10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் இன்றுதொடக்கம்.

10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் இன்றுதொடக்கம்.

தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் வியாழக்கிழமை (செப்.8) தொடங்குகின்றன. காலாண்டுத் தேர்வு வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத் தேர்வுகளில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் பொதுத் தேர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் வினாக்கள் தயாரிக்கப்பட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் வினாத்தாள் அச்சிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments