SCROL

Wednesday, September 14, 2016

கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

கால்நடை பல்கலைக்கழகத்தில் நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப்படிப்பு வகுப்பில் சேருவதற்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை நடைபெறுகிறது. இப்பல்கலையில், இளநிலை முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூலையில் நடந்தது; முடிவில், சில இடங்கள் காலியாக இருந்தன. இப்பல்கலையுடன் இணைக்கப்பட்டகல்லுாரிகளில், இளநிலை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம், 19; கோழியின உற்பத்தி மேலாண்மை, 10; உணவுத் தொழில்நுட்பம், ஆறு; பால்வள தொழில், ஒன்பது என, 44 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான கவுன்சிலிங், சென்னை, வேப்பேரியில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லுாரியில், நாளை காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது.

No comments:

Post a Comment