துணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் அசல் சான்றிதழ்.

துணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் அசல் சான்றிதழ்.

கடந்த ஜூன் மாதம் மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 29-ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.கடந்த ஜூன் மாதம் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள், கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.இதையடுத்து அவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் தற்போது வழங்கப்பட உள்ளது.தேர்வு எழுதிய மாணவர்கள் 29-ஆம் தேதி காலை 10 மணி முதல், அவர்கள் தேர்வு எழுதிய மையங்களுக்குச் சென்று இந்த சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.கடந்த மார்ச் மாதம் முதல் முறையாகத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாமல் ஜூன் மாதம் சிறப்புத் துணைத் தேர்வு எழுதி, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.மற்ற தேர்வர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு எழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment