SCROL

Monday, September 26, 2016

பிஎஸ்எல்வி - சி35 கவுன்ட் டவுன் தொடங்கியது இன்று விண்ணில் பாய்கிறது

பிஎஸ்எல்வி - சி35 கவுன்ட் டவுன் தொடங்கியது இன்று விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக் கோள்களுடன் நாளை காலை விண்ணில் செலுத்தப்படும் பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் பயணத்துக்கான கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது. இந்திய ராக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரே பயணத்தில் இருவிதமான சுற்றுவட்டப் பாதைகளில் செயற் கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) கட்டுப் பாட்டில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ளது. இங்குள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட் நாளை (26-ம் தேதி) காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 48 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது.

பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட்டில் பருவநிலை தொடர் பான ஆய்வுக்காக 371 கிலோ எடையுள்ள 'ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக் கோள் அனுப்பப்படுகிறது. இதுதவிர அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தயாரித்துள்ள 5 செயற்கைக் கோள்கள், மும்பை ஐஐடி உருவாக்கியுள்ள 'பிரதம்', பெங்களூரு பிஇஎஸ் பல்கலைக்கழகம் உருவாக்கி யுள்ள 'பிசாட்' செயற்கைக் கோள் ஆகியவையும் அனுப்பப்படு கின்றன என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணி்ல் செலுத்தப்படவுள்ள பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்.

No comments:

Post a Comment