SCROL

Thursday, September 29, 2016

சடலமாக 42 வருடங்களாக டிவி முன் அமர்ந்திருந்த பெண்

சடலமாக 42 வருடங்களாக டிவி முன் அமர்ந்திருந்த பெண்

குரோஷியா நாட்டில் இருக்கும் அந்த பாழடைந்த அடுக்கு மாடிக்குடியிருப்பை அகற்றுவதற்கு அதன் உரிமையாளர் முடிவெடுத்தார். அப்போது 2008-ம் ஆண்டு நடப்பில் இருந்தது. 1966-ம் ஆண்டுக்குப் பின் அந்த குடியிருப்பில் யாரும் வசிக்கவில்லை. அதனால் அது மிகவும் சேதமடையத் துவங்கியிருந்தது. உபயோகமில்லாத கட்டிடம் என்பதால் அதனை பேய் பங்களா என்று மக்கள் அழைத்தனர்.

அந்த குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டைப் பற்றி மட்டும் தகவல் தெரியவில்லை. அதில் யார் குடியிருந்தார்கள் என்பது பற்றிய விவரமும் இல்லை. இந்த நிலையில் அந்த வீடு உள்பக்கமாக தாழிட்டு சாத்தப்பட்டிருந்தது. ஒருவேளை இது ஆவிகளின் வேலையாக இருக்குமோ என்று அந்த உரிமையாளர் பயந்தார். அதனால் காவல் துறையின் துணையோடு அந்த வீட்டை திறக்க முடிவு செய்தார். போலீசுக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

உள்ளே அவர்கள் கண்ட காட்சி எல்லோரையும் உறைய வைத்து விட்டது. அங்கு ஒரு அறையில் தொலைக்காட்சி பெட்டி இருந்தது. அதன் எதிரே உள்ள சோபாவில் டி.வி.யை பார்த்தபடி ஒரு பெண்ணின் பிணம் அமர்ந்திருந்தது. அதற்கு எதிரே இருந்த சிறிய மேஜையில் எப்போதோ போடப்பட்ட காபியும் இருந்தது. அந்த சடலம் அழுகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.

உடனே காவல்துறை சுறுசுறுப்படைந்தது. அந்தப் பெண்ணைப்பற்றிய தகவலை சேகரிக்கத் தொடங்கியது. அந்தப் பெண்ணின் பெயர் ஹெட்விகா கோலிக் என்பது தெரியவந்தது. 1924-ல் பிறந்த இவரை 1966க்குப் பின் யாருமே பார்க்கவில்லை. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் இவர் வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ சென்று விட்டதாகவே நினைத்தார்கள். காலப்போக்கில் அனைவரும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பை விட்டு காலி செய்து போய்விட்டார்கள்.

கிட்டத்தட்ட 42 வருடங்களாக கருப்பு வெள்ளை டி.வி. முன் காபியுடன் அமர்ந்து ஏதோ ஒரு காரணத்தினால் இறந்துபோன அந்தப் பெண்ணை யாரும் தேடவில்லை என்பதும் அவர் வீட்டைத் தேடி யாருமே வரவில்லை என்பதும் வியப்பான சம்பவமே.

No comments:

Post a Comment