ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் மாற்றம் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் மாற்றம் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் விண் ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந் தராதேவி நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செப்டம்பர், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் செப்டம் பர் 14, 15-ம் தேதிகளில் விண்ணப் பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

ஓணம் விடுமுறை

தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு 14-ம் தேதி அன்று சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் தங்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் பெயரை பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

தேர்வு கட்டணம்

தேர்வுக் கட்டணம், சிறப்பு அனுமதி கட்டணம், ஆன் லைன் பதிவு கட்டணம் ஆகிய கட்டணங்களை சேவை மையத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

Comments