SCROL

Wednesday, September 28, 2016

சென்னை உள்பட 12 மாநகராட்சி, 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை உள்பட 12 மாநகராட்சி, 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சி மற்றும் 31 மாவட்ட ஊராட்சி வார்டு களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பா ளர்களின் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17, 19-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

ஜெயலலிதா அறிவிப்பு

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய அக்டோபர் 3-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பாளர் களை தேர்வு செய்து அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.அந்த வகையில், ஆளும் கட்சியான அ.தி.மு.க. நேற்று மாநகராட்சிகள், மாவட்ட ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. அ.தி.மு.க. வேட்பாளர் கள் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள்

தமிழகத்தில் மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளும், மதுரை, கோவை மாநகராட்சிகளில் தலா 100 வார்டுகளும், திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளும், சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி மாநகராட்சிகளில் தலா 60 வார்டுகளும், நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளும், தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டு களும், திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளும் என மொத்தம் 919 வார்டுகள் உள்ளன. இந்த 919 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.இதேபோல், 31 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 630 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 109 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் பெண்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர். ஏனைய 91 வார்டுகளில் ஆண்கள் போட்டியிடுகின்றனர். வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி. யுமான நா.பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜே.சி.டி.பிரபாகர், கே.குப்பன், வி.என்.பி.வெங்கட்ராமன், கே.பி.கந்தன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி. மு.க. வெற்றி பெற்றால் இவர்களில் ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஜே.சி.டி. பிரபாகருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

8 மேயர்களுக்கு வாய்ப்பு இல்லை

தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளும் தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளன. ஆனால் தற்போது மேயராக இருப்பவர்களில் சைதை துரைசாமி (சென்னை), புவனேசுவரி (நெல்லை), அந்தோணி கிரேஸ் (தூத்துக்குடி), மருதராஜ் (திண்டுக்கல்), விசாலாட்சி (திருப்பூர்), மல்லிகா பரமசிவம் (ஈரோடு), கணபதி ராஜ்குமார் (கோவை), கார்த்தியாயினி (வேலூர்) ஆகியோருக்கு மாநகராட்சி தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.திண்டுக்கல் மாநகராட்சியில் தற்போதைய மேயர் மருதராஜுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றபோதிலும், அவருடைய மகன் வீரமார்பன், மகள் பொன்முத்து ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆனந்தன்

தஞ்சை மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா, சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன், மதுரை பொறுப்பு மேயர் திரவியம் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.த.மா.கா.வில் இருந்து விலகி முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி. மு.க.வில் இணைந்த திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் திருச்சி மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

நகராட்சி வேட்பாளர்கள்

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. அந்த பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment