3,800 கிரகங்களில் உயிரினங்கள்

3,800 கிரகங்களில் உயிரினங்கள்

பூமியைத் தவிர அண்டத்தில் உள்ள பல கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா, அவற்றில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்கிற தேடல் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இதற்கான முயற்சியை எடுத்துள்ளது. வேற்றுக் கிரகவாசிகளை கண்டுபிடிப்பதற்காக ஒரு தனிப் பிரிவே செயல்பட்டு வருகிறது. அந்த பிரிவின் பெயர் எஸ்.இ.டி.ஐ. அதாவது 'சர்ச் பார் எக்ஸ்ட்ரா டெரெஸ்ட்ரியல் இண்டலிஜென்ஸ்'.

இந்தப் பிரிவு 3,800-க்கும் மேற்பட்ட கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதாக வகைப்படுத்திக் கூறியுள்ளது. அப்படிப்பட்ட கிரகங்களை குறிவைத்தே இந்த தேடல் தொடங்கியுள்ளதாக அது அறிவித்துள்ளது.

தேடலின் முதல் கட்டமாக உயிரினங்கள் உணரும் வகையில் சில ஒலிக்கூற்றுகளையும், சமிக்ஞைகளையும் அந்தக் கிரகங்களை நோக்கி அனுப்புகிறார்கள். இதனைப் புரிந்துகொண்டு அங்கிருந்து மறு தகவல்கள் வரலாம் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இதற்காக நாசா இரவு பகலாக விழிப்புடன் இருக்கிறது.

இந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை. ஒரு வேளை வேற்றுக்கிரகவாசிகள் நம்மைவிட தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறியவர்களாக இருந்து, இந்த தொடர்பின் மூலம் நமக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒன்று ஏற்பட்டால் நாமே நமது பூமிக்கு அழிவை தேடிக்கொள்வோம் என்று ஒரு சாரார் சொல்கிறார்கள்.

இதற்கு நாசா பதில் கூறியிருக்கிறது. கடந்த 400 கோடி ஆண்டுகளாக பூமியில் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுவரை எந்த வேற்றுக்கிரக உயிரினமும் நம்மை தாக்க முனையவில்லை. எனவே, இந்த பயம் தேவையற்றது என்கிறது. நமது பூமிக்கு 1977-ம் ஆண்டு வேற்றுக்கிரகத்தில் இருந்து ஒரேயொரு சிக்னல் மட்டுமே கிடைத்திருக்கிறது. அதற்கான விளக்கத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. வேற்றுக்கிரகவாசிகளின் மர்மம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு நாள் விடை கிடைக்கலாம்.

Comments