SCROL

Thursday, September 29, 2016

புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் மாநில தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேர புகார் மையம்

புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் மாநில தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேர புகார் மையம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் எச்சரித்துள்ளார். விதிமீறல், முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடப்பதற்காக மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இந்தத் தேர்தல் அடுத்து வரும் தேர்தல் களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைய பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நன்னடத்தை விதிகள் முறை யாக கடைபிடிக்கப் படுகிறதா என கண்காணிக்கப் படுகிறது. விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை பெற, 24 மணி நேரமும் இயங்கும் 'புகார் மையம்' அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களும் இயங்கும். 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும், 044-2363 5011, 044- 2363 5010 ஆகிய வரவேற்பு எண்கள், 044- 2363 1014, 1024,1074 ஆகிய நிகரி (பேக்ஸ்) எண்களிலும் புகார்களை அனுப்பலாம். இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment