திருப்பூரில் செப்.14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருப்பூரில் செப்.14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி கூறியுள்ளது:திருப்பூர் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி ஓணம் பண்டிகை முன்னிட்டுமாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்திரவிடப்படுகிறது.மேற்கூறப்பட்ட உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக செப்டம்பர் 24-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட 14-ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலகம்  மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும், என்று தெரிவித்துள்ளார்.

Comments