அஞ்சல் துறை புகார்களுக்கு ‘1924’ கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

அஞ்சல் துறை புகார்களுக்கு '1924' கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

அஞ்சல் துறை தொடர்பான புகார் களை பொதுமக்கள் பதிவு செய்ய, அழைப்புக் கட்டணமில்லாத '1924' என்ற தொலைபேசி எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா இச்சேவையை நேற்று டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, "பொதுமக்களிடம் குறை கள் கேட்கும் பிரிவை அனைத்து துறைகளும் ஏற்படுத்தவும் வலுப் படுத்தவும் வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வகையில் அஞ்சல் துறை தொடர்பாக புகார்களை ட்விட்டரில் பெறும் வகையில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி, 'ட்விட்டர் சேவா' தொடங்கினோம். தற்போது '1924' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிமுகம் செய் துள்ளோம். இச்சேவை முதல்கட்டமாக அரசு வேலைநாட்களில் காலை 8 மணி முதல் இரவு 8 வரை செயல்படும். அரசின் கொள்கை தொடர்பான புகாராக இல்லா விடில், 24 மணி நேரத்துக்குள் குறைகளுக்கு தீர்வு காணப்படும். ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் ஆகிய 3 மொழிகளில் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட அட்ட வணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இச்சேவை படிப் படியாக விரிவுபடுத்தப்படும். தினமும் சராசரியாக 100 புகார்களை ட்விட்டர் சேவையில் நாங்கள் பெறுகிறோம். இதுவரை 97 சதவீத புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகார்களைக் கையாளுவதற்காக ஒவ்வொரு அஞ்சலக வட்டார அலுவலகத் திலும் ஒருங்கிணைப்பு அதிகாரி விரைவில் நியமிக்கப்படுவார்" என்றார். 

Comments