இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்05 இன்று விண்ணில் பாய்கிறது

இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்05 இன்று விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டாவில் கவுன்ட்டவுன் தொடங்கியது இன்சாட்-3டிஆர் என்ற நவீன வானிலை செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்05 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத் தில் இருந்து இன்று மாலை விண் ணில் செலுத்தப்படுகிறது. இதற் கான கவுன்ட்டவுன் நேற்று காலை 11.10 மணிக்கு தொடங்கியது. அதிநவீன முறையில் வானிலை நிலவரங்களை கண்டறியும் இன்சாட்-3டிஆர் என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.2,211 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி-எஃப்05 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள இஸ்ரோவின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கான 29 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை 11.10 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4.10 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட் புறப்பட்ட 17-வது நிமிடத்தில் செயற்கைக்கோள் அதன் வட்டப்பாதையை அடை யும். அதைத் தொடர்ந்து, செயற் கைக்கோளில் உள்ள சூரிய ஒளித் தகடுகள் வேலை செய்யத் தொடங்கும். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மையத்தில் இருந்து செயற்கைக்கோள் இயக்கப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளின் மூலம் கடலோரக் காவல், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், கப்பல் போக்குவரத்து, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்கு தகவல்களை பெறமுடியும். இதன் ஆயுள் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் கடந்த ஜனவரி 2014, ஆகஸ்ட் 2015 ஆகிய ஆண்டு களில் இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நவீன வானிலை தகவல்களை அறியும் செயற்கைக்கோள், ஏற்கெ னவே கடந்த 2013 ஜூலையில் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவப் பட்டது. தற்போது ஹரிகோட் டாவில் இருந்து ஏவப்படுகிறது.

 

Comments