Friday, September 30, 2016

உணவுப்பொருள் சேமிப்பு கழக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? விரைந்திடுங்கள்

உணவுப்பொருள் சேமிப்பு கழக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? விரைந்திடுங்கள்

மத்திய அரசு நிறுவனமான மத்திய உணவுப்பொருள் சேமிப்பு கழகத்தில் (Central Warehousing Corporation) நிரப்பப்பட உள்ள மேலாண்மை பயிற்சி, உதவி பொறியாளர், சுருக்கெழுத்தாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CWC/1-Manpower/DR/Rectt/2016/02

மொத்த காலியிடங்கள்: 644

பதவி: Management Trainee  (General) - 37

பதவி: Management Trainee (Technical) - 06

பதவி: Assistant Engineer (Civil) - 15

பதவி: Accounts - 18

பதவி: Superintendent (General) - 130

பதவி: Junior Superintendent - 130

பதவி: Junior Technical Assistant - 300

பதவி: Stenographer - 08

தகுதி: B.Com., BA, BE, B.Tech. பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

தேர்வு மையங்கள்: சென்னை , மும்பை, தில்லி, கொல்கத்தா, ஹாதராபாத், பெங்களூரு

விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.cewacor.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.10.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cewacor.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கேட்’ தேர்வு மூலம் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை !

கேட்' தேர்வு மூலம் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை !

கேட் தேர்வின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கி உள்ளன.

 *இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்:*

சுருக்கமான ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. முன்னணி பொதுத்துறை நிறுவனமான இது ஆண்டுதோறும் 'கேட்' தேர்வின் அடிப்படையில் கணிசமான பணியிடங்களை நிரப்பி வருகிறது.

தற்போது 2017 கேட் தேர்வின் அடிப்படையில் ஏ.இ.இ., கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட், ஜியோபிசிக்ஸ்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆபீசர், புரோகிராமிங் ஆபீசர், டிரான்ஸ்போர்ட் ஆபீசர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல், புரொடக்சன், பெட்ரோலியம், மெட்டீரியல் போன்றவை சார்ந்த என்ஜினீயரிங் பிரிவுகள் மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கேட் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பணிகள் உள்ளன.

விண்ணப்பதாரர்கள் 1-1-2017 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் நடக்க இருக்கும் 'கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மார்ச்/ ஏப்ரல் 2017-ல் இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் திறக்கும். கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க www.gate.iitr.ernet.in என்ற இணையதளத்தையும், ஓ.என்.ஜி.சி. பணிகளுக்கு விண்ணப்பிக்க www.ongcindia.com என்ற இணைய தளத்தையும் பார்க்கலாம். கேட் தேர்வுக்கு 4-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்!

மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்!

வேலை வாய்ப்பு' - மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்!* -டெல்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரெயில்வே பணிகள் நடந்து வருகின்றன.

பிரிவு வாரியாக மெயின்டனர் பணிக்கு 1393 பணியிடங்களும், ஸ்டேசன் கண்ட்ரோல்/ டிரெயின் ஆபரேட்டர் பணிக்கு 662 பணியிடங்களும், கஸ்டமர் ரிலேசன்ஷிப் அசிஸ்டன்ட் பணிக்கு 1100 பணியிடங்களும், ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 205 இடங்களும் உள்ளன.

அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு 44 இடங்களும், அக்கவுண்ட் அசிஸ்டன்ட் பணிக்கு 24 இடங்களும் உள்ளன. பி.இ., பி.டெக் படித்தவர்கள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர் களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கு ஜூனியர் என்ஜினீயர் மற்றும் டிரெயின் ஆபரேட்டர் போன்ற பணிகளில் வாய்ப்பு உள்ளது. 3 ஆண்டு, 4 ஆண்டு கால பட்டப்படிப்பை முடித்தவர்கள் கஸ்டமர் ரிலேசன் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்கள் மெயின்டெய்னர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 15-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் 6205 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் 6205 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளியில் 6205 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய அளவில் கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் துவக்க நிலை ஆசிரியர்கள், பயற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 6,205 காலிப் பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்ப கட்டணமாக முதல்வர் பணிக்கு ரூ.1,200, இதர பணிகளுக்கு ரூ.750 ஐ ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர், டிசம்பர் 2016-இல் நடைபெறும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, பெங்களூரு. ஹைதராபாத். திருவனந்தபுரம்.

மேலும், இப்பணியிடங்கள் குறித்த வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை கேந்த்ரிய வித்யாலயத்தின் www.mecbsekvs.in www.kvsangathan.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17-ஆம் தேதி கடைசி நாளாகும்.

வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் கவனத்துக்கு...

வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் கவனத்துக்கு...

காரைக்கால் நகராட்சி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலில் நகர்ப்புற வளர்ச்சிக்காக, மத்திய அரசின் திட்டமான தேசிய வாழ்வாதார மையம் தொடங்கவுள்ளது. ஆர்வமுள்ள படித்த வேலையில்லாத ஆண்கள், பெண்கள், பயிற்சி பெற்ற மோட்டார், மின்சாரம், வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் பழுது நீக்குதல், கணினி பழுது நீக்குதல், பிளம்பர், தச்சு வேலை, தையல் பயிற்சி, சித்திர பூ வேலைப்பாடு, பொம்மை செய்தல், வீட்டு வேலை செய்தல், தினக்கூலி தோட்ட வேலை செய்பவர் ஆகியோர் வரும் 20.10.2016-க்குள் காரைக்கால் நகராட்சியில் சம்பந்தப்பட்ட பிரிவில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளவேண்டும். தகுதிச் சான்றிதழ், குடும்ப அட்டையுடன் வரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

கோவையில், அடுத்த மாதம், 19 முதல், 23 வரை, பிராந்திய ராணுவத்திற்கு, ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோவை, பி.ஆர்.ஆஸ்., மைதானத்தில் முகாம் துவங்குகிறது. அக்., 19 காலை, 6:00 மணிக்கு, உடல் தகுதித்தேர்வு நடைபெறும். இம்முகாமில், ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழகம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள்மற்றும் டாமன் டையு, லட்சத்தீவு, புதுச்சேரி யூனியன்பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், சமையலர்கள், கொத்தனார்கள், ஓவியர்கள், ஓட்டுனர் உரிமம் வைத்திருப்போர், மர வேலை செய்வோர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது, 18 முதல், 42க்குள் உள்ளோர் முகாமில் பங்கேற்கலாம்.

ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி

ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி

'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம், ஆன்லைன் வழி படிப்புகளை நடத்த, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு பல்கலையும், இந்திய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களும், ஆன்லைன் படிப்பை நடத்த, அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.இந்நிலையில், யு.ஜி.சி., வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அனைத்து பல்கலைகளும், ஆன்லைன் வழி படிப்புகளை துவங்கலாம்; அதற்கு முன், படிப்பின் விபரத்தை தாக்கல்செய்து, அனுமதி பெற வேண்டும். பல்கலை இணையதளத்தில், இந்த படிப்பு விபரங்களை வெளியிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது

காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி.

காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்கும்படி, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது. பல்கலையின் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி அகாடமி ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அடுத்த ஆண்டு முதல்நிலை தேர்வு எழுத, பயிற்சி பெற விரும்புவோருக்கு, நவ., 20ல் தகுதித் தேர்வு நடத்தப்படும்; இதற்கு, அக்., 31க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.விண்ணப்பங்களை, http://mkuniversity.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்துடன் சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.'பயிலக இயக்குனர் / ஒருங்கிணைப்பாளர், அண்ணா நுாற்றாண்டு குடிமை பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நலபடிப்பியல் துறை, மதுரை காமராஜர் பல்கலை, மதுரை - 625 021' என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அதில், 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, இலவசதங்குமிடம், உணவு மற்றும் சாதனங்களுடன் பயிற்சி தரப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

வாக்காளர் துணை பட்டியல்அக். 3 ல் வெளியீடு

வாக்காளர் துணை பட்டியல்அக். 3 ல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் துணை பட்டியல் அக்.,3 ல் வெளியிடப்படுகிறது. விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு இல்லாததால் போலி வாக்காளர்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது.சட்டசபை வாக்காளர்கள்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.மாநில தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டதால், வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணியில் செப்.,11 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் படி, புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். (2017 ஜன., 1 ல் 18 வயது பூர்த்திஅடையும் விண்ணப்பங்கள் சேர்க்கப்படவில்லை). இப்பணி முடிந்து வாக்காளர் பட்டியல் விபரத்தை உள்ளாட்சித் தேர்தல் அதிகாரிகளிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு,அக்., 3 ல் துணை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மேலும் புதிதாக பெறப்பட்ட வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பங்களில் ஏராளமானோர் 25 வயதை கடந்தோராக உள்ளனர். கள விசாரணை இன்றி அவர்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளன.இதன் மூலம் வேறு பகுதிகளில் பெயர் இருந்தாலும் கூட, தங்களுக்கு வேண்டியோர் போட்டியிடும் பகுதிகளில் போலி வாக்காளர்களாக சேர வாய்ப்பு உள்ளது.தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பங்களை கம்யூட்டரில் ஏற்றி, 'சாப்ட்வேர்' மூலம் சரி பார்த் துள்ளோம். அதேபோல் ஏற்கனவே வேறு பகுதிகளில் பெயர் இருந்து, நீக்கல் சான்று இல்லாமல் கொடுத்தோரின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளோம். இதனால் போலி வாக்காளர்கள் சேர வாய்ப்பில்லை, என்றார்.

வந்துவிட்டது ஏர்செல் ’RC 333’ ஆஃபர்.

வந்துவிட்டது ஏர்செல் 'RC 333' ஆஃபர்.

ஜியோவுடன் போட்டிப் போட களத்தில் இறங்கியுள்ள ஏர்செல், 'RC 333' எனும் அசத்தல் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கில் 28 நாட்கள் செல்லுபடியாகும் 5 ஜிபி 3ஜி டேட்டா வழங்கப்பட்டுள்ளது.கூடவே வரம்பற்ற வாய்ஸ் கால் வசதியுடன் 'ஜோடி சிம்' ஆஃபரையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகைகள் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் விரைவில் தமிழகத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC EXAM PREPARATION | GK QUESTION AND ANSWER:

TNPSC EXAM PREPARATION | GK QUESTION AND ANSWER:

1. குடியரசுத் தலைவர் தனது ஒப்புதல் அளிக்காமல் ஒரு மசோதாவை எதுவரை ஒத்திபோட முடியும் - 6 மாதம்

2. மாநிலங்களவையின் உறுப்பினரின் வயது - 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

3. மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250

4. அரசியல் சட்டதிருத்தம் பற்றி கூறும் நமது அரசியல் சட்டத்தின் சரத்து எண் - 368

5. தலைமை நீதிமன்றத்தின் நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு - நாடாளுமன்றம்

6. செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் எங்குயுள்ளது - நாசிக்

7. ஹரிதாஸ் திரைப்படம் எத்தனை நாட்கள் ஹவுஸ்புல் வரமாக ஒடியது - 768 நாட்கள்

8. அடிப்படை உரிமையின் கீழ் நமக்கு அளிக்கப்படும் உரிமைகளின் எண்ணிக்கை - 10 உரிமைகள்

9. 24-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றியது - மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது.

10. பரப்பளவில் பெரிய மாநிலம் - மத்தியபிரதேசம்

11. இந்தியா எத்தனை மாநிலங்களைக் கொண்டது - 26 மாநிலங்கள்

12. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் எத்தனை - 07

13. மூன்று வருடாந்திர திட்டங்கள் அமலாக்கப்பட்ட ஆண்டு - 1966 - 1969

14. நமது அரசியல் சட்டம் மொத்தம் எத்தனை சரத்துக்களைக் கொண்டது - 395

15. நமது அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் - 11 பட்டியல்

16. நமது அரசியல் சட்டம் எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன - 24 பாகங்கள்

17. நமது அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - நவம்பர் 26, 1949

18. நமது அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஜனவரி 26, 1950

19. இந்திய அரசியல் சட்டத்தில் மனித அடிப்படை உரிமைகள் பற்றி எந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது - 3வது பிரிவில்

20. ஐக்கிய நாட்டு சபைக்கு அதிக பணம் தரும் நாடு - அமெரிக்கா

21. ஐக்கிய நாட்டு சபையின் சின்னம் - ஆலிவ் மரக்கிளை

22. ஐக்கிய நாடுகளின் சபை எப்பொழுது அமைக்கப்பட்டது. இதன் அங்கம் எத்தனை - 1945-ஆம் ஆண்டு, 6 அங்கங்கள்.

23. ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதல் பொதுச் செயலாளர் - ட்ரைவ்லே

24. எட்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை - ரூ.7,98 ஆயிரம் கோடி

25. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அஞ்சல் தலையில் இடம்பெற்ற முதல் பெண்மணி - மீராபாய், 1952 அக்டோபர் 1ல் வெளியிடப்பட்டது.

26. இந்தியாவின் முதல் தபால் தலைகளின் கண்காட்சி எந்த ஆண்டு எங்கு நடந்தது - 1894-ஆம் ஆண்டு கல்கத்தாவில்

27. உலகிலேயே அதிக மக்கள் விரும்பும் பொழுது போக்கு - தபால் தலைகள் சேகரிப்பது

28. இந்தியாவில் முதன்முதலாக "பின்கோடு" முறை அமுல்படுத்தப்பட்ட ஆண்டு - 1972 ஆகஸ்ட் 15

29. இந்தியாவில் முதன்முதலாக "ஏர்மெயில்" அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு - 1929

30. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் அதிகம் உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்

31. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் குறைவாக உள்ள மாநிலம் - சிக்கிம்

32. இந்திய தபால் தலைகளில் முதன்முதலில் இடம்பெற்ற தேசிய தலைவர் - மகாத்மா காந்தி

33. சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலை - ஜெய்ஹிந்த், வெளியிடப்பட்ட ஆண்டு - 1947 நவம்பர் 21

34. 1852-ல் வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்ப்பின் பெயர் - "Scinde Dawk"

35. இந்தியாவின் முதல் தபால் தலை "Stamp" யாரால் வெளியிடப்பட்டது - சிந்து மகாணத்தின் (தற்போது பாகிஸ்தான்) கமிஷனரால் 1852 ஜூலை 1-ல் வெளியிடப்பட்டது.

36. இந்தியாவில் முதன்முதலில் தபால்தலை எப்பொழுது வெளியிடப்பட்டது - 1852, கராஜ்ஜியில்

37. இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட இடம் - கல்கத்தா

38. இந்தியாவில் அட்டானி ஜெனரலை நியமிப்பது - குடியரசுத் தலைவர்

39. இந்தியாவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்

40. மாநிலங்களவையின் தலைவர் - குடியரசுத் துணைத்தலைவர்

41. இந்திய குடியரசுத் தலைவர் எத்தனை வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்- 35 வயது

42. உலகின் முதன்முதலாக விமானம் மூலம் கடிதப் போக்குவரத்து தொடங்கிய நாடு - இந்தியா

43. தமிழக தொடர்புள்ள முதல் அஞ்சல் தலை - 1933 மே 6-ஆம் தேதி ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளி விழாவையொட்டி வெளியிடப்பட்ட தபால் தலை - இராமேஸ்வரம் கோவிலின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையாகும்.

44. உலகிலேயே மிகச் சிறிய நாடு - வாடிகன்

45. உலகிலேயே அதிவேக புகைவண்டி - French - T.G.V

46. இந்தியாவின் முல் அஞ்சல் தலையில் இடம்பெற்ற பெண்மணியான "விக்டோரியா மகாராணி" உருவம் பதித்த தபால் தலை புழகத்தில் இருந்த ஆண்டுகள் - 1882 லிருந்து 1899 வரை

47. இந்தியாவில் முதன்முதலில் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் (GPO) எந்த ஆண்டு? எங்கு திறக்கப்பட்டது - 1786-ஆம் ஆண்டு ஜூன்.1-ல் சென்னை ஜெயிண்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் திறக்கப்பட்டது.

48. தபால்தலைகளை அச்சடிக்கும் பிரஸ் இந்தியாவில் முதன் முதலாக எந்த மாநிலத்தில் எங்கு நிறுவப்பட்டது - 1926 -ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் என்னுமிடத்தில்.

49. காமன் வெல்த் நாடுகளில் "ஏர் மெயில்" அஞ்சலஸ் தலைகளின் சிறப்பு வரிசையை வெளியிட்ட முதல் நாடு - இந்தியா

50. இந்தியாவில் வெளியிடப்படும் புதிய தபால் தலைகள் கிடைக்குமிடங்கள் - சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் உள்ள ஜெனரல் போஸ்ட் ஆபிஸ்களில் (GPO) மட்டும் கிடைக்கும்.

MKU UNIVERSITY UG,PG ,M.Phil GENUINENESS APPLICATION !!!

MKU UNIVERSITY UG,PG ,M.Phil GENUINENESS APPLICATION !!!

G.O 265 Date:28/9/16-Finance Department -Santion of Bonus and Ex-gratia to the employee Sector Undertakings for the ye payable during 2016-17-order issued

G.O 265 Date:28/9/16-Finance Department -Santion of Bonus and Ex-gratia to the employee Sector Undertakings for the ye payable during 2016-17-order issued


உலக பொருளாதார அரங்கில் வேகமாக முன்னேறும் இந்தியா!!!

உலக பொருளாதார அரங்கில் வேகமாக முன்னேறும் இந்தியா!!!

பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது.பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் தெற்காசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் கடைசி இடத்திலும் உள்ளன.உலக பொருளாதார தரவரிசை பட்டியலில் இந்தியா 39வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 55 வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 16 இடங்கள் முன்வேறி 39வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 71வது இடத்திலும், பூடான் 97 வது இடத்திலும், நேபாளம் 98 வது இடத்திலும், வங்கதேசம் 106வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 122வது இடத்தில் உள்ளது.நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, பொருளாதார சூழல், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட 12 துறைகளின் அடிப்படையில் இந்த உலக பொருளாதார தரவரிசை பட்டியல் 2005 ம் தேதி முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் தொடர்ந்து 8 வது ஆண்டாக சுவிட்சர்லாந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது

தேர்தல் எதிரொலி விடுமுறை எடுக்க தடை !!

தேர்தல் எதிரொலி விடுமுறை எடுக்க தடை !!

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி.. காவலர்கள் விடுமுறை எடுக்க தடை - டிஜிபி உத்தரவு!!!உள்ளாட்சித் தேர்தலையொட்டி காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. 17-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 10 மாநகராட்சி, 64 நகராட்சி, 255 பேரூராட்சி, 193 ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 332 மாவட்ட ஊராட்சி வார்டு, 3250 ஊராட்சி ஒன்றிய வார்டு, 50,640 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், 6444 கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோரை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நடக்கும்.இரண்டாம் கட்ட தேர்தலின்போது சென்னை, திண்டுக்கல் ஆகிய 2 மாநகராட்சி, 60 நகராட்சி, 273 பேரூராட்சி, 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 323 மாவட்ட ஊராட்சி வார்டு, 3221 ஊராட்சி ஒன்றிய வார்டு, 48,684 கிராம பஞ்சாயத்து வார்டு, 6080 கிராம பஞ்சாயத்துத் தலைவர்களை தேர்ந்து எடுக்க வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டுள்ள காவலர்களின் விடுப்புகளை உடனடியாக ரத்து செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவ விடுப்பில் உள்ளவர்களை மருத்துவக்குழு முன் ஆஜர்படுத்தி பரிசோதனை செய்யும் அறிவுறுத்தியுள்ளார்.

தீபாவளிக்காக 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடங்குகிறது

தீபாவளிக்காக 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு தொடங்குகிறது

வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு நாளை (30-ம் தேதி) தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82601) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 30-ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82602) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த மாதம் 27-ம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82605) எழும்பூர் வழியாக மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல், திருநெல்வேலியில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06006) மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சென்னை சென்ட்ரல் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் அதி விரைவு சுவிதா சிறப்பு ரயில் (82621) மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சுவிதா சிறப்பு ரயில் (82622) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 27-ம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06016) மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இதேபோல், வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் 28-ம் தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06015) மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 30-ம் தேதி (நாளை) தொடங்கவுள்ளது.

விடுமுறை தின சிறப்பு ரயில்

விடுமுறை தினத்தையொட்டி 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து அடுத்த மாதம் 21-ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06033) மறுநாள் காலை 10.55 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இதேபோல், எர்ணாகுளத்தில் இருந்து அடுத்த மாதம் 23-ம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06034) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 29-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2-வது கட்ட பட்டியல்?

தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ''முதல்கட்டமாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் பட்டியலை தயாரித்து வருகிறோம். 3 அல்லது 4 சிறப்பு ரயில்கள் இதில் இடம் பெறும்.அடுத்த ஓரிரு வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகும்''என்றார்.

தேர்தல் பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரபாக்கம் ஒன்றியம் !!!

தேர்தல் பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரபாக்கம் ஒன்றியம் !!!

தீபாவளி் பண்டிகை முன்பணம் கோரும் படிவம் .

தீபாவளி் பண்டிகை முன்பணம் கோரும் படிவம் .

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான பிடிஎஸ் இடங்களுக்கு இன்று கலந்தாய்வு

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான பிடிஎஸ் இடங்களுக்கு இன்று கலந்தாய்வு

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு உள்ள பிடிஎஸ் இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடக்கிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாநில அரசுக்கு உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இரண்டு கட்ட கலந் தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 எம்பிபிஎஸ், இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 16 பிடிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான 330 எம்பிபிஎஸ் இடங்கள் மீதம் இருந்தன. இந்நிலையில், இந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட தொடர்ச்சி கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. கலந்தாய்வில் தகுதியான மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு உள்ள 400க்கும் மேற்பட்ட பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடக்கிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மாணவர்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.

TNPSC:நூலகர் - உதவி நூலகர் பணியிடம்: அக்.4-இல் சான்றிதழ் சரிபார்ப்பு.

TNPSC:நூலகர் - உதவி நூலகர் பணியிடம்: அக்.4-இல் சான்றிதழ் சரிபார்ப்பு.

நூலகர்-உதவி நூலகர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை (அக்.4) தொடங்குகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:பல்வேறு பணிகளில் நூலகர்-உதவி நூலகர் பதவிகளுக்கான 29 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வுசெய்ய கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.இந்தப் பதவிகளுக்கான நேர்காணலுக்கு 64 விண்ணப்பதாரர்கள் தாற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் வரும் 4-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு-நேர்காணல் ஆகியன வரும் 4, 5 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள், நேர்காணலுக்கான அழைப்பாணையை தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சான்றிதழ் சரிபார்ப்பு -நேர்காணல் குறித்த தகவல் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் சுணக்கம் காட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் அரசாணை வெளியிட்டு 7 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை

முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில்  சுணக்கம் காட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம்  அரசாணை வெளியிட்டு 7 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டு 7 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுணக்கம் காட்டிவருகிறது ஆசிரியர் தேர்வு வாரியம். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலமாகவும், 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டன. அந்த காலியிடங்கள் 2013-14, 2014-15-ம் கல்வி ஆண்டுகளில் ஏற்பட்டவை ஆகும். இந்நிலையில், 2015-16-ம் கல்வி ஆண்டில் ஏற்பட்ட 2,125 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி துறை கடந்த 10.2.2016 அன்று அரசாணை (எண் 24) வெளியிட் டது. பதவி உயர்வுக்கு ஒதுக்கப் பட்ட காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட நிலையில், நேரடி நியமனத்துக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட 1,062 காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. அரசாணை வெளியிட்டு 7 மாதங்கள் ஆகியும் இன்னும் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை கூட ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக்கல்வித் துறை பலமுறை நினைவூட்டல் களையும் அனுப்பிவிட்டது. ஆனாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அந்த அடிப்படை யில் அரசு மேல்நிலைப் பள்ளி களில் புதிதாக 1,600 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களுக்கு பள்ளிக்கல்வித்துறை அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது.அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படாதது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் வே.மணி வாசகனிடம் கேட்டபோது, "அனு மதிக்கப்பட்ட காலியிடங்களே 2,200-க்கு மேல் இருக்கிறது. ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் புதிதாக 1600 பணியிடங்களை தோற்றுவிக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புக் கொண்டுள்ளது. காலியிடங்கள் விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்களில்தான் அதிகம் உள்ளன. வடமாவட்டங் களில் தேர்ச்சி விகிதம் குறைவு என்கிறார்கள்.காலியிடங்களை நிரப்பா விட்டால் தேர்ச்சி விகிதம் எப்படி அதிகரிக்கும்? அரசுப் பள்ளி களில் முதுகலை ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனுமதிக்கப்பட்ட காலியிடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட காலியிடங்கள் இரண்டையும் சேர்த்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறும் போது, "அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை ஆசிரியர் பணிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட காலியிடங்கள் உள்ளன. குறிப்பாக ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாட ஆசிரியர்கள் இல்லாததால் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்று முக்கியப் பாடங்களில் ஆசிரியர் இல்லாவிட்டால் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறையும்" என்றார்.இதற்கிடையே, அரசுப் பள்ளி களில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன? என்ற விவரத்தை அனுப்புமாறு அனைத்து பள்ளி களுக்கும் கல்வித்துறை அதிகாரி கள் மூலம் அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்த நிலையில், தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்ப தால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, முது கலை ஆசிரியர் நியமனத்துக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட நிலையில், நேரடி நியமனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,062 காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

புதிய விண்வெளி அவதாரம்!

புதிய விண்வெளி அவதாரம்!

தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்ற சுருக்கமான பெயர் மாதிரியே, "ஏரோபிக் வெஹிக்கிள் ஃபார் டிரான்ஸட்மாஸ்ஃபெரிக் ஹைப்பர்சானிக் ஏரோஸ்பேஸ் டிரான்ஸ்போர்ட்டேஷன்' என்ற நெடுநீண்ட ஆங்கிலச் சொற்கோவைச் சுருக்கமே "அவதார்'.உள்ளபடியே, திரவ ஹைடிரஜன் - திரவ ஆக்சிஜன் ஆகிய இணையரின் கலப்பில் உருவாக இருக்கும் பீம அவதாரம். இது ஒரு வகை விண்வெளி விமானம். கம்பன் பாடுவது போல, "மண்ணில் தேர் சென்ற சுவடெலாம் பாய்ந்து விண்ணில் ஓங்கி' எழுந்து விண்வெளி சுற்றிவிட்டு, அமைதியாகத் தரை இறங்கும். மீள் பயன்பாட்டுக்கு உரிய விண்கலம்.சுழலித் தாரைப் பொறியும், அதிவேக மோது தாரைப் பொறியும், "கிரையோஜெனிக்' என்கிற அதிகுளிர் திரவ உந்துபொறியும் இணைந்த தனித் திட்டம். இதன் 25 டன் எடையில் 15 டன் திரவ ஹைடிரஜன் இடம்பெறுமாம்.இன்று 1 டன் செயற்கைக்கோளை விண்ணில் கொண்டுவிட ஆகும் செலவு ஏறத்தாழ 100-130 கோடி ரூபாய். அதுவே இந்த விண்வெளி விமானத்தினால் 4-7 கோடி ரூபாய் அளவுக்குச் சிக்கனம் ஆகிறது என்றால் கசக்குமா என்ன?இலவசமாக வளிமண்டலக் காற்றில் இருந்து ஆக்சிஜனை உறிஞ்சி இழுத்து உபயோகித்தால் விமானத்தின் எரிபொருள் செலவு மிச்சம். அதிக எடைச் செயற்கைகோளையும் சுமந்து செல்லலாம். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்கள் விண்வெளி விமானப் பயணம் செய்யலாம். விண்வெளிச் சுற்றுலாவுக்கும் உகந்த விமானம் என்றால் மகிழ்ச்சி தானே.சீனா, ரஷியா, ஜப்பான் போன்ற நாடுகளை முந்திக் கொண்டு இத்தகையக் காற்று உறிஞ்சி விமானத்தின் முன்னோடிப் பரிசோதனையில் இந்தியா வெற்றி பெற்று உள்ளது.இந்த ஆண்டு செப்டம்பர் 2 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட "சோதனைச் செயல்விளக்கி'ப் பயணம் முக்கியம் ஆனது. விண்வெளியில் பறந்தவாறே, முதல் ஐந்து நொடிகளில் வளிமண்டலத்தின் காற்றினை உள்வாங்கி, அதனையே தனக்குள் அடங்கிய விசேட எரிபொருளை எரித்து இரண்டு நொடிகள் மேலும் பறந்து சாதனை படைத்தது, நமது "ஸ்க்ராம்ஜெட்' ஏவூர்தி. "சூப்பர்சானிக் கம்பஷ்சன் ராம் ஜெட்' என்பதன் சுருக்கப் பெயர்.காற்றில் ஒலிவேகத்தை விட 5 மடங்கு அசுரப் பாய்ச்சல் என்ற வகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த மூன்றாம் இடம் இந்தியாவிற்கே.சமீபத்தில் 8.9.2016 அன்று திரவ ஹைடிரஜன் - திரவ ஆக்சிஜன் ஆகிய "கிரையோஜெனிக்' (அதிகுளிர் திரவ எரிபொருள் கலவை) ஏவூர்திப் பொறியின் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று உள்ளது. வணிக ரீதியிலான பயணங்களுக்கு நம்மைத் தயார்படுத்தும் முதல் வெற்றிப் பயணம்.இன்றைக்கு ஜி.எஸ்.எல்.வி.-எஃப்05 ஏவுகலனால் 2,211 கிலோ எடை கொண்ட இன்சாட்-3டி.ஆர் செயற்கைக்ககோளினை ஏவுதற்கு 7 டன் விசை ஊட்டும் கிரையோஜெனிக் பொறி போதும். ஆனால் 4,000 கிலோ எடைச் செயற்கைக்கோள் என்றால் 20 டன் விசை தேவை. அதற்கான ஜி.எஸ்.எல்.வி.-மார்க்3 ஏவுகலனும் பயணத்திற்குத் தயாராகி வருகிறது.இந்த இன்சாட்-3டி.ஆர் செயற்கைக்கோளில் அதி நவீன வானிலை ஆய்வுக் கருவிகள் இடம்பெறுகின்றன. வளிமண்டலத்தின் வெப்பநிலை, ஈரப்பதம், பசுமைக் குடில் வாயுக்கள் அளவினைப் பதிவாக்கும் உபகரணங்களும் இதில் இடம்பெறுகின்றன. இவை அகச்சிகப்பு மற்றும் கட்புலனாகும் வெள்ளை அலைவரிசைகளில் இயங்குபவை.

வானிலை ஆராய்ச்சி, தகவல் பரிமாற்றம், கடல் மற்றும் வான்வழிப் பயண விபத்துகளில் உயிர்மீட்பு, நிவாரண நடவடிக்கைக்கு உதவுகிற உபகரணங்கள் இதில் இடம்பெறுகின்றன. இந்த "காஸ்பாஸ்-சார்சாட்' திட்டத்தில் அமெரிக்கா, கனடா, ரஷியா, பிரான்சு உள்பட 37 நாடுகளின் ஒத்துழைப்பும் உள்ளது.இதே செப்டம்பர் 26 அன்று திட்டமிடப்பட்டு உள்ள கடலாய்வுக்கான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் "ஸ்காட்சாட்', அல்ஜீரியா நாட்டு "அல்சாட்-2ஏ' மற்றும் 2 சிறு செயற்கைக்கோள்கள் நம் நாட்டில் இருந்து செலுத்தப்பட உள்ளன.ஒரு கணக்கில், இந்த ஒரு (செப்டம்பர்) மாதத்தில் மட்டும் 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்துவது இந்திய வரலாற்றில் புதிய சாதனை.உள்ளபடியே, மூன்றுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் ஒரே ஏவுகலனில் செலுத்திய உலகில் முதல் நாடு இந்தியாதான்.ஏற்கெனவே 2008 ஏப்ரல் 28 அன்று இந்தியாவின் கார்ட்டோசாட்-2ஏ மற்றும் இந்திய வானிலை ஆய்வுச் செயற்கைக்கோளுடன் அயல்நாடுகளின் 9 செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன. அதன் பின்னர்தான் 2013-இல் அமெரிக்கா 29 செயற்கைக்கோள்களையும், 2014-இல் ரஷியா 37 செயற்கைக்கோள்களையும் ஒரே பயணத்தில் பறக்கவிட்டன.2016 ஜூன் 22 அன்று நம் நாட்டு "பி.எஸ்.எல்.வி.-சி34' என்னும் துருவச் செயற்கைக்கோள் ஏவுகலன் முதன்முறையாக 20 செயற்கைக் கோள்களுடன் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.பி.எஸ்.எல்.வி.-சி34 ஏவுகலனில் நம் நாட்டு "கார்டோசாட்-2சி' உடன் இந்திய மாணவர்கள் வடிவமைத்த இரண்டு செயற்கைக்கோள்களும் இடம்பெற்றன. அவை, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான 1.5 கிலோ எடை கொண்ட "சத்யபாம்சாட்', புனே பொறியியல் கல்லூரியின் 1 கிலோ எடை கொண்ட "ஸ்வயம்' செயற்கைக்கோள் ஆகியவை.அன்றியும், அமெரிக்கா, கனடா, ஜெர்மன், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. அவற்றை அந்தந்த நாட்டின்மேல் பறவைகள் போலப் பறக்கவிட்ட பெருமை நம் இந்திய விண்வெளிக்கு உண்டு.

இந்தப் பயணத்தின்போது முதன்முறையாக நான்காம் கட்ட திரவ உந்துபொறி இயக்கத்தில் ஒரு புதிய நுட்பம் கையாளப்பெற்றது. நில வாகனங்களை ஓட்டுவதைப் போலவே-ஏவூர்திப் பொறியினை இயக்கி, நிறுத்தி, மீண்டும் இரண்டாம் முறையும் இயக்குவிக்கப்பட்டது. திரவ உந்துபொறியினை இரண்டு முறை இயக்கியதும் இதுவே முதல்முறை.அது மட்டுமா, இந்த 2016-ஆம் ஆண்டு விண்வெளி விளைச்சலில் முத்திரை பதித்துவிட்டோம்.நம் நாட்டின் இந்திய மண்டல பயண அமைப்புச் செயற்கைக்கோள் திட்டத்திற்கான 7 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.வகைச் செயற்கைக்கோள்களில் இறுதி மூன்றும் இந்த ஆண்டில் (20.1.2016, 10.3.2016, 28.4.2016) ஏவப்பட்டவை.மொத்தத்தில் 2016 ஜூன் 22 வரை இந்தியா சொந்த மண்ணில் இருந்து 131 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. அவற்றில் நம் நாட்டின் செயற்கைக்கோள்கள் வெறும் 57 தான். அயல்நாட்டுச் செயற்கைக்கோள்கள் 74 என்பதில் ஒவ்வோர் இந்தியரும் பெருமிதம் கொள்ளலாம்.அதிலும் 2013 - 2015 ஆண்டுவாக்கில் 13 நாடுகளின் 28 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியதன் வழி இந்தியாவிற்கு ஏறத்தாழ 650 கோடி ரூபாய் வருமானம் என்றால் சும்மாவா?இன்னொரு சிறப்புச் செய்தி, தெற்காசிய நாடுகளில் சொந்தச் செயற்கைக்கோளினைச் சொந்த ஏவுகலனால் சொந்த மண்ணில் இருந்து செலுத்தும் வல்லமை படைத்த நாடு இந்தியா மட்டும்தான்.2014 ஆகஸ்ட் மாதம் தெற்காசிய மண்டல ஒத்துழைப்புக் குழுவின் மாநாட்டில் "சார்க்' நாடுகளுக்கு என்றே தனியாக ஓர் செயற்கைக்கோள் செலுத்தப்பட வேண்டும் என்று பாரதப் பிரதமர் அறிவித்தார்.இதற்கு மத்தியில், 2015 செப்டம்பர் 20 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் "செயற்கைகோளின் கட்டுப்பாடு எந்த நாட்டின் கையில்' என்று விவாதம் நடந்தது. இந்தியாவும் "சார்க்' உறுப்பு நாடான பாகிஸ்தானும் விவாதித்தன. ஆனால் தீர்ப்பு பாகிஸ்தானுக்கு எதிராக அறிவிப்பானது.அப்புறம் என்ன, 2.10.2015 அன்று பாகிஸ்தான் இசைவு இன்றியே தனித்து செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திற்கு தயாரானது இந்தியா. ஆனால் "சார்க் செயற்கைக்கோள்' என்ற பெயர் மாற்றப்பட்டு, "தெற்காசியச் செயற்கைக்கோள்' என்ற புதுப்பெயர் சூட்டப்பெற்று உள்ளது. 2016 டிசம்பர் மாதம் அத்திட்டமும் நிறைவேற இருக்கிறது.தொடர்ந்து, டாக்டர் அப்துல் கலாமின் "இந்தியா இலக்கு 2020'க்கும் அப்பால் 2025-ஆம் ஆண்டுக்குள் "மின்மய இந்தியா' ("டிஜிட்டல் இந்தியா') ஒளிர்வதற்கு 4 "ஜிசாட்' ரகச் செயற்கைக்கோள்கள் தயாராகி வருகின்றன.சந்திரயான்-2 விண்கலன் சுமந்து செல்லும் நிலா ஊர்தி நம் சந்திரனில் தரை இறங்கும். அதற்கும் இதே ஜி.எஸ்.எல்.வி.தான் வாகனம்.தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டுக்குள் நமது "ஆதித்யா' (400 கிலோ) விண்கலம் சூரியனுக்கு அருகில் சுற்றிப் பறக்கும். அதன்வழி சூரியனின் புறப் பரப்பில் இருந்து கிளம்பும் ஒளிப் புயல் அளவிடப்படும். இந்த விண்கலன்கள் அனைத்துமே "மேக் இன் இண்டியா' திட்டத்தின்கீழ் இந்தியாவின் சொந்தத் தயாரிப்புகள்.இத்தனைக்கும் நம் நாட்டு சொந்த உந்து எரிபொருள் வரலாற்றின் பொன்விழா தொடங்க இருக்கிறது. முதலாவது இந்திய "ஆர்.எச்.-75' என்ற "ரோகிணி வானிலை ஆய்வூர்தி' 1967 நவம்பர் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் முழு எடை வெறும் 32 கிலோ. ஒரு ஆள் எடையில் பாதி. அது வெறும் 7 கிலோ பயன்சுமையினை 10 கிலோ மீட்டர் உயரம் வரை கொண்டு சென்றது.இன்றைய ஜி.எஸ்.எல்.வி. ஏவுகலனோ 4,15,000 கிலோ எடை. இது, 2,000 கிலோ கனரகச் செயற்கைக்கோளினை 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்ற விடுகிறது. இது அசாதாரண வளர்ச்சி அல்லவா?

செங்கோல் வீழும்; எழுதுகோல் வாழும்!

செங்கோல் வீழும்; எழுதுகோல் வாழும்!

போற்றுதலுக்குரியவர்களை வரலாறு பொன்னெழுத்துகளால் பொறித்து வைத்திருப்பதைப் போலவே, தூற்றுதலுக்குரியவர்களையும் தன் முற்றத்தில் மொட்டைத்தூண்களைப் போல் நிற்க வைத்துள்ளது.கற்றவர்களையும், மற்றவர்க்காய் வாழும் குணம் பெற்றவர்களையும் வாரிக் கொடுத்த வள்ளல்களையும், வாய்மை மிகுந்த அறிஞர்களையும் வரலாறெனும் கண்ணாடி வருங்காலத் தலைமுறைக்குக் காட்டுவது போலவே, கொடுங்கோலர்களையும், குணக் கேடர்களையும், மக்களை வஞ்சித்த மாபாவிகளையும், அதிகாரத்தில் இருந்து கொண்டு அராஜகம் செய்த அநீதியாளர்களையும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு அடையாளம் காட்டுகிறது.பதவியை சதமெனப் பகற்கனவுகண்டு, அறிஞர்களின் தகுதியறியாமல், அவர்களை அவமதித்தவர்கள் காலங்காலமாய்த் தூற்றுதலுக்கு ஆளாகிவிடுகின்றனர். அதனால்தான் வான்புகழ் வள்ளுவர்,

வில்லேர் உழவர் பகைகொளினும்

கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை

 என்று எச்சரிக்கிறார்.

கம்பனை அவமதித்தான் குலோத்துங்கச் சோழன். கடற்கடந்த பேரரசின் அதிபதியவனுக்கு, கவிச்சக்கரவர்த்தி ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. சோழ அரசவையிலிருந்து வெளியேறிய கம்பனிடமிருந்து வெடித்து வந்ததொரு வெண்பா.

""மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தும் உண்டோ - உண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு''

சோழனின் அரசாங்கம் சுவடின்றி அழிந்தபின்னும் சொல்லரசன் கம்பனின் வெண்பா சுடர்வீசி நிற்கிறது. செங்கோல்கள் வீழ்ந்த பிறகும், எழுதுகோல்கள் நித்தியமாய் நிற்கின்றன.அரண்மனையும், ஆடம்பர வாழ்வும், ஆணவப்போதையை அதிகம் ஊட்டும்போது, எதிரில் வருவோர் யாவரையும் ஏளனமாய்க் கருதினால், இழிவு சுமக்கநேரும் என்று எச்சரித்து உச்சரிக்கின்றன இறவாத பாடல்கள் சில.... உச்சமெனப்பட்ட அரசனின் அதிகாரத்தைத் துச்சமெனக் கருதிய தூய புலவர்கள் வரலாறுகளில்வாழ்கின்றனர்.

"நாமார்க்கும் குடியல்லோம்,

நமனை அஞ்சோம்'

- என்றார் திருநாவுக்கரசர்.

சிறு பதவிகளில் இருப்போர்கூட தங்கள் செம்மாந்த அதிகாரத்தை நிலைநாட்ட, தனக்குக் கீழுள்ளவர்களை அவமதிப்பதையும், அலைக்கழிப்பதையும் பல இடங்களில் பார்க்கமுடிகிறது.நம் அதிகாரத்தைக் காட்டி விட்டோம் என்கிற அற்ப இன்பத்தை அவர்கள் அடையலாம். ஆனால், சொல்லேருழவர்களின் சூட்டுக்கு ஆளானால், அது காலங் காலமாய் வடுவாய் நின்று வருத்தும் என்பதைமமதை மனிதர்கள் அறியத் தவறுகின்றனர்.ஒரு முறை, மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுதி முடித்த படமொன்றிற்கு ஊதியம் பெறுவதற்காக தயாரிப்பாளரைப் பார்க்கச் சென்றுள்ளார்.தருக்கும், செருக்கும் கொண்ட அந்தத் தயாரிப்பாளர், பட்டுக்கோட்டையாரை ""வெளியே நில்லுங்கள்' என்று கூறுகிறார்.... பாட்டுக்கோட்டையோ, தன்பாட்டையே சூட்டுக் கோலாக்கிச் சுடச் சுட எழுதினார்,

தாயால் பிறந்தேன், தமிழால்

அறிவுபெற்றேன்

நாயே நேற்றுன்னை நடுத்தெருவில்

சந்தித்தேன்

நீ யார் என்னை நில்லென்று சொல்ல

அதிகாரங்களுக்கு அடங்காமல், மமதையாளர்கள்முன் மயங்காமல், அறிவு நாணயத்தோடு வாழ்ந்த அறிஞர் பெருமக்கள், சிறுமை கண்ட இடங்களிலெல்லாம் சிங்கமெனப் பொங்கியுள்ளனர்.உன் அதிகாரம், ஒரு கவிதை இயற்றுமாறுஎனக்குக் கட்டளையிட முடியாது. (Your Highness cannot command me to compose a poem)  என்றான் ஓர் ஆங்கிலக் கவிஞன்.அதிகாரத்தைப் பயன்படுத்தி அநீதிகளை அரங்கேற்றுவோர், சமகாலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திலும் தூற்றப்படுவர்."அநீதி இழைக்கப்பட்டவருக்கும், இறைவனுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை' என்று எச்சரித்தார்கள் நபிகள் நாயகம். அவனது கண்ணீர் மிகு பிரார்த்தனை எத்தகைய அதிகாரங்களையும் வீழ்த்திவிட வல்லது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத

கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

அக்காலத்தில் அநியாயக்காரர்கள் மீது புலவர்கள் அறம்பாடும் வழக்கம் இருந்ததையும், அறம் பாடப்பட்டவர்கள் அழிந்தொழிந்ததையும் அறிய முடிகிறது.

அதிகாரத்தால் அராஜகம் செய்வோரின் வாழ்வு எப்படிஇருக்கும் என்பதை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்கு ஒன்று நயம்பட விளக்கும்.

""அதிகாரி வீட்டு நாய் செத்தது

அனைவரும் வந்தார்கள்

அதிகாரியே செத்தார்

ஒரு நாயும் வரவில்லை''

ஓய்வில்லா அடக்குமுறையை செலுத்தியவர்கள், ஓயும்போது நாயும் வராது என்பதற்கு இந்த நறுக்கு ஒருநல்ல சான்று.அதிகாரங்களில் பெரிய அதிகாரம் ஆட்சியதிகாரம். ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசன், மக்களை விட மேம்பட்டவன். அவன் சராசரி குடிமக்களுக்குச் சமமானவன் இல்லை என்பது உலகளாவிய அளவில் உள்ள உளப்பான்மை.அரசகுடியில் பிறந்து குடிமக்கள் காப்பியம் எழுதியபுரட்சிக்கவி இளங்கோ, ஒரு அயல்நாட்டு (சோழநாட்டு) குடிமகனுக்கு தான் அநீதி இழைத்ததை, அவன் மனைவியின் ஆவேச மிகுவாதத்திறத்தால் உணர்ந்து -

மன்பதைக் காக்கும் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுள்

என்று கூறி உயிர் துறந்ததையும், அவன் துணைவி கோப்பெருந்தேவி, "கணவனை இழந்தோர்க்குக்காட்டுவதொன்றில்' என்று கதறி, அவனோடு உயிர்விட்டதையும், காப்பியத்தில் காட்சிப்படுத்தி, ஆட்சியாளர்களுக்கு படிப்பினை தருகிறார்.இந்திய தேசத்திற்கு கலீஃபா உமரின் ஆட்சி போன்ற ஆட்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் தேசத்தந்தை அண்ணல் காந்தி.கலீஃபா உமர், எகிப்து நாட்டிற்கு அம்ருபின் ஆஸ் என்ற புகழ்பெற்ற நபித்தோழரை ஆளுநராக நியமித்திருந்தார்கள். ஒருமுறை ஆளுநரின் மகன் அதிகாரஆணவத்தோடு எகிப்து குடிமகன் ஒருவரை சாட்டையால்அடித்துவிட்டார்.அடிபட்ட எகிப்தியர், தலைநகர் மதீனா சென்று குடியரசுத் தலைவர் கலீஃபா

உமரிடம் நடந்ததை முறையிடுகிறார்.கலீஃபா உமர், ஆளுநர் அம்ருபின் ஆஸ் மற்றும் அவரது மகன் இருவரையும் தன் அவைக்கு வரவழைத்து அடிபட்ட எகிப்தியர் கையில் சாட்டையைக் கொடுத்து, ஆளுநரின் மகனை அடிக்கச் செய்தார்.ஆத்திரம் தீர அவர் அடித்து முடித்ததும், ஆளுநரிடம், "மக்களை அவர்களின் தாய்மார்கள் சுதந்திரமாகப் பெற்றெடுத்திருக்க எப்போது நீங்கள் அவர்களை அடிமைப்படுத்த ஆரம்பித்தீர்கள்' என்று சொல்லால் சுடுகணை தொடுத்தார்.பணக்காரர்களோடு மட்டும் தனித்தொடர்பு வைத்துக்கொண்டு தானும் பணக்காரத் தன்மையோடு நடந்த ஓர்ஆளுநரை தலைநகருக்குத் திரும்ப அழைத்து, வனாந்தரங்களில் ஆடுகளை மேய்த்து வருமாறு கலீஃபாஉமர் ஆணையிட்டார். ஆடு மேய்த்து பக்குவம் பெற்றதும், மீண்டும் அவரை ஆளுநராக்கினார்.இன்று எவருக்கும் பதில்சொல்ல அவசியமில்லாத எஜமானத்துவத்தோடு இருக்கும் யாவரும், மறுமையில் தனது ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய அடிமையாக இறைவன் முன் நிற்கப்போகும் நிலையை எண்ணி செயல்பட வேண்டும் என்பது இஸ்லாமின் கோட்பாடு.நபிகள் நாயகம் ஒரு பணிப்பெண்ணை ஒரு பொருள் வாங்கிவர அனுப்பினார்கள். அப்பெண்ணோ விளையாட்டுத்தனத்தால் வழியில் வேடிக்கைப் பார்த்து விட்டுவெகு தாமதமாய் வந்தாள். அவள் வரும்போது நபிகள் கையில் பல்துலக்க உதவும் மிஸ்வாக் குச்சி இருந்தது.அப்பெண்ணிடம் அண்ணல் நபி, "மறுமை நாளின் கேள்விக்கணக்கு பற்றிய அச்சம் மட்டும் இல்லாதிருப்பின், உன்னை இந்தக் குச்சியால் அடித்திருப்பேன்' என்றார்கள்.பணியாளை எஜமான் என்ன கொடுமைக்கும் உள்ளாக்கலாம் என்ற காலத்தில், பல் துலக்கும் குச்சியால் பணியாளை அடிப்பதையும் இறையச்சம் தடுக்கிறது, நபிகளுக்கு.சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ளமுதலாளிகள் சிந்திக்க வேண்டிய செய்தி இது.அபூ மஸ்வூத் என்ற தோழர், தனது பணியாளரைஅடிப்பதைக் கண்ணுற்ற நபிகள் நாயகம், "இன்று அவர்மீது உமக்கிருக்கும் ஆதிக்கத்தைவிட பன்மடங்கு ஆதிக்கம் உன்மீது இறைவனுக்கு இருக்கிறது' என்றார்கள்.இறையச்சத்தால் நடுநடுங்கிய அபூ மஸ்வூத் உடனடியாக அந்த அடிமைப் பணியாளரை விடுதலைசெய்தார்கள்...ஓங்கிய உயர்விலும் பாங்குற நடந்த பண்பாளர்களை உலகம் போற்றிகொண்டே இருக்கிறது.அதிகாரத்தில் இருக்கையில் அகங்காரத்தைக்காட்டியவர்களை அகிலம் தூற்றிக் கொண்டே இருக்கிறது.உலகம் தூற்றும் வாழ்வு வாழோம்; போற்றும் வாழ்வு வாழ்வோம்!