1960 வரை உருவாகாத 10 நகரங்கள்

1960 வரை உருவாகாத 10 நகரங்கள்

நாம் இந்த உலகில் உள்ள சில முக்கியமான நகரங்களாக மதிப்பிடும் இன்றைய நகரங்களில் சில, 1960-ஆம் ஆண்டில் இருக்கவே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றுள் 10 நகரங்களைப் பற்றி இன்றைய அறிவு டோஸில் உங்களுக்கு அறியத் தருகின்றேன், படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். .

 

தென் கொரியாவில் 'இன்சியோன்' என்னும் நகரம் வட கொரியாவிற்கு சற்று அருகில் அமைந்துள்ளது. இதை கொரியா அரசு நிறுவ ஆரம்பித்து சுமார் 50 லட்சம் கோடிகளை செலவழித்துள்ளது.

சௌதியில் அப்துல்லா எனும் மன்னன், சிவப்பு கடல் அருகே ஓர் கலைநயம் மிக்க அழகிய நகரத்தை உருவாக்க 100 கோடிகளுக்குமேல் செலவழித்து வருகிறார்.

கனடா நாட்டில் பாஃபின் தீவில் உள்ள மக்கள் தங்களுக்கென்று ஓர் தனி நகரம் வேண்டும் என்று போராடி, 1999ல் தனியாக 'நுனாவுட்' என்னும் நகரத்தை உருவாக்கினர்.

சீனாவில் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்க வந்த 40,000 வேலையாட்கள் தங்குவதற்க்காக புதிதாக ஓர் நகரத்தை உருவாக்கினர்.

கோலாலம்பூரின் மக்கள் தொகை பெருகியதால், மலேசிய அரசு 'புத்ரஜெயா' எனும் நகரத்தை உருவாக்கியது.

கஜகஸ்தான் நாட்டின் விடுதலைக்குப் பிறகு பழைய தலைநகரத்திலிருந்து, 'அஸ்தானா' எனும் புதிய நகரத்தை தோற்றுவித்தனர்.

நைஜீரியா நாட்டின் விடுதலைக்குப் பிறகு, அவர்களின் பழைய இரத்த வரலாற்றை மாற்ற 10 வருட உழைப்பில் 'அபுஜா' எனும் நகரம் உருவானது.

கத்தார் நாட்டின் விடுதலைக்குப் பிறகு 'டொஹா' எனும் நகரம் உருவாகி தலைநகரம் எனும் பெயரெடுத்தது.

இந்தியாவின் மும்பை நகரின் அருகே நேவி மும்பை என்ற நகரம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது.

இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்ற பின் துபாய் எனும் நகரம் உருவாகி இன்று மிக பணக்கார நகரமாக திகழ்கிறது.

பார்த்தீர்களா நண்பர்களே, வெறும் 50 ஆண்டுகளில் மட்டுமே இந்த நகரங்கள் அனைத்தும் உருவாக்கப் பட்டு இன்று உலகில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகிவிட்டன. இதே போன்று தான் இன்று நமக்கு சிறிதாகத் தெரியும் ஓர் நகரம் இன்னும் ஒரு 40-50 வருடங்களில் எவ்வளவு பெரிதாகிவிடுகிறதோ தெரியவில்லையே

Comments