வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் செப். 25-ல் பள்ளிகளுக்கு இடையே அறிவியல் திறமை தேர்வு

வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் செப். 25-ல் பள்ளிகளுக்கு இடையே அறிவியல் திறமை தேர்வு

வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் பள்ளிகளுக்கு இடையே யான அறிவியல் திறமை தேர்வு 'விஸ்டோ' என்ற பெய ரில் வரும் 25-ம் தேதி நடைபெற வுள்ளது.  இது குறித்து வேலம்மாள் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  வழக்கமான சிந்தனை எல்லை களைத் தாண்டி சாகசமான கருத்துகள், புதுமையான கண்டு பிடிப்புகள், அறிவியலின் விளங்காத கேள்விகளுக்கு விடை காணுதல் ஆகியவை நமது கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகும்.  போட்டி நிறைந்த தற்போதைய கால கட்டத்தில் 'நீட்', 'ஐஐடி ஜேஇஇ' போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவோர் வாழ்க்கையில் சிறந்த நிலையை எட்டுகிறார்கள். தமிழகத்தில் 'ஐஐடி ஜேஇஇ' தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெறும் 2 சதவீதத்தினர் மட்டுமே. இதுபோன்ற தேர்வுகளில் வெற்றி பெற சிறு வயதிலிருந்தே பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு போட்டியிடும் கலையை கற்றுத்தர வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  இதனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான், கோட்டாவில் உள்ள கேரியர் பாயின்ட் கல்வி நிறுவனத்துடன் இணைந்து வேலம்மாள் போதி வளாகத்தில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.  கணிதம், இயற்பியல், வேதி யியல், உயிரியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் உள் ளார்ந்த திறனையும், தர்க்க சிந் தனையையும் அறிந்துகொள்ளும் வகையில் 'விஸ்டோ 2016 சீசன் 1' என்ற பெயரில் பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் திறமை தேர்வு நடைபெறவுள்ளது. வரும் செப்.25-ம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்வில் அனைத்து கல்வி வாரியங்களைச் சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். ஆன்-லைன் பதிவுக்கு www.vkp.co.in என்ற இணையதளத்தை காணலாம். அல்லது 7299067906 என்ற மொபைல் எண்ணை அழைக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments