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மூலம் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு எழுதிய மாணவ&மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 8 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.

1.4.2013 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 151 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 134 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் 19 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 4 ஆம் தேதி உயர் கல்வித்துறை மற்றும் மே 10 ஆம் தேதி பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.