மத்திய நிறுவனத்தில் 644 வேலை வாய்ப்பு

மத்திய நிறுவனத்தில் 644 வேலை வாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் 644 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:-

மத்திய பண்டகசாலை கழக நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். மினி ரத்னா அந்தஸ்து பெற்ற இந்த நிறுவனம் நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. உணவுப்பொருட்கள் பாதுகாப்பு கிடங்குகளை நிர்வகித்தல், உணவுப் பொருட்களை வினியோகித்தல், விதைகளுக்கான தானியங்களை சேமித்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறது.

இந்த நிறுவனத்தில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி, அசிஸ்டன்ட் என்ஜினீயர், அக்கவுண்டன்ட், ஜூனியர் சூப்பிரண்டன்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஸ்டெனோ கிராபர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 644 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 300 இடங்களும், ஜூனியர் சூப்பிரண்டன்ட் பணிக்கு 130 இடங்களும் உள்ளன. அந்தந்த பணிக்கான காலியிடங்கள் எண்ணிக்கையை இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு:

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. சராசரியாக 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. அந்தந்த பணிகளுக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி:

எம்.பி.ஏ., அக்ரிகல்சர், சிவில் என்ஜினீயரிங், பி.காம், பி.ஏ.(காமர்ஸ்), உயிரியல் மற்றும் இதர பிரிவுகளில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. மெட்ரிக் தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் குறிப்பெடுக்கவும் தட்டச்சு செய்யவும் தெரிந்தவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல், திறமைத் தேர்வு ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் போன்றவர்களுக்கு இந்த கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். முன்னதாக புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க தொடங்கவும். 13-10-2016-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும்.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.cewarcor.nic.in, www.cwcjobs.com ஆகிய இணையதள பக்கங்களைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment