KALVISOLAI TNPSC

Wednesday, 30 April 2014

ஆசிரியர் தேர்வில் , ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட , ' கிரேடு ' முறையை , சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வில் , ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட , ' கிரேடு ' முறையை , சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு , ஆசிரியர் தேர்வு வாரியம் , தகுதி தேர்வை நடத்துகிறது. இதில் , மொத்தம் , 100 மதிப்பெண்களுக்கு , குறைந்தபட்சம் , 60 சதவீதம்பெற வேண்டும். மீதி , 40 சதவீதம் , கல்வித் தகுதிக்காக என , நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி என்றால் , பிளஸ் 2 தேர்வுக்கு , 15 மதிப்பெண் ; ஆசிரியர் பட்டய படிப்புக்கு , 25 மதிப்பெண் என , 40 மதிப்பெண். பட்டதாரி ஆசிரியர் பணி என்றால் , பிளஸ் 2 தேர்வுக்கு , 10 ; பட்டப் படிப்புக்கு , 15 ; பி.எட். , படிப்புக்கு , 15 , என , 40 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் , பிரச்னையில்லை. அதற்கான , ' கிரேடு ' முறைக்கு தான் , தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது , பிளஸ் 2 தேர்வுக்கு , நிர்ணயிக்கப்பட்ட , 15 மதிப்பெண்ணில் , பிளஸ் 2 தேர்வில் , 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருந்தால் , 15 ; மதிப்பெண் , 80ல் இருந்து , 90 சதவீதம் வரை பெற்றிருந்தால் , 12 ; மதிப்பெண் , 70ல் இருந்து , 80 சதவீதம் வரை , 9 ; மதிப்பெண் , 60ல் இருந்து , 70 சதவீதம் வரை , 6 ; மதிப்பெண் , 50ல் இருந்து , 60 சதவீதம் வரை , மூன்று மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் , பட்டயப் படிப்பு , பட்டப் படிப்பு , தகுதி தேர்விலும் , ' கிரேடு ' முறை கொண்டு வரப்பட்டது. கடந்த , பிப்ரவரியில் , பள்ளி கல்வித் துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் , இடஒதுக்கீட்டுப் பிரிவில் வருபவர்களுக்கு , ஆசிரியர் தகுதி தேர்வில் , 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது. அதாவது , இடஒதுக்கீட்டுப் பிரிவில் வருபவர்கள் , 55 சதவீத மதிப்பெண் பெற்றால் , தேர்ச்சி பெறுவர். கிரேடு முறையில் , ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் வழங்குவதை எதிர்த்தும் , தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெறப்பட்டதோ அதன் அடிப்படையில் , ' வெயிட்டேஜ் ' நிர்ணயிக்கக் கோரியும் , 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டதை எதிர்த்தும் , 2012ல் நடந்த தேர்வுக்கு , மதிப்பெண் தளர்வை விரிவுபடுத்த கோரியும் , சென்னை ஐகோர்ட்டில் , மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த , நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தேர்ச்சி மதிப்பெண்ணை , 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என , பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்து , மதிப்பெண் தளர்த்துவதில் , கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக , தமிழக அரசு பதிலளித்துள்ளது. எனவே , அரசு பரிசீலிக்கவில்லை எனக் கூற முடியாது. தகுதி தேர்வு , போட்டி தேர்வு அல்ல ; அது , தகுதி பெறுவதற்கான தேர்வு. மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள , ஆசிரியர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம். இடஒதுக்கீடு பிரிவினருக்காக , தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைப்பதற்கு , அரசு , கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் அதிகாரத்தை எதிர்த்து , வழக்கு தொடரப்படவில்லை. எனவே , 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது செல்லும். மதிப்பெண் தளர்த்தியதை , 2012ல் நடந்த , ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது. முன் தேதியிட்டு அமல்படுத்தினால் , குழப்பம் ஏற்படும். ஏற்கனவே நியமனம் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வில் , ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் வழங்க , ' கிரேடு ' முறையை கையாளுவதில் , எந்த அறிவியல் பூர்வ பின்னணியும் இல்லை. இதனால் , ஏராளமான முரண்பாடுகள் தான் ஏற்படும்.கிரேடு முறைப்படி , தகுதி தேர்வில் , 60 சதவீத மதிப்பெண் பெறுபவருக்கும் , 69 சதவீதம் பெறுபவருக்கும் , ஒரே , ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் என , 42 வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் , 69 சதவீதம் எடுத்தவருக்கு , 42 மதிப்பெண் , 70 சதவீதம் எடுத்தவருக்கு , ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் , 48 என , நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது , பெரிய முரண்பாடு. எனவே , பிளஸ் 2 , பட்டயப் படிப்பு , தகுதி தேர்வில் பெறும் , ஒவ்வொரு சதவீத மதிப்பெண்ணுக்கும் , ' வெயிட்டேஜ் ' மதிப்பெண்ணாக , 0.15 , 0.25 , 0.60 என்ற அடிப்படையில் வழங்க வேண்டும். இதை பின்பற்றினால் , முரண்பாடு , பாகுபாடு வராது. இது , அறிவியல் பூர்வமானது. இதை , பரிந்துரையாக தான் அளிக்கிறேன். இதை பின்பற்றலாமா என்பதை அரசு தான் பரிசீலிக்க வேண்டும். அரசு கொண்டு வந்த , ' கிரேடு ' முறை , தன்னிச்சையானது , பாரபட்சமானது. அது , ரத்து செய்யப்படுகிறது. நான் கூறியுள்ள முறையையோ அல்லது அறிவியல் பூர்வமான வேறு முறையையோ , அரசு பின்பற்ற வேண்டும். எனவே , ' வெயிட்டேஜ் ' மதிப்பெண்கள் வழங்குவதற்கு , ஏதாவது ஒரு அறிவியல் பூர்வமான முறையை , விரைவில் கொண்டு வர , அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்படி , ஆசிரியர்கள் தேர்வு நடக்க வேண்டும். இவ்வாறு , நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

ALL EDUCATION NEWS ONLINE 24 x 7 NEWS

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS

SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.

PLUS TWO STUDY MATERIALS

PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

20 comments:

  1. GUD MORNING SIR... EXCESS AH PASS ANAVANGALUKU ENTHA MARIANA MUNNURIMAI GOVT. ALIPANGANU KONJAM VILAKKAM THANTHENGANA PARAVALA SIR

    ReplyDelete
  2. Is this applicable to the current examination. or the new rule will be applied from the next year.

    ReplyDelete
  3. Govt should clarify which calculation system is going to implement for the coming Certificate Verifivcation on may 6th.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. 12 th la science group eduthu padithavangaloda mark.. accountancy eduthu padithavangaloda rompa kammiya ah varuthu.. athunala science group eduthavanga nilamai parithavamaga mari ullathu..(for only paper 1...)

    ReplyDelete
    Replies
    1. yes. very correct. why govt not at all think about it? only is the best way is SENIORITY BASE SELECTION.

      Delete
    2. seniority base podangana mark wise tharalama podadum.. but athulaum community padi podurathu than problem.. already ida othu keedu nu than tet mark 82 ku change pannunanga.. apuram postinglaun en ida othu keedu follow panranga? india ku freedom kidaithu 50 years ku mela aachu.. inuma munerama irukuthu intha nadu??????????? apadiye munerama ulla place madum list eduthu athula tharalama kodunga....

      Delete
  6. kandippa,weightage calculate panradhukku yethavadhu oru ariviyal poorvamana murai pinpatra pada vendum. paper 2-la ennudiya mark 88, 2 mark miss anadhunala weightagela 6 mark reduce agiduchu. athu mattum ella UG %-ku lanuage-m serthu pottal remba mark kuraiyedhu, ug-la %-oda lanuage mark-ka serkka maatom, so, athula pass aana pothumnu ninaithu avvalava tamil, english-la concentrate panrathilla, eppo athaium serkkum pothu mark kuraiudhu. Eppo ennudaiya total weightage 71.

    ReplyDelete
  7. what about employment seniority??????

    ReplyDelete
    Replies
    1. why employment office? why registration? very experience candidates suffer this type of selection? govt should be think about seniority based selection. atleast agewise seniority is must.

      Delete
    2. Sumathi mam, employment seniority ok. but, agewise seniority is very difficult for youngsters. Bcoz, niraiya aged persons eppothan B.Ed panranga. so, agewise seniority is not correct method for taken selection list.

      Delete
    3. hai suji
      more over 400 aged persons only passed this exam. here after they cannot continue their studies. so it should be consider like concession for community.

      Delete
  8. 12 th vocational group has more marks (generally 900 to 1000) but 12 th science group has comparatively less marks. This difference should be addressed to the court. We missed it.

    ReplyDelete
  9. PG TRB 2nd list yeduppangala? Etharkku mun election vanthappa second list yeduthanga, athe maari eppo yethum chance erukka? eruntha nalla erukkum. bcoz, 2 markla enakku kidaikkama poiduchu eppo.TRB consider pannina nalladhu.

    ReplyDelete
  10. Plz TRB, consider to taken 2nd list for PG TRB (all subject)

    ReplyDelete
  11. tet exam is a wonderful method for teaching staff selection. but they have to compare new and old +2 and maths,science and vocational. this mark system is not good.

    ReplyDelete
  12. what about experience. If you want to take job in the private school the first eligibility is experience based on this they will appoint the staff . I am wondering that our government didn't care about experience then how they can provide a better education to the future generation .they should provide marks for experience too then only they can select good teacher ,merely book reading alone is not only a quality of teacher please consider this too as a quality of teacher.

    ReplyDelete
    Replies
    1. they should be consider for experience. but so many people collect illegal certificate. so govt not taken this method.

      Delete
  13. seniority base podangana mark wise tharalama podadum.. but athulaum community padi podurathu than problem.. already ida othu keedu nu than tet mark 82 ku change pannunanga.. apuram postinglaun en ida othu keedu follow panranga? india ku freedom kidaithu 50 years ku mela aachu.. inuma munerama irukuthu intha nadu??????????? apadiye munerama ulla place madum list eduthu athula tharalama kodunga....

    ReplyDelete
  14. அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை60ஆக தமிழக அரசு உயர்த்த திட்டம்?

    தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 1லட்சத்து 45000க்குமேல் அர்சு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும், அவர்களின் ஓய்வுக்கால பணப்பலன்கள் என பல லட்சங்கள் வழங்க வேண்டி உள்ளதால் அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகை கணக்கிட்டு பார்த்ததில் இவ்வாண்டு தமிழக அரசுக்கு தாங்க முடியாத நிதிச்சுமை ஏற்படும் எனக்கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அச்சுமையை 2 ஆண்டுக்கு தள்ளிப்போடும் விதமாக ( சட்டசபை தேர்தலுக்கு பின்பு புதிய அரசு அமைந்தபின் நிதிச்சுமையை சமாளிக்கவும் ,அதற்குள் இரடண்டாண்டுகளில் அரசின் வருவாய் பெருக்க திட்டங்கள் வகுப்பதன் மூலமாகவும்,சமாளிக்கலாம் என்பதற்காக) அரசு ஊழியர் ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயதை 60ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு அதன் மீது நிதித்துறை ,பணியாளர் நலத்துறை மட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட்டு முதல்வரின் முடிவுக்காககோப்பு தயாராக உள்ளதாக தகவல்............

    முடிவு முதல்வர் கொடநாட்டில் இருந்து திரும்பியவுடன் முடிவெடுக்கப்படும் என தலைமைச்செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன அப்படி ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தப்பட்டால் புதிய ஆசிரியர்கள் பணியிடநியமன குறித்த நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தற்போதே போதிய மாணவர்களின்றி உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சில பல ஆயிரமாக உள்ளதால், ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தும்போது புதிய ஆசிரியர் நியமன வாய்ப்பே இல்லாமல் போகுவதோடு உபரி ஆசிரியர்களுக்கு வீணாக ஊதியம் கொடுக்க வேண்டி வருமே என்ற கருத்தும் உளவுவதாக தகவல் பார்ப்போம்

    ReplyDelete