உலகைச்சுற்றி 1

உலகைச்சுற்றி

* பாகிஸ்தான் எப்போதுமே வலிமை வாய்ந்த நாடாக இருந்து வந்துள்ளதாம். இப்போது அது வெல்ல முடியாத நாடாகி உள்ளதாம். அந்த நாட்டின் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்தான் இப்படி சொல்லி இருக்கிறார்.

* மெக்சிகோ நாட்டின் வட பகுதியில் நியூட்டன் புயல் தாக்கியது. இதில் பாஜா கலிபோர்னியா சுற்றுலா தலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த மழையில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேரை காணவில்லை.

* ஏமனில் அமெரிக்கா நடத்திய 3 வான் தாக்குதல்களில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இதை அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

*அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனைவிட 2 சதவீத கூடுதல் ஆதரவு பெற்று குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முந்துவதாக சி.என்.என்., ஆர்க் கருத்துக்கணிப்பில் தெரிய வந்தது. அந்த சூடு ஆறுவதற்கு முன் அடுத்த கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. 'தி வாஷிங்டன் போஸ்ட்' ஏடு, 'சர்வே மங்கி' அமைப்புடன் இணைந்து ஆகஸ்டு 9-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ந் தேதி வரை 50 மாகாணங்களில் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில், நவம்பர் 8-ந் தேதி நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு முக்கிய மாகாணங்களில் ஹிலாரிக்கு கூடுதல் செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இருவரும் தலா 20 மாநிலங்களில் ஒருவரை விட மற்றவர் 4 சதவீத கூடுதல் வாக்குகளுடன் முன்னணியில் உள்ளனர். அதே நேரத்தில் ஹிலாரிக்கு வெற்றி பெற 277 'எலக்டோரல் காலேஜ்' ஓட்டுகள் தேவை என்ற நிலையில் அவருக்கு 244 ஓட்டுகள் கிடைத்துள்ளது. டிரம்புக்கு 126 ஓட்டுகள் தான் கிடைத்துள்ளன.

Comments