SCROL

Sunday, September 25, 2016

குரூப் 4 தேர்வுக்கு பெருங்குடியில் இலவச பயிற்சி

குரூப் 4 தேர்வுக்கு பெருங்குடியில் இலவச பயிற்சி

பெருங்குடியில் நாளை முதல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, வரும் நவம்பர் 6-ம் தேதி நடக்கி றது. 5451 பணியிடங்களுக்கு நடை பெறும் இந்த தேர்வுக்கு சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக பல்வேறு அமைப்புகள் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன.

அந்த வகையில் நீர்வழி அமைப்பின் சார்பிலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. தேர்வு நடக்கும் நவம்பர் 6-ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடக்கும்.

எண். 291, 4-வது பிரதான சாலை, பர்மா காலனி, பெருங்குடி, சென்னை-96 என்ற முகவரியில் நடைபெறும் இந்த இலவச வகுப்பில் சேர விரும்பும் தேர்வர்கள் 9444453588, 8056176788, 9489309947, 9840089865, 9884069547 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என நீர்வழி அமைப்பு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment