ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி

ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி

முதல்வர் அறிவித்த, பி.எஸ்சி., பி.எட்., நான்கு ஆண்டுகள்ஒருங்கிணைந்த படிப்புக்கு, நான்கு கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்தோர் நேரடியாக, நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த, பி.எஸ்சி., பி.எட்., ஆசிரியர் படிப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் சட்ட சபையில் வெளியிட்டார்.இந்த படிப்புக்கு, முதற் கட்டமாக, நான்கு கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.தர்மபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியில் உள்ள, டி.என்.சி.மணிவண்ணன் கல்லுாரி; ராசிபுரத்தில், ஞானமணி ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லுாரி; திண்டுக்கல் ஸ்ரீசாய் பாரத் கல்லுாரி மற்றும் செஞ்சியில் உள்ள, ஸ்ரீ ரங்கபூபதி கலை, அறிவியல் கல்லுாரி என, நான்கு கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி அளித்துள்ளது

Comments