தமிழகம் முழுவதும் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கும் பணியிடம்

தமிழகம் முழுவதும் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கும் பணியிடம்

தமிழகத்தில் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில், காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள், மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பியவர்களுக்கும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் வெளியிட்ட அறிவிப்பு:

பெயர்- புதிய பணியிடம் (பழைய பணியிடம்)

1. கே.சத்தியகோபால்- வருவாய் நிர்வாக ஆணையர் (சிறப்புத்திட்ட அமலாக்கத்துறை செயலர்)

2. சந்திரகாந்த் பி.காம்ப்ளே- போக்குவரத்துத்துறை செயலர் (அரசு தகவல் மைய ஆணையர்)

3. விக்ரம் கபூர்- தொழில்துறை செயலர்(சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர்)

4. சி.முனியநாதன்- கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநர் (கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநர்)

5. பி.செந்தில்குமார் - நிதித்துறை (செலவினம்) செயலர் ( சுகாதாரத்துறை சிறப்பு செயலர்)

6.வி.அமுதவல்லி - சமூக நலத்துறை இயக்குநர் (தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக்கழக முன்னாள் நிர்வாக இயக்குநர்)

7. டி.எஸ்.ஜவகர்- கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் துணை இயக்குநர்)

8. சுன்சூங்கம் ஜதக் சிரு- வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் (மத்திய வேளாண் துறை முன்னாள் இயக்குநர்)

9. ஆர்.ஜெயா- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் சிறப்பு செயலர் (மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை முன்னாள் இணைச் செயலர்)

10. ஜிதேந்திரநாத் ஸ்வைன்- நில அளவை மற்றும் ஒப்படைப்பு ஆணையர் (பொதுத்துறை முன்னாள் செயலர்)

11. கே.ஸ்கந்தன்- அண்ணா மேலாண்மை நிறுவன இயக்குநர் (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர்)

12. ஜி.லட்சுமிபிரியா- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணைச் செயலர் (நெல்லை ஒழுங்கு நடவடிக்கை முன்னாள் ஆணையர்)

13. ஆர்.லில்லி உயர் கல்வித்துறை இணைச் செயலர் (பேரிடர் மேலாண்மை இயக்குனர்)

14. ஆர்.திவ்யதர்ஷினி- உள்துறை துணைச் செயலர் (விடுமுறையில் இருந்தவர்)

15.சி.என்.மகேஸ்வரன் - வருவாய் நிர்வாகத்துறை சமூக பாதுகாப்பு திட்டங்கள் இயக்குநர் (மதுவிலக்கு ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர்)

16. ஜி.லதா - பேரிடர் மேலாண்மை ஆணையர் (கைத் தறி மற்றும் ஜவுளித்துறை முன்னாள் இயக்குநர்)

17. சந்திரசேகர் சகமுரி- பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர், சேலம் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணைச் செயலர்)

18. எஸ்.மதுமதி - உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் (தொழில்நுட்ப கல்வித்துறை இயக்குநர்)

19. எஸ்.கோபாலகிருஷ்ணன்- அரசு தகவல் மைய ஆணையர் (உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர்)

20. ஆர்.பழனிசுவாமி- மண்ணியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் (கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்)

21. வி.தட்சிணாமூர்த்தி - வேளாண்துறை இயக்குநர் (நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர்)

22. சி.விஜயராஜ்குமார்- சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் (தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர்)

23. ஆர்.வாசுகி - மாநில தொழில் மேம்பாட்டுக்கழக இயக்குநர் ( நில அளவை மற்றும் ஒப்படைப்பு ஆணையர்)

24. கே.கோபால் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் (மத்திய ஜவுளித்துறை முன்னாள் மேம்பாட்டு ஆணையர்)

25. குமார் ஜெயந்த் - தாட்கோ நிர்வாக இயக்குநர் ( தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முன்னாள் செயலர்)

26.தீரஜ்குமார் - தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் (மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முன்னாள் இணைச் செயலர்)

27. எம்.ராஜேந்திரன் - சேகோ சர்வ் நிர்வாக இயக்குநர், சேலம் (வேளாண்துறை ஆணையர்)

கூடுதல் பொறுப்பு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலரான ராஜேந்திரகுமாரிடம் எல்காட் நிர்வாக இயக்குநர் பணியும், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை செயலர் அதுல்ய மிஸ்ராவிடம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பணியும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Comments