KALVISOLAI TNPSC

Saturday, 13 April 2013

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர், பிரானுக்கு, 92, உயரிய, "தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர், பிரானுக்கு, 92, உயரிய, "தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தங்கத்தாமரை பதக்கத்துடன், பத்து லட்ச ரூபாய் ரொக்க பரிசுடன் கூடிய இந்த விருதுக்கு, இந்த ஆண்டு, பழம்பெரும் நடிகர், பிரான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பாலிவுட் படங்களில், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள பிரான், ஜான்ஜீர், டான் போன்ற படங்களில் நடித்து, பெயர் பெற்றவர். 2001ம் ஆண்டு, இவருக்கு, "பத்மபூஷன்' விருது கிடைத்தது.உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் பிரான், பெரும்பாலும் வெளியே வருவதில்லை.கடந்த, 1969ம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த விருதை, இயக்குனர்கள் சத்யஜித் ரே, சாந்தாராம், யாஷ் சோப்ரா, கே.பாலச்சந்தர், நடிகர்கள், தேவ் ஆனந்த், சவுமித்ரா சாட்டர்ஜி, நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், சிவாஜி கணேசன், தயாரிப்பாளர், எல்.வி.பிரசாத், இசையமைப்பாளர், நவ்ஷத், பாடகிகள் லதா மங்கேஸ்கர், ஆஷா போஸ்லே போன்றோர் பெற்றுள்ளனர்.

No comments:

Post a comment