KALVISOLAI TNPSC

Monday, 1 April 2013

தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் 19 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.


இலங்கை பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரி களுக்கு கடந்த 15ம் தேதி முதலும், பொறியியல் கல்லூரிகளுக்கு 18ம் தேதி முதலும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. அதோடு விடுதிகளும் மூடப்பட்டன. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
மூடப்பட்ட கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதில் குழப்பமான தகவல்கள் வெளி யாகி வந்தன. மாணவர்களும் தேர்வு குறித்த அச்சத்தில் தவித்து வந்தனர். இந்நிலையில், கலை&அறிவியல், பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் நாளை (3ம் தேதி) முதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் சட்ட கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. பொறியியல் கல்லூரி திறப்பு குறித்து, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) காளிராஜ் கூறியதாவது:
பொறியியல் கல்லூரிகள் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்பு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் அனைத்திலும் வகுப்புகள் தொடங்கும். கல்லூரி தொடங்க இன்னும் ஒரு நாள் இருப்பதால், வெளியூர் மற்றும் விடுதி மாணவர்களுக்கு கால அவகாசம் போதுமானதாக இருக்கும். அதேநேரம் செமஸ்டர் தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை. வழக்கமான தேதிகளில் செமஸ் டர் தேர்வுகள் நடைபெறும்.
இதுவரை விடுமுறை விடப்பட்ட நாட்களுக்குப் பதில், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கல்லூரிகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேற்று முதலே வகுப்புகள் நடைபெற தொடங்கியுள்ளன.

No comments:

Post a comment