ஆகஸ்டு 15–ந் தேதியில் இருந்து வழங்கப்படும் சுதந்திரப்போராட்ட வீரர்கள் பென்ஷன் 20 சதவீதம் உயர்வு மத்திய மந்திரிசபை ஒப்புதல்!!

ஆகஸ்டு 15–ந் தேதியில் இருந்து வழங்கப்படும் சுதந்திரப்போராட்ட வீரர்கள் பென்ஷன் 20 சதவீதம் உயர்வு மத்திய மந்திரிசபை ஒப்புதல்!!!

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பென்ஷன் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இந்த பென்ஷன் உயர்வு, ஆகஸ்டு மாதம் 15–ந் தேதியில் இருந்து வழங்கப்படும்.பிரதமர் மோடி சுதந்திர தின பேச்சு டெல்லி செங்கோட்டையில் கடந்த மாதம் 15–ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மூவர்ணக்கொடியேற்றி சுதந்தின தின உரை ஆற்றினார்.அப்போது அவர், ''சுதந்திரப் போராட்ட வீரர்களின் பென்ஷனை 20 சதவீத அளவுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம். இதன்படி மாதம் ரூ.25 ஆயிரம் பென்ஷன் வாங்குகிறவர்கள் இனி ரூ.30 ஆயிரம் பென்ஷன் வாங்குவார்கள். இது சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது நான் கொண்டுள்ள மிகப்பெரிய மரியாதையையொட்டி செய்கிற சிறிய செயல்'' என கூறினார்.மத்திய மந்திரி சபை ஒப்புதல் இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பென்ஷன் பற்றிய பிரதமரின் சுதந்திர தின பேச்சுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டது. அதாவது, சுதந்திரப் போராட்ட வீரர்களின் பென்ஷன் உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.இது தொடர்பாக மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:சுதந்திர சைனிக் சம்மான் பென்ஷன் திட்டம், மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்தமான் அரசியல் கைதிகள் அல்லது அவர்களது மனைவியரின் மாதாந்திர பென்ஷன் ரூ.24 ஆயிரத்து 775–ல் இருந்து, ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.பிற சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வெளியே பாதிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பென்ஷன் ரூ.23 ஆயிரத்து 85 என்பது ரூ.28 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்திய தேசிய ராணுவம் உள்ளிட்ட பிற சுதந்திர போராட்ட வீரர்களின் பென்ஷன் ரூ.21 ஆயிரத்து 395–ல் இருந்து ரூ.26 ஆயிரம் ஆக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெற்றோர் அல்லது தகுதி வாய்ந்த 3 மகள்களுக்கு பென்ஷன் ரூ.3 ஆயிரத்து 380 வழங்கப்பட்டு வந்தது. அது ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.இந்த பென்ஷன் உயர்வு முன்தேதியிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.நடப்பு ஆண்டு வரையில், 1 லட்சத்து 71 ஆயிரத்து 605 சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பென்ஷன் அனுமதிக்கப்பட்டு, பெற்று வருகின்றனர்.எனவே இந்த பென்ஷன் உயர்வு சலுகையை இவர்கள் அனைவரும் பெறுவார்கள்.பிற முக்கிய முடிவுகள் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:–* பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை வியாபாரிகள் இருப்பு வைக்கும் அளவு கட்டுப்பாடுகள், மேலும் ஓராண்டுக்கு (அடுத்த ஆண்டு செப்டம்பர் 30–ந் தேதிவரை) நீட்டிக்கப்படுகிறது. விலை உயர்வை கட்டுக்குள் வைக்கவே இந்த ஏற்பாடு.* பி.எஸ்.என்.எல். நிறுவனம், கிராமப்புறங்களில் வயர்லைன் இணைப்பு சேவை வழங்கி வருவதற்கு மானியமாக யு.எஸ்.ஓ.எப். என்னும் உலளாகவிய சேவை கடமை நிதியத்தில் இருந்து ரூ.1,250 கோடி வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.* கிழக்கு இந்தியாவை தேசிய கியாஸ் குழாய் திட்டத்தின்கீழ் கொண்டு வருவதற்கு ரூ.5 ஆயிரத்து 176 கோடி நிதி வழங்க பிரதமர் மோடி தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் வழங்கியது

Comments