KALVISOLAI TNPSC

Tuesday, 2 April 2013

1.4.2013 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 151 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 134 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.


தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 154 உதவி பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 139 விரிவுரையாளர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கிணங்க, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு 151 உதவி பேராசிரியர்களும், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு 134 விரிவுரையாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் 151 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 134 விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செடீநுயப்பட்டுள்ளவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 1.4.2013  ன்று பணி நியமன ஆணைகளை வழங்கி, மாணவ மாணவியர்களுக்கு சிறந்த முறையில் கல்வி பயிற்றுவித்து, அவர்தம் வாழ்வில் உயர்ந்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று புதிதாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடமிருந்து பணி நியமன ஆணைகளைப் பெற்றுக் கொண்ட உதவி பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை மாண்புமிகு தமிடிநநாடு முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வின் போது, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், உயர்கல்வித் துறை கூடுதல் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a comment