கும்பகோணத்தில் 57 ஆண்டுகளாக இயங்குகிறது தமிழ் நூல்களுக்காக உருவான ‘சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம்’ பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் அரிய நூல்கள்

கும்பகோணத்தில் 57 ஆண்டுகளாக இயங்குகிறது  தமிழ் நூல்களுக்காக உருவான 'சிவகுருநாதன் செந்தமிழ் நூலகம்பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் அரிய நூல்கள்

மக்கள் அனைவரும் தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காக தமிழ் நூல்களைப் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 1959-ல் தொடங்கப்பட்ட சிவகுருநாதன் செந் தமிழ் நூல் நிலையம். இன்றும் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று திகழ்கிறது.  1947-ல் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் அறங்காவலராகப் பணி யாற்றிக் கொண்டிருக்கும்போது தேர்த்திருவிழா ஏற்பாட்டுக்காக ஜி.எஸ்.சாமிநாதன் செட்டியார் தருமபுரம் ஆதீனத்துக்குச் சென் றுள்ளார். அப்போது அங்கு, 'ஞான சம்பந்தம் நூல் நிலையம்' அமைக் கப்பட்டிருந்த விதம் அவரைக் கவர்ந்தது. அந்த நேரமே அவரு டைய மனதில் தாத்தா கோபுசிவகுரு நாதன் செட்டியார் பெயரில் நூல் நிலையம் அமைக்கும் எண்ணம் உருவானது. இதையடுத்து 1959-ல் பேட்டை நாணயக்காரத் தெருவில் சிவகுரு நாதன் செந்தமிழ் நூல் நிலை யத்தை தொடங்கினார். 5 ஆயிரம் சதுரஅடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல் நிலையத்தில் 35 ஆயிரம் நூல்கள் உள்ளன. இவை அனைத் தும் தமிழ் நூல்களாகும். இந்த நூலகத்துக்கு புத்தகங் களை வாசிக்க வரும் வாசகர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. வியாழக்கிழமைதோறும் வார விடுமுறை. காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை படிக்க வசதி செய்யப்பட்டது. இந்த நூலகத்தில் தமிழ் இலக்கியம், அறிவியல், வரலாற்றுப் புத்தகங்கள் அதிகம் உள்ளன. குறிப்பிடும்படியாக, 1956-ல் பிரசுரமான நாடிஜோதிடம் ஒவ் வொரு லக்னத்துக்கும் தனித்தனி தொகுதி புத்தகங்களாக உள்ளன. இவை ஒவ்வொன்றும் 2 ஆயிரம் பக்கங்களுக்குக் குறைவில்லாமல் இருக்கின்றன. அதேபோல 1800- 1900 கால தமிழ் இலக்கியம், 1930-ல் பிரசுரிக்கப்பட்ட மாணிக்க வாசகனார் வரலாறு, 1932-ல் பிரசுரமான சேதுபுராணம், 1949-ல் பிரசுரமான தமிழர் பண்பாடு, 1910 முதல் 2016 வரையிலான மருத்து வக்குடி பஞ்சாங்கம் உள்ளிட்ட பல புத்தகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நூலகத்தின் செயலாளரும் சென்னை பச்சையப்பன் கல்லூரி யின் முன்னாள் பேராசிரியருமான ராம.குருநாதன் கூறியபோது, "இந்த நூலகத்தில் உள்ள பல அரிய நூல் களை நாங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறோம். இங்குள்ள நூல்களைத் தற்போது டிஜிட்டல் முறைக்கு மாற்றி வருகிறோம். நூலகத்தை நிறுவிய சாமிநாதன் செட்டியாரின் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் கொண் டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக நூலகத்தை விரிவு படுத்த உள்ளோம். தலைமுறை யைத் கடந்தும் இந்த நூலகம் தமிழுக்காகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது" என்றார். இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கண்காணிப் பாளரும், முனைவருமான பி. ஜம்பு லிங்கம் கூறியபோது, "நான் கும்பகோணத்தில் படித்த காலம் தொடங்கி கடந்த 40 ஆண்டுகால மாக இந்நூலகத்தின் வாசகனாக இருக்கிறேன். என்னைப் போன்று பல தமிழ் பேராசிரியர்களையும், ஆர்வலர்களையும் இந்த நூலகம் உருவாக்கியுள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் பலர் வாரந்தோறும் நூலகம் வந்து குறிப்பெடுக்கும் அளவுக்கு இன்றும் சிறப்பாக இயங்கி வருகிறது" என்றார். நூலகத்தின் தலைவர் சீ.தயாளன் கூறியபோது, "எங்கள் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட இந்த நூலகம் தமிழுக்காகவே இன் றும் இயங்கி வருகிறது. வீடுகளில் நூல்களைப் பாதுகாக்க முடி யாதவர்கள் எங்களிடம் இலவசமாக அவற்றைக் கொடுத்து விடுவார்கள். நாங்கள் அவற்றைப் பெருமையுடன் பாதுகாத்து வருகிறோம். முன்பெல் லாம் தமிழ் நூல்களைப் படிக்க ஏராளமான வாசகர்கள் வந்து சென்ற னர். இப்போது அந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. தமிழின் பெருமையை அறிந்து கொள்ள இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும்" என்றார். 

Comments